நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 12, 2023

திரு ஏரகம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 29
வெள்ளிக்கிழமை


இன்று
திருவேரகத் திருப்புகழ்

தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ... தனதான

மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் ... விரகாலே
மயலே யெழுப்பி இதழே யருத்த
மலைபோல் முலைக்கு ... ளுறவாகிப்
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச ... மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற 
பெருவாழ்வு பற்ற ... அருள்வாயே..

குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த 
குகனே குறத்தி ... மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூகம் எத்து 
குடகா விரிக்கு ... வடபாலார்
திருவே ரகத்தில் உறைவா யுமைக்கோர் 
சிறுவா கரிக்கும் ... இளையோனே
திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-


மருக்கொழுந்து வாசனை மிகுந்த கூந்தலையுடைய பெண்கள் காம சாத்திரத்தின்
தந்திர வகைகளால் என்னை மயக்கி மோகத்தை மூட்டி, வாயிதழ் ஊட்டி விட,  மலை போன்ற 
அவர்களது மார்பகங்களில் விருப்பங் கொண்டு அலைந்த 
அடியேனை விட்டுப் பிரியாமலும், நித்தம்
அன்பு மாறாமலும், எனது பிழைகளைப் பொறுத்து உன் இரு தாள்களிலும் பொருந்தி வாழ்கின்ற பேரின்பப் பெரு வாழ்வை எனக்கு அருள்வாயாக..


குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கு
பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த குகனே,  
வள்ளி நாயகியின் மணவாளனே, 

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும்
வளர்ந்தோங்கிய பாக்கு மரங்கள் நிறைந்ததும் - 
மேற்கில் இருந்து வருகின்ற காவிரிக்கு வடபால் அமைந்துள்ளதும் ஆகிய திருவேரகம் எனும் சுவாமி மலையில் உறைபவனே,

உமாதேவியின் மகனே,
யானைமுகக் கணபதிக்கு இளையவனே,

திருமாலின் மருமகனே, அரக்கர் தலைகளை வெட்டித் தள்ளிய பெருமாளே..

சிவகாமியின் செல்வன்   தும்பிக்கையானின் தம்பி மாலவனின் மருகன் குஞ்சரி மணாளன்  வள்ளி நாயகன் - எனும் எல்லாவற்றையும் இந்தத் திருப்புகழில்
அருணகிரி நாதர் சொல்லியிருக்கின்றார்..

முருகா.. முருகா..
***

5 கருத்துகள்:

  1. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வெள்ளியன்று அருமையான முருக தரிசனம் பெற்றுக் கொண்டேன். முருகனுக்குரிய திருப்புகழ் பாடலை பாடி வணங்கி கொண்டேன். அதன் பொருளுடன் பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. மதுரைத் திருப்புகழ்க் கழகம் நினைவு வந்தது. திரு திருப்புகழ் மணி ஐயா அவர்கள் குரலெடுத்துப் பாடுவதும் காதில் ஒலிக்கின்றது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..