நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 12, 2019

சித்திரைத் திருவிழா 2

மாமதுரைத் திருவிழாவின் திருக்காட்சிகள்
அம்மையப்பனின் திருவருளால்
தொடர்கின்றன!..

பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாமல்
காட்சிகளை வலையேற்றும் 
நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***

மூன்றாம் திருநாள் (10/4/2019)
காலை
தங்கச் சப்பரம் மூன்றாம் (10/4) திருநாள்
மாலை
கயிலாய வாகனம் - காமதேனு வாகனம்..


நீற்று மேனியர் ஆயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெயத் திரு உள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்..

ஞால நின்புகழேமிக வேண்டுந்தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே..(3/108)
-: திருஞான சம்பந்தர் :-  
***

நான்காம் (11/4) திருநாள்
தங்கப் பல்லக்கு 
 வில்லாபுரம் பாவைக்காய் மண்டபத்திற்கு
எழுந்தருளி  - மாலை திரும்புதல்..


 

செய்ய நின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத்தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.. (4/62)
-: திருநாவுக்கரசர் :-


நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித்தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தின் உள்ளே நின்று
கடுங்குரலாய் இடிப்பானை கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென் கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே... (6/19)
-: திருநாவுக்கரசர் :-

ஆடக மதுரைக்கு அரசே போற்றி
அங்கயற் கண் அம்பிகையே போற்றி.. போற்றி.. 
ஃஃஃ 

20 கருத்துகள்:

 1. அன்னை மீனாட்சி என்ன ஒரு கருணை உனக்கு. ஏங்கும் உள்ளத்தைத்
  தேடி வந்து தரிசனம் தருகிறாய்.
  எத்தனை அழகு அம்மையும் அப்பனும்.
  அத்தனை படங்களும் கனிவையும் கருணையும் வழங்குகின்றன.
  மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றன.

  அனுப்பிய அன்பர்களுக்கு என் வணக்கங்கள். வந்தனங்கள்.
  பதிவிட்ட துரைக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல்வரவு...

   மீனலோசனி மிகவும் இளகிய மனதுடையவள்...
   நாடும் மனங்களைத் தேடி வருபவள்...

   திருவிழாப்படங்களை வலையேற்றிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சித்திரைத் திருவிழா, உங்களோடு பயணிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது உடன் வருகை எனக்கும் மகிழ்ச்சியே..

   வாழ்க நலம்...

   நீக்கு
 3. படங்களின் தரிசனம் பெற்றேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. படங்களை ரசித்தேன்...

  அப்போதே 'அமணர்கள்', சைவ சமயத்தின் வீச்சைக் குறைக்கவந்தபோது வாது செய்து சமயத்தை மீட்டெடுத்ததை பதிகங்களில் காண முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   இன்றைய சூழலுக்காகவே இந்தத் திருப்பாடலை முன்னெடுத்தேன்...

   திருநீறு தரித்தவர் மேல்பட்ட காற்று கூட தம்மீது படக்கூடாது என்றிருந்திருக்கின்றனர் - அன்றைய அமணர்கள்...

   இவற்றையெல்லாம் மன்னவனாகிய அவன் முறை செய்யாததால் தான்
   சம்பந்தர் வந்து தங்கிய குடிலுக்குத் தீயை வைத்தனர்..

   அந்தத் தீ தான் முறை செய்து மக்களைக் காக்கத் தவறிய
   பாண்டியனை பையச் சென்று பற்றியது...

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. படங்கள் எல்லாம் மிக அருமை.
  தேவார பதிகமும் படித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. படங்கள் அனைத்தும் அழகு.... இரண்டாம் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. சிறப்பான அலங்காரம்... அருமை ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அழகான படங்கள்! துரை அண்ணா தரிசனம் பெற்றோம். அம்மன் அழ்கு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. இக்காலத்தில் சைவ வைணவ வேறுபாடுகள் மிகவும் குறைந்து இருப்பதை உணர முடிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா அவர்களது கருத்து மகத்தான உண்மை....

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி....

   நீக்கு
 10. அழகான படங்கள். வாட்சப்பிலும் உறவினர்கள் அனுப்புகின்றனர். வீடியோக் காட்சியாகக் கூட வருகின்றன. இவை திருவிழாவை நேரில் பார்க்க முடியாமல் போனதைக் கொஞ்சம்சமன் செய்து விடுகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..