நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 24, 2023

கிரக மூர்த்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 7
 ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்
இருந்து தொகுப்பு
 நன்றி : விக்கி
 
நம்மை ஆளுகின்ற கிரக மூர்த்திகளுக்கு
உரிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்..

சூரியன்

இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப் பிழம்பு ஆனவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரக மண்டலத்தின் நடுவில் அமர்ந்திருப்பார்..
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வலம் வருகின்றவர்..

பித்ரு காரகனாகிய சூரியனுக்கு அதிபதி - சிவபெருமான்
ப்ரத்யதி தேவதை - ருத்ரன்
ரத்தினம் - மாணிக்கம்
திசை - கிழக்கு
நிறம் - காவி
தானியம் - நெல்
மலர் - செந்தாமரை
வஸ்திரம் - சிவப்பு
அன்னம் - சர்க்கரைப் பொங்கல்
தலம் - சூரியனார் கோயில். பரிதியப்பர் கோயில்.

சந்திரன்

பாற்கடலில் இருந்து தோன்றியவர் இவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுப கிரகமாகவும், தேய்பிறையில் பாப கிரகமாகவும் விளங்கும் தன்மை கொண்டவர். இவர் கடக ராசிக்கு அதிபதியாவார்.

மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு அதிபதி பரமேஸ்வரி.
ப்ரத்யதி தேவதை - கௌரி
ரத்தினம் - முத்து
திக்கு - தென்கிழக்கு
நிறம் - வெண்மை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளை ஆடை
அன்னம் - தயிர் சாதம்
தலம் - திங்களூர்

அங்காரகன் (செவ்வாய்)

நிலமகளின் புத்திரனாகத் தோன்றியவர்.. சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுப்பவர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியானவர்.

பூமி காரகனாகிய 
அங்காரகனுக்கு அதிபதி - முருகன்
ப்ரத்யதி தேவதை - ஷேத்ரபாலர்
ரத்தினம் - பவளம்
திக்கு - தெற்கு
நிறம் - சிவப்பு
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, செவ்வரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
அன்னம் -  துவரம் பருப்பு சாதம்
தலம் - வைத்தீஸ்வரன் கோயில், பழநி.

புதன்

இவர் சந்திரனின் குமாரர் ஆவார். தீய கிரகங்களால் விளைகின்ற பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

வித்யா காரனாகிய புதனுக்கு அதிபதியும்
ப்ரத்யதி தேவதையும் - 
ஸ்ரீ மஹாவிஷ்ணு
ரத்தினம் - மரகதம்
திக்கு - வடகிழக்கு
நிறம் - பச்சை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் -  இளம் பச்சை வண்ண ஆடை
அன்னம் - பாசிப்பருப்பு பொங்கல்
தலம் - திருவெண்காடு, மதுரை.

பிரகஸ்பதி (குரு)

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைவருக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்..

இப்படியிருக்க - சிவ அம்சமாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தான் பிரகஸ்பதி - (குரு) என்பார்கள் பெரும்பாலானவர்கள்..

தன காரகனாகிய குருவிற்கு அதிபதி - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
ரத்தினம் - புஷ்பராகம்
திக்கு - வடக்கு
நிறம் - மஞ்சள்
தானியம் - கொண்டைக் கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
அன்னம்  - பருப்பு சாதம்
தலம் - திருச்செந்தூர், தென்குடித் திட்டை.

சுக்ரன்

இவர் அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். குருவைப் போல இவரும் சுப கிரகமாக விளங்குபவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார்.

களத்திர காரகனாகிய சுக்ரனுக்கு அதிபதி - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - அஸ்வினி தேவர்கள்
ரத்தினம் - வைரம்
திக்கு - கிழக்கு
நிறம் - வெண்மை
தானியம் - மொச்சை
மலர் - வெண்தாமரை
வஸ்திரம் - வெள்ளை ஆடை
அன்னம் - வெண் பொங்கல்
தலம் - ஸ்ரீரங்கம்

சநைச்சரன்

நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியனின் மகன் இவர். பாவ - புண்ணிய பலன்களைத் தருபவர்.. ‘சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி.

ஆயுள் காரகனாகிய  சநைச்சரனுக்கு
அதிபதி - தர்ம சாஸ்தா
ப்ரத்யதி தேவதை - யமன்
ரத்தினம் - நீலம்
திக்கு - மேற்கு
நிறம் - கருமை
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
அன்னம் - எள் கலந்த சோறு
தலம் - திருநள்ளாறு.

ராகு

இவர் அசுரத் தலையும், நாகத்தின் உடலையும் பெற்றவர். மிகுந்த வீரம் கொண்டவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவர் நிழல் கிரகம். இவர் எந்த ராசிக்கும் அதிபதி அல்ல.

போக காரகனாகிய ராகுவிற்கு அதிபதி - பத்ரகாளி
ப்ரத்யதி தேவதை - நாகராஜன்
ரத்தினம் - கோமேதகம்
திக்கு - தென் மேற்கு
நிறம் - கருமை
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
அன்னம் - உளுந்து கலந்த சோறு
தலம் - திருக்காளத்தி, திருநாகேஸ்வரம்.

