நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 08, 2026

மார்கழி 24

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 24

குறளமுதம்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.. 394

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றடச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.. 24
**

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.. 14

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருமழபாடி

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.. 7/24/1

நன்றி
பன்னிரு திருமுறை
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. மார்கழி 24 ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆதி அந்தம் இல்லாத அருட்பெரும்சோதியாம் சிதம்பரநாதரை பாடிப் பணிந்தேத்துவோம்.

    பதிலளிநீக்கு
  3. குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், ஞாலம் அளந்த பிரான்பரன் தாள் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், தாள் பணிவோம்

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும். முதல் படம் மிகவும் ரசிக்க முடிந்தது. இரண்டாவது படம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. பாடல்கள்பாடி வணங்கினோம்.

    "அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.. ..." அவன் பாதம் சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..