சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி - என்பன அவை..
இவற்றுள், அஞ்சனாத்ரி எனும் திருமலையில் தான் -
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது...
ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருப்பெயர்களுள் சிறப்பானது -
அஞ்சனையின் நேயன் எனும் பொருள்படும் ஆஞ்சநேயன் என்பது தான்..
ஏனெனில், ஆஞ்சநேயரின் தாய் - அஞ்சனை..
அன்னை அஞ்சனையின் அன்பினில் கட்டுண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
அவர்கள் -
பெரிய திருவடி - ஸ்ரீ கருடன்..
சிறிய திருவடி - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
திவ்ய தேசங்களின் சிறப்பான வைபவங்கள்
ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெறும்...
அதிலும் ஸ்ரீராமாயணப் பிரவசனம் நிகழும் இடங்களில்
ஸ்ரீ ஆஞ்சநேயர் ப்ரசன்னமாகி இருப்பார் என்பது ஐதீகம்...
ஸ்ரீ ராம - எனும் மந்திர உபாசனை -
ஆஞ்சநேயரை மகிழ்விக்கும் என்பர் ஆன்றோர்..
ஸ்ரீராமகாதையில் சொல்லின் செல்வர் எனப் புகழப்படுபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்...
மகாபாரதத்திலும் பேசப்படுபவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
திரௌபதி விரும்பிக் கேட்ட சௌகந்தி மலரை இமயமலைச் சாரலில் இருந்து பறித்து வருவதற்காக பீமன் பயணிக்கும் போது
அவனுடன் தர்க்கம் செய்து அவன் பலத்தை அவனுக்கு உணர்த்தியதுடன் -
தன்னையும் காட்டுவித்து தடுத்தாட்கொண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
அருச்சுனனின் தேர்க்கொடியில் திகழ்ந்தவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
ஸ்ரீ ஹரிபரந்தாமன் கீதோபதேசம் செய்தபோது -
அதனை உடனிருந்து கேட்ட பெருமைக்குரியவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..
பாரதம் எங்கும் ஆஞ்சநேயருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள்...
அதிலும் குறிப்பாக - சிவாலயங்களில் விளங்கும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் நூற்றுக் கணக்கில்..
ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்களும் பற்பல..
குறிப்பாக -
தஞ்சை மாவட்டத்தில் முத்துப்பேட்டைக்கு அருகில் கோயிலூர் எனப்படும் திரு உசாத்தானம்..
நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவன்
பேருடைச் சுக்ரீவன் அனுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத்தானமே.. (3/33)
- என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு..
தவிரவும், மயிலாடுதுறைக்கு அருகில் திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்) மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்..
கும்பகோணத்திற்கு அருகில் தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)..
சென்னையில் திருவலிதாயம் (பாடி) மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய திருத்தலங்கள் குறிப்பிடத்தக்கவை..
![]() |
| ஸ்ரீ ராமேஸ்வரம் |
மூலஸ்தானத்தின் தென்புறமாக நூற்றெட்டு லிங்கங்களுள் ஒன்றான
ஸ்ரீ அனும லிங்கம் தனிக்கோயிலில் திகழ்கின்றது..
தஞ்சை நகருக்குள் மட்டும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன..
| ஸ்ரீ மூலை ஹனுமான் - தஞ்சை |
சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில் பேருருவாக விளங்கும்
ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரசித்தி பெற்றவர்..
அவ்வாறே - நாமக்கல் மலையில் சிறப்புடன் திகழ்கின்றார்...
![]() |
| ஸ்ரீ அனுமன் - நாமக்கல் |
![]() |
| திருமலை |
![]() |
| ஸ்ரீரங்கம் |
![]() |
| ஸ்ரீ ஆராவமுதன் - குடந்தை |
![]() |
| ஸ்ரீராஜகோபாலன் - மன்னார்குடி |
![]() |
| ஸ்ரீராமன் - வடுவூர் |
ஆஞ்சநேயரின் பெருமையை முழுதுமாகச் சொல்வது என்பது எளிதல்ல...
புரட்டாசி மாதத்தில் -
திருவேங்கடம், கள்ளழகர் கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருஅரங்கம் -
என, தரிசனம்..
புரட்டாசியின் நிறைவு நாளாகிய இன்று
சிறிய திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் தரிசனம்..
புரட்டாசி மாதத்தில் -
திருவேங்கடம், கள்ளழகர் கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருஅரங்கம் -
என, தரிசனம்..
புரட்டாசியின் நிறைவு நாளாகிய இன்று
சிறிய திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் தரிசனம்..
கஞ்சனூர்.
இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி
அம்பிகை - ஸ்ரீ கற்பகாம்பிகை
தல விருட்சம் - பலாச மரம் (புரசு)
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
அப்பர் பெருமான் தரிசித்து இன்புற்ற திருத்தலம்..
குடந்தையிலிருந்து 18 கி.மீ தொலைவு..
சூரியனார் கோயிலிலிருந்து 3 கி.மீ.. தொலைவு..
இன்றைய பதிவில் -
கஞ்சனூர் சிவாலயத்தில் குடிகொண்டுள்ள
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்குபுரட்டாசி கடைசி சனிக்கிழமையை
முன்னிட்டு யாகசாலை வேள்வியுடன் நிகழ்ந்த அபிஷேக தரிசனம்..
சந்தனக்காப்பு அலங்காரமும் ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடந்துள்ளன..
நிகழ்வின் படங்களை வழங்கியவர் திரு கணேசன் குருக்கள்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...
![]() |
| ஊஞ்சல் வைபவம் |
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கணடு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்..
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகள் போற்றி...
* * *
