கேது

இவர் நாகத்தின் தலையும், அசுர உடலையும் கொண்டவர். ‘செந்நாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவரும் ராகுவைப் போலவே நிழல் கிரகம். இவரும் எந்த ராசிக்கும் அதிபதியாக இல்லை.

ஞானகாரகனாகிய கேதுவின்
அதிபதி - விநாயகர்
ப்ரத்யதி தேவதை - சித்ரகுப்தன்
ரத்தினம் - வைடூரியம்
திக்கு - வட மேற்கு
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிறங்களையும் கொண்ட ஆடை
அன்னம் - கொள் கலந்த சோறு
தலம் - திருக்காளத்தி, கீழப்பெரும்பள்ளம்..
**
கிரக மூர்த்திகள்
எப்படியிருப்பினும்
ஏக மூர்த்தியாகிய
ஈசன் ஒருவனே
துணை நமக்கு!..


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.. 2/85/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

 1. என் ராசிக்கு அதிபதி சந்திரனா?  சரி..  அதனால்தான் என் பாட்டி எனக்கு முதலில் ரவிச்சந்திரன் என்று பெயர் வைத்தாரோ என்னவோ!  ஆனால் அது அப்படியே போயிற்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்ன என்ன? சந்திரன்னு பெயர் வைத்திருக்கலாம். இல்லை மதியொளின்னு வைத்திருக்கலாம். இல்லை அமுதன், ஆத்ரேயன்னு பெயர்கள் வைத்திருக்கலாம். ஆனால் சந்திரனுக்கு எதிரான சூரியன் பெயரோடு சேர்த்து வைத்தால் அது நிலைக்குமா? ஹி ஹி ஹி

   நீக்கு
  2. ​சூரியனை எதிர்த்து சந்திரன் நின்றது தமிழக வரலாறு!

   நீக்கு
  3. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
  4. ரவி சந்திரன் என்ற பெயர் வழக்கத்திற்கு வராதது நல்லதே..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. நல்ல பதிவு. நவக்கிரகங்களும் நமக்கு நன்மையே செய்யுமாக.
  மனிதனின் உடலுக்கும், உயிருக்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு உள்ளவை நவக்கோள்கள். நவகோள்கள் மேல் தவம் இயற்ற சொல்லி கொடுத்து இருக்கிறார். வேதாத்திரி மகரிஷி.
  பஞ்சபூத நவகிரக்கிரக தவம். பஞ்சபூதங்களை வணங்கி, நவகோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நமக்கு நன்மையே செய்ய கேட்கும் தவம்.

  கோளறு பதிகத்தை தினம் படிக்க சொல்வார்கள் மாமா. தினம் படிக்க முடியவில்லை என்றால் பயணம் செய்யும் போது பாட வேண்டும் என்பார்கள். காரில் பயணிக்கும் போது முதலில் ஒலிக்கும் பாடல். அடுத்து "மறையுடையாய் தோலுடையாய்" என்று ஆரம்பிக்கும் நெடுங்களம் பாடல் ஒலிக்கும்.
  ஈசனே துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோளறு பதிகத்தின் சிறப்பினை எடுத்துச் சொல்ல இயலாது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. விவரங்கள் நன்று, துரை அண்ணா. எல்லாருமே நல்லவங்கதான். கடைசில நீங்க கொடுத்திருக்கும் பதிகம் மனப்பாடம். இதுமட்டும்தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 4. கோளறூ பதிகம் முன்னர் எட்டு கிரஹ சேர்க்கை வந்தப்போப் பள்ளீ மாணவி. அப்போச் சொல்ல ஆரம்பிச்சுத் தொடர்கிறது. அனைத்துத் தகவல்களூம் சிறப்பு. எனக்குச் செவ்வாய். புதனின் அனுகிரஹமும் இருப்பதாய்ச் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேல் விவரமும் மகிழ்ச்சி..
   நன்றி அக்கா..

   நீக்கு
 5. மிக அருமை... ஆனால் சனைச்வரன் என்னைப் படுத்திய பாட்டை நான் மறக்கவே இயலாது (இன்னும் போன பாடில்லை).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. @நெல்லை, 1980 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடம் ஏழரைச் சனியால் நான் பட்ட பாடு! வீட்டுக்குள் விடாமல் கதவைத் திறக்காமல் இருக்கும்போது வாசலிலேயே நிப்பேன். 3 மணீக்குக் காஃபி, டிஃபன் கடை ஆரம்பிக்கனு கதவைத் திறந்து தானே ஆகணூம். அப்போத் தான் உள்ளே போவேன். ஆனால் எதையும் காட்டிக்க மாட்டேன். பேச்சே இருக்காது. வேலையை மட்டும் கரெக்டாச் செய்துடுவேன். மத்தவங்க கிட்டே குத்தம் சொல்ல முடியாமல் நடந்துப்பேன். என்றாலும் வாழ்க்கையின் கறூப்புப் பக்கங்கள் அவை. இன்னமும் தொந்திரவு கொடுப்பவையும் கூட! :(

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..