நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 01, 2023

திருக்காளத்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
வெள்ளிக்கிழமை

இன்றைய
திருப்புகழ்
திருக்காளத்தி


தனத்தா தத்தத் ... தனதான 
தனத்தா தத்தத் ... தனதான
 
சிரத்தா னத்திற் ... பணியாதே 
செகத்தோர் பற்றைக் ... குறியாதே

வருத்தா மற்றொப் ... பிலதான 
மலர்த்தாள் வைத்தெத் ... தனையாள்வாய்..

நிருத்தா கர்த்தத் ... துவநேசா 
நினைத்தார் சித்தத் ... துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ... கருள்வோனே 
திருக்கா ளத்திப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


தலை வணங்கி  உன்னைப்
பணியாமல் இருக்கும் யான்  -
உலகின் பந்த பாசங்களில்
மனம் வைத்து வருந்தி விடாமல் 

நிகர் வேறு இல்லாத மலர் போன்ற 
உனது மலரடிகளில் சேர்த்து
ஏமாற்றுக்காரனாகிய என்னையும் 
ஆண்டருள்வாயாக..

(ஈசனைப் போல) நடனம் ஆட வல்லவனே..
சகல  காரியங்களுக்கும் காரண கர்த்தனே..
(அன்பர் தமக்கு) பிரியமானவனே..

 நெஞ்சார நினைப்பவரது
சித்தத்தில் வீற்றிருப்பவனே..

ஜீவன் முக்தரான அடியவர் தமக்கு 
திருவடிப் பேற்றினைத் தந்தருள்பவனே..

திருக்காளத்தியில் 
உறைகின்ற பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா..
***


ஓம் சக்தி சக்தி ஓம்
***

7 கருத்துகள்:

 1. அருமையான காணொளி.  சந்தோஷமாக இருந்தது.  எதையும் உச்சரிக்கும் வகையில் உச்சரித்தால் சக்தி, மதிப்பு.  சுக்குமி, ளகுதி, பிலி என்று படிப்பவர்களே நம்மில் அதிகம்.  நானும் அப்படிதான்.

  பதிலளிநீக்கு
 2. முருகா முருகா

  காணொளி கண்டேன் பிரமித்து கேட்டு சிலிர்த்தது ஜி

  பதிலளிநீக்கு
 3. திருகாளத்தி திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
  நீங்கள் பகிர்ந்த காணொளி எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்தது.
  அருமையான விளக்கம் தந்தார்கள். நல்ல குரல் வளம் அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான காணொளி. மிக்க நன்றி. நம் வழிபாடுமுறைக ளை பிறர் அதில் உள்ள சிறப்பைச் சொல்லும்போது நமக்கு வெட்கம் வருவதும் பெருமிதம் கொள்வதும் தவிர்க்க இயலாது

  பதிலளிநீக்கு
 5. திருக்காளத்தி கோயில் திருப்புகழைச் சொல்லிக் கொண்டேன்.

  காணொளி பார்த்ததுண்டு, இன்று மீண்டும் பார்த்தேன். அருமையான காணொளி. அதில் அவர் சொல்வதும் அதைச் சொல்லிக் காட்டுவதும் மிகவும் சிறப்பு. நல்ல உச்சரிப்பு மற்றும் குரல் வளம்

  கீதா

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. முருகன் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் அருமை. முருகன் அனைவரையும் தன்னருளால் காக்க வேண்டி பிரார்த்தித்து கொண்டேன்.

  காணொளி அருமை நல்ல கணீரென்ற உச்சரிப்பு அவருக்கு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..