நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 24 
நான்காம் ஞாயிறு
தஞ்சை மன்னர் துளஜா (1728 - 1735) இவரது புதல்வி அம்மையால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தாள்.  
துயரம் தாங்க மாட்டாமல் அன்னையின் சந்நிதியில் நின்று அழுத மன்னர் - ''..என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!...'' என்று தன் அன்பு மகளுடன் அங்கேயே தங்கி விட்டார்..  
பார்வையிழந்த மகளுக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டுமென -
அல்லும் பகலும் அன்னையைத் தொழுது நின்றார்..
நாட்கள் நகர்ந்தன. மன்னரின் மனம் மகிழும்படியான நேரமும் வந்தது..
இளவரசியின் உறக்கத்தில் வழக்கம் போலவே - 
சின்னஞ்சிறு பெண் போல, சிற்றாடை இடையுடுத்து சிவகங்கைக் குளக் கரையிலிருந்து - ஸ்ரீதுர்கையை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாள் அன்னை..
இளவரசியின் உடல் முழுதும் வேப்பிலையால் வருடியதுடன் திருநீறும் பூசி விட்டாள். 
''...கண்களைத் திற!..''  - என்றாள்... 
வந்திருப்பது யாரென்று அறியாததால் -
'' என்னம்மா.. என்னைக் கண்களைத் திறக்கச் சொல்கின்றாயே!..''  - என்று இளவரசி கதறி அழுதாள்..
'' உன் அம்மா தான் வந்திருக்கின்றேன்!. கண்களைத் திறந்து என்னைப் பார்!..''  - என்றாள் உலக நாயகி!.
திடுக்கிட்டு அரசகுமாரி கண் விழிக்க - மின்னலைப் போன்ற ஒளியுடன் மூலஸ்தானத்தினுள் கலந்தாள் அன்னை..
பாதாதி கேசமும் புல்லரிக்க அன்னையின் சந்நிதியில் விழுந்து வணங்கினாள் இளவரசி..
அம்பிகையின் அருளைக் கண்டு வியந்த மன்னர் துளஜா - தன் மகளுக்குப் பார்வை கிடைத்த மகிழ்ச்சியுடன் -
அம்பிகையின் சந்நிதியை முன் மண்டபங்களுடன் புதுப்பித்துக் கட்டினார். 
சரபோஜி மன்னர் தனது ஆட்சிக் காலத்தில் - மகா  மண்டபம், நர்த்தன மண்டபம், ராஜ கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய திருமதில் - இவற்றை எழுப்பி திருப்பணி செய்தார்..
பின்னர் 
மூன்றாவது திருச்சுற்று,  உணவுக் கூடம் மற்றும் வெளி மண்டபம் - இவற்றை ராணி காமாட்சியம்பா எழுப்பிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவை.  
" என்னிடம் வந்த பிறகு  என்ன குறை உனக்கு?.. " - என்பதைப் போல - ஆறடி உயர திருமேனியளாகத்  திகழ்கின்றாள் அம்பாள்..
மூலஸ்தான அம்பாளின் திருமேனி புற்றுமண் ஆனதால் - அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை..
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் திருக்காப்பு நடைபெறும். 
அச்சமயம் மூலஸ்தானத்தைத் திரையிட்டு மறைத்து விடுவார்கள்..
வெள்ளைத் திரையில் அம்பாளை வரைந்திருப்பர்..
நாற்பத்தெட்டு நாட்களும் திரைச் சீலையில் விளங்கும் சித்ர ரூபிணிக்கே ஆராதனைகள் நிகழும். 
தைலக்காப்பின் போது அம்பாளுக்கு  உக்ரம் அதிகமாகும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக  - இளநீர், நீர் மோர், பானகத்துடன் தயிர் பள்ளயம்  நிவேத்தியம் நடைபெறும். 
இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது.  இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.
மூலத்தானத்தின் தென்புறம் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கைக்குத் தான்  நித்ய அபிஷேகம் நடைபெறுகிறது. 
கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். 
தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலை தேவியருடன் 
ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்..
பேச்சியம்மன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி ஆகிய மூர்த்திகள் ஒருங்கே உறையும்  சந்நிதி கொடி மரத்திற்கு தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது..
இங்கே சந்நிதியில் உள்ள தொட்டிலில் - பிறந்த குழந்தைகளை இட்டு ஆட்டி விட்டு பேச்சியம்மன் திருநீறு பூசிக் கொள்வது வழக்கம்..
மூன்றாம் திருச்சுற்றில்  மாவிளக்கு ஏற்றும் தீப நாச்சியார் மேடையும் வேப்ப மரமும் மரத்தடியில் புற்றும் இருக்கின்றன..  சற்று அருகில் பிரம்மேந்திர பீடமும் புன்னை மரமும் விளங்குகின்றன.
பைரவ உபாசகராகத் திகழ்ந்த பாடகச்சேரி மகான் தவத்திரு இராமலிங்க ஸ்வாமிகள் இத்திருத்தலத்தில் பல காலம் இருந்திருக்கின்றார்கள். 
தனது தவத்தினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கின்றார்.  
இங்கே  குறைவிலாத அன்னதானம் செய்ததுடன் திருப்பணிகளையும் செய்துள்ளார். 
சுவாமிகளுடைய திருமேனி உள் திருச்சுற்றில் மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறம் சுதை வடிவமாகத் திகழ்கின்றது.
திருக்கோயிலுக்குத் தென்புறமாக ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் பின்புறம்
அரை கிமீ., தொலைவில் - ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில் அமைந்துள்ளது..
வாருங்கள்..
வரம் தரவும் 
நலம் தரவும் அன்னை
காத்திருக்கின்றாள்..
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதில் 
அன்னைக்கு ஈடு இணை இல்லை.
***
ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***






அம்பிகையை வணங்கி நிற்போம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
இதுவரை தெரியாத தகவல்களுடனான பதிவு சிறப்பு
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி நெல்லை..
இறைசக்தி பற்றித் தெரிந்தும், அனுபவித்தும், பிழைப்புக்காக கடவுளைப் பழிப்பவர்களை என்னவென்று சொல்வது?
பதிலளிநீக்குஅவரவர் தலையெழுத்து அப்படி..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
ஆன்மீக தகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
ஆவணி ஞாயிறு புன்னை நல்லூர் மாரியம்மன் தரிசனம் மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குஅன்னையை பற்றிய வரலாறு மிக அருமை.
ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம்!
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம்!..
அம்மனின் அருள் கதையும் படங்களும், தகவல்களும் சிறப்பு. தஞ்சை ராஜாவின் பெயர் துளஜா - வித்தியாசமான பெயர் அழகான பெயர்,
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..