நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 08, 2021

தூரிகை வண்ணம்

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அனைவராலும் அறியப்பெற்ற
ஓவியர் திரு. இளையராஜா (43)
அவர்கள் நேற்று
கொரானா தீநுண்மியால்
பாதிக்கப்பட்ட நிலையில்
இறைவனடி சேர்ந்தார் என்கிற
செய்தியறிந்து
கலங்காத நெஞ்சமில்லை..

இன்றைய பதிவில்
திரு. இளையராஜா அவர்களது
தூரிகை வண்ணத்தில்
காரிகை வண்ணம்..

தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தை அடுத்த
செம்பியன் வரம்பு எனும்
ஊரைச் சேர்ந்தவர்..


தனது தூரிகையால்
பெண்ணோவியங்களைப்
பொன்னோவியங்கள்
ஆக்கியவர்..


அவரது
கைவண்ணத்தில் உருவாகிய
சித்திரப்பாவை ஒருத்தி
சகுந்தலா எனும் பெயரில்
எனது கதைக்குள்ளும்
உலவித் திரிந்தாள்..

எனது பதிவுகள்
வேறு சிலவற்றிலும்
ஓவியர் இளையராஜா
அவர்களது சித்திரங்கள்
இடம் பெற்றிருக்கின்றன..

அவரை என்றென்றும்
என் நெஞ்சம்
நினைத்திருக்கும்..

அவரது பிரிவால்
துயருற்றிருக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
ஆறுதலையும் தேறுதலையும்
எல்லாம் வல்ல இறைவன்
அருள்வானாக...


ஓவியர் திரு. இளையராஜா
அவர்களது ஆன்மா
தனது திருவடி நிழலில்
கலந்திருக்க
இறைவன் அருள் புரிவானாக..
 ஃஃஃ

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

11 கருத்துகள்:

 1. மிகவும் வருத்தமான செய்தி.   தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மனைவிக்கு இவரது மறைவு பற்றிய செய்தி இன்னமும் தெரியாது என்கிறசெய்தி இன்னும் கொடுமையானதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இந்தளவு நுணுக்கம் என பலமுறை வியந்ததுண்டு... மிகப்பெரிய இழப்பு...

  பதிலளிநீக்கு
 3. ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் என்றைக்கும் மனதில் நிலைத்து நிற்கும் - அவரது நினைவுகளும்!

  மிகவும் வருத்தமான இழப்பு. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அரக்கன் இங்கே உலாவப் போகிறான்... இழப்புகளைத் தரப் போகிறான்... வருத்தம் தான்.

  பதிலளிநீக்கு
 4. மிகப் பெரிய இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையும் மனவலிமையும் அவர் குடும்பத்திற்கு ஏற்பட வேண்டும். அவர் மனைவியும் நோய்வாய்ப்பட்டிருப்பது குறித்து மனம் வேதனைப்படுகிறது. புகைப்படமா/ஓவியமா என நினைக்கும் வண்ணம் அச்சாக அசலாகக் கொடுத்து வந்தார். இத்தனை விரைவில் இறைவன் அவரை அழைத்துக் கொண்டது வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
 5. மிகப் பெரிய இழப்பு துரை அண்ணா. இவரது ஓவியங்கள் உங்கள் கதைகளில் வந்திருக்கிறதே நினைவிருக்கு என்ன அருமையான ஓவியங்கள்! நுணுக்கமான கலைத்திறன்.

  மனம் மிக வேதனை அடைகிறது. இன்னும் இப்படி கலைஞர்கள் எத்தனை பேரை இந்த ராட்சச மாயாவி கொண்டு செல்லப் போகிறதோ.

  நம் மனதில் ஓவியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும் அண்ணா..அவர் குடும்பத்திற்குப் பிரார்த்திப்போம்

  கீதா

  பதிலளிநீக்கு
 6. திறமையான ஓவியர். வேதனை. இப்படி எத்தனை பேரை இந்த கோவிட் 19 பலி வாங்கப் போகிறதோ. தினமும் செய்திகள் பார்க்க மனம் வேதனைதான் அடைகிறது. எப்போது கோவிட் உலகை விட்டுச் செல்லும் என்று மனம் வேண்டுகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. இவரின் ஓவியம் உங்கள் பதிவில், ராமலக்ஷ்மி பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
  அவர் மறைவு மிகவும் வேதனை ஏற்படுத்தியது. இன்னும் எத்தனை திறமைவாய்ந்தவர்களை இழக்க நேரிடுமோ என்று மனது கலங்கி போகிறது.
  சிறு வயதில் இறைவன் இப்படி கொண்டு போய் விட்டானே!
  தன் சகோதரி மகள் திருமணத்திற்கு போய் வந்தார் கும்பகோணம் என்று படித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. அவர் மனைவி நலம் பெற வேண்டும். அவரை இழந்து வாடும் அவர் அன்பு குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலும், மனபலமும் தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. இளையராஜா அவர்களின் ஓவியங்களை பார்த்து அதிசயித்ததுண்டு. அழகும் எளிமையும் சேர்ந்து நிஜம் போலவே வலம் வரும் