நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 30, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
மூன்றாம் வெள்ளி

ஸ்ரீ வீரமாகாளி
அன்னையின் தரிசனம்






**

இன்று 
காந்திஜி நினைவு தினம்

ஓம் சக்தி ஓம்
***

செவ்வாய், ஜனவரி 27, 2026

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
செவ்வாய்க்கிழமை
தை கார்த்திகை


திருப்புகழ்
திருப்பரங்குன்றம்

தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
     தனத்தனந் தந்தன ... தந்ததான

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
     பிணக்கிடுஞ் சண்டிகள் ... வஞ்சமாதர்

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
     முருக்குவண் செந்துவர் ... தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
     அறச்சிவந் தங்கையில் ... அன்புமேவும்

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
     அருட்பதம் பங்கயம் ... அன்புறாதோ

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
     விதித்தெணுங் கும்பிடு ... கந்தவேளே

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
     மிசைக்கிடுஞ் செந்தமிழ் ... அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
     திறற்செழுஞ் சந்தகில் ... துன்றிநீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
     திருப்பரங் குன்றுறை ... தம்பிரானே..
 - அருணகிரிநாதர் -

 நன்றி
கௌமாரம்

வேல் வேல்
வெற்றி வேல்

ஓம் நம சிவாய
***

திங்கள், ஜனவரி 26, 2026

குடியரசு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
திங்கட்கிழமை

இன்று
குடியரசு தினம்



அன்பின் நல்வாழ்த்துகள்

வேல் வெற்றிவேல்

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்
***

வெள்ளி, ஜனவரி 23, 2026

திருப்புகழ்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
இரண்டாம் வெள்ளி

திருப்புகழ்

உத்திரமேரூர்


தானனத் தனதான தானனத் தனதான
     தானனத் தனதான ... தனதான

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
     நேசமுற் றடியேனு .... நெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
     நீதியிற் சிவவாழ்வை ... நினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
     பாடலுற் றிடவேசெய் ... திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
     பார்வைசற் றருளோடு ... பணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
     மாகமப் பொருளோரு ... மனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
     மாயிரத் திருநூறு ... மறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
     வாகுசித் திரதோகை ... மயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
     மான்மகட் குளனான ... பெருமாளே..
- அருணகிரிநாதர் -

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஜனவரி 20, 2026

பிப்ரவரி 26


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
செவ்வாய்க்கிழமை


2026..

இவ்வருடத்தின்  பிப்ரவரி மாதம் அடுத்த சில தினங்களில்...

பிப்ரவரி மாதம் 
ஞாயிறன்று தொடங்கி சனிக்கிழமையன்று நிறைவு  பெறுகின்றது..

என்ன ஆச்சர்யம் என்றால் இருபத்தெட்டு நாள்களில் ஒவ்வொரு கிழமையும் நான்கு  முறை அமைகின்றது..  

ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...

நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி  அமைந்திருக்கின்றது...

பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்...  (வாட்ஸாப் சொல்கின்றது)

இனி இப்படி அமைவதை எப்போது காண்போமோ!!...

வாழ்க நலம்
**

திங்கள், ஜனவரி 19, 2026

ஆராதனை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 5 
திங்கட்கிழமை


மார்கழி 23 புதன் கிழமை (7/1/26) அன்று திரு ஐயாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு (பகுள பஞ்சமி) ஆராதனை...

நிகழ்வு நாளின் 
மதியப் பொழுதில் சென்றேன்... 

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு அருகில் காவிரியாள் மெல்ல சலசலத்துக் கொண்டிருந்தாள்..

கடுங்கூட்டம் என்று இல்லை... இருப்பினும் ஆயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்தனர்..

அடுத்தடுத்து இசைக் கலைஞர்கள் ஸ்வாமிகளுக்கு கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டிருந்தனர்...

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் மலரஞ்சலி செய்தேன்...

ஸ்வாமிகளது அதிஷ்டானத்திற்கு சற்று முன்பாக ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரின் அதிஷ்டானம் உள்ளது.. 

இங்கே தரிசனம் செய்வதற்குத் தோன்றவில்லை...

ஆராதனை நிறைவுற்ற மறுநாள் தான் ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொண்டேன்... 

ஸ்ரீ வேங்கட ரமண பாகவதர் சௌராஷ்டிர சமூகத்தைச் சார்ந்தவர்...

ஸ்வாமிகள் பாடிய கீர்த்தனைகளை அவ்வப்போது எழுதி வைத்தவர் இவர் தான்...

ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரின் 
அதிஷ்டானத்தில் தரிசனம் செய்யாததற்கு மிகவும் வருந்துகின்றேன்..


சற்று நேரம் இசையரங்கின் நாத வெள்ளத்தில் திளைத்து விட்டு முன்னிரவுப் பொழுதில் இல்லம் திரும்பிய வேளையில் - 

அடுத்த பகுள பஞ்சமி நாளை நினைத்து மனம் ஏங்கியது..


















படங்கள் : தஞ்சையம்பதி

ஸ்ரீ ராம ராம
ஜெய ராம ராம
***

ஞாயிறு, ஜனவரி 18, 2026

உடையாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை நான்காம் நாள்
தை அமாவாசை

அபிராமி அந்தாதி உதித்த நாள்

ஸ்ரீ கோமதி சிவசங்கரி

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே.. 1 

மனிதரும்  தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினிவாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!.. 84

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப்
(அங்கையில்) பாசங்குசமும் கருப்பு(வில்லு)ம்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே..
**

ஓம் சக்தி ஓம்
***

சனி, ஜனவரி 17, 2026

கன்னியர் வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை மூன்றாம் நாள்
காணும் பொங்கல்

நன்றி
வெங்கடேஷ் ஆறுமுகம்





பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!...
**
2023ல் பதிவிடப்பட்ட கவிதை

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**

வெள்ளி, ஜனவரி 16, 2026

ஆநிரை வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை இரண்டாம் நாள் 
மாட்டுப் பொங்கல் 

 நன்றி
வெங்கடேஷ் ஆறுமுகம்

ஆநிரை வாழ்க






பட்டி எங்கும் பெருகட்டும்
பால் பசுவும் வாழட்டும்..
நிலம் எல்லாம் செழிக்கட்டும்
நெற்கட்டும் நிறையட்டும்..
பவளமணி குவியட்டும்
பால் சோறு பொங்கட்டும்..

மங்கலமாய்த் திசை எட்டும்
மங்கை மனம் வாழட்டும்..
தங்க வளை பேசட்டும்
தர்மங்கள் சூழட்டும்
தன்னுயிராய் மன்னுயிரைத் 
தாங்குபவர் வாழட்டும்..

படுபிணியும் கொடுவினையும் 
பாதையோடு போகட்டும்..
பாதகமும் பாழ்குணமும்
பாதையின்றித் தொலையட்டும்!..
தமிழமுதம் பொங்கட்டும்
தமிழகமும் வாழட்டும்!..
**
2023 ல்
பதிவிடப் பெற்ற கவிதை


அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**

வியாழன், ஜனவரி 15, 2026

தைப் பொங்கல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை முதல் நாள்

மகர சங்கராந்தி
ஸ்ரீ சூர்யன் மகரராசியில்
பிரவேசிக்கின்ற நாள்

தைத்திருநாள்
தைப்பொங்கல்





அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**

புதன், ஜனவரி 14, 2026

மார்கழி 30


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 30
போகிப்பண்டிகை

குறளமுதம்

 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.. 400

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.. 30

ஆண்டாள் திருவடிகளே சரணம்
*
ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த 
திருவெம்பாவை


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.. 20

மாணிக்க வாசகர் திருவடிகளே போற்றி

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருக்காளத்தி


செண்டா டும்விடையாய் சிவ
னேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண
நாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.. 7/26/1

சுந்தரர்  திருவடிகளே போற்றி

நன்றி
பன்னிரு திருமுறை

அனைவருக்கும் 
 நன்றி நன்றி
நெஞ்சார்ந்த நன்றி..

நாளை
திருப்பொங்கல்

அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம  சிவாய
***