நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 08, 2023

ஆசை வகையே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 8
வெள்ளிக்கிழமை

ஊதிமலை திருப்புகழ்.

இன்றைய பெயர் ஊதியூர்.. 
காங்கேயத்தில் இருந்து 14 கிமீ., 
தொலைவில் உள்ளது..
 

தானதன தான தந்த 
தானதன தான தந்த 
தானதன தான தந்த ... தனதான..

ஆதிமக மாயி அம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த 
ஆவுடைய மாது தந்த ... குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி ஆதியரு ணேச ரென்று 
ஆளுமுனை யேவ ணங்க ... அருள்வாயே

பூதமது வான ஐந்து பேதமிட வேய லைந்து 
பூரணசி வாக மங்க ... ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து 
போகமுற வேவி ரும்பு ... மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசஅரு ளேபு ரிந்து 
நீதிநெறி யேவி ளங்க ... உபதேச

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத 
மந்த்ர நீலமயி லேறி வந்த ... வடிவேலா

ஓதுமறை ஆக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ... வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த 
ஊதிமலை மீது கந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


ஆதி மகமாயி  எனும் அம்பிகையும்
சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடை நாயகியும் 
ஆகிய உமாதேவி
தந்தருளிய திருக்குமாரனே, 

அன்புடன் மனம்  உருகி,
ஆதி அருணாசல ஈசனே - என்று 
உன்னை வணங்குகின்ற தன்மையை 
(என்னை ஆட்கொண்டு) எனக்கு
அருள்வாயாக..

பஞ்ச பூதங்களால் உண்டாகிய இந்த 
உடம்புடன் எங்கெல்லாமோ
அலைந்தேன்..

பூரணமான சிவ ஆகமங்களைத் 
தெரிந்து கொள்ளாமல்

பொன் மணிகள்  இலங்கும் பெண்களின் மார்பில் ஆசை வகைகளை நினைந்து இன்பம்  விரும்புகின்ற 
அடியேனுக்கு இரங்கி அருள் புரிவாய்..

நீதியும் நெறியும் விளங்கும் படியாக   சிவபெருமானுக்கு  பிரணவப் பொருளை உரைத்தவனே..

எனக்கு உபதேசம் செய்வதற்காக 
நீல மயிலேறி வந்தருளிய வடிவேலனே.. 

வேதங்களும் ஆகமங்களும்
கூறுகின்ற சிவயோகத்தைப் புரிந்து,

விதியின் வழியினை உணர்ந்த பெரியோர்களது
வினைகள் தீருமாறு அவர்களது உடலோடும் உயிரோடும் வளர்ந்து (அவர்களுக்கு) கீர்த்தி மிகும் சிவானந்த 
வாழ்வைத் தந்தருளி -

ஊதிமலையில் உவந்து உறைகின்ற 
பெருமாளே!..
**

முருகா முருகா
முருகா முருகா..
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. முருகனை வணங்கி நலம் பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகனை வணங்கி நலம் பெறுவோம்..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. முருகா சரணம்
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 3. ஊதியூர் முருகன் திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன். பாடலும், விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 4. ஊதியூர் முருகன் திருப்புகழும் தரிசனமும் சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..