நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 12
 வெள்ளிக்கிழமை
இன்றைய 
திருப்புகழ்
தில தர்ப்பணபுரி
திலதைப்பதி
 இறைவன் 
ஸ்ரீ முத்தீஸ்வரர்
அம்பிகை 
ஸ்ரீ ஸ்வர்ணவல்லி
தலவிருட்சம் மந்தாரை
தீர்த்தம் சூரிய தீர்த்தம் அரசிலாறு
திருஞானசம்பந்தர் திருப்பதிகம் 
அருளிச்செய்த திருத்தலம்..
இந்தத் திருத்தலம் 
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில், 
பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ., 
தொலைவில் அமைந்துள்ளது..
தனனத் தனனா ... தனதான
இறையத் தனையோ ... அதுதானும்
இலையிட் டுணலேய் ... தருகாலம்
அறையிற் பெரிதா .. . மலமாயை
அலையப் படுமா ... றினியாமோ..
மறையத் தனைமா ... சிறைச்சாலை
வழியுத் துயர்வா ... னுறுதேவர்
சிறையைத் தவிரா ... விடும்வேலா
திலதைப் பதிவாழ் .... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 ஒருவருக்கு சிறிதளவாவது
உணவு இலையில்  இட்டபின்
உண்ணுதல் எனும் அறநெறி இன்றி
ஏய்த்துத் திரிந்திருந்த காலம்
அதைப் பற்றிச் சொல்வதானால் 
அந்த நெறியை விட்டிருந்த காலம்தான் 
மிகப் பெரியது.
மும்மல மாயையிலும் அலைந்து 
திரிந்த எனக்கு இத் தீயநெறி -  
இனியும் அமையுமோ..
 வேதம் கற்ற பிரம்மனை  
சிறைச்சாலைக்கு அனுப்பி
வைத்தவனே..
 (அசுரர்களால் அடைபட்ட)
தேவர்களின் சிறையை 
நீக்கி அருள் புரிந்த வேலவனே..
திலதைப்பதி என்னும்
திருத்தலத்தில் 
வாழ்கின்ற பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***


.jpeg)
நல்லதொரு பாடல் பகிர்வு. சிவனைப் போற்றுவோம். முருகனைப் பணிவோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
முருகா சரணம்...
பதிலளிநீக்குசுரினாம் சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
பூந்தோட்டத்தில் இருந்து கருவிலி சுமார் 15 கிமீட்டருக்குள். அங்கேயும் சென்றூ வாருங்கள். அப்பர் ஸ்வாமிகளால் பாடல் பெற்ற தலம்.
பதிலளிநீக்குஆமாம்.. திருவீழிமிழலையும் அருகில் தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரமும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா..
முத்தீஸ்வரர் கோவில் போய் இருக்கிறேன், ஆதி விநாயகர் இருக்கும் ஊர்.
பதிலளிநீக்குதிருப்புகழை பாடி வணங்கி கொண்டேன். கால் வலிக்கு மருத்துவரை பார்த்து வர போனேன். திலதைப்பதி வினைகளை போக்க வேண்டும்.
///திலதைப்பதி அனைவரது வினைகளையும் போக்க வேண்டும்.. ///
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..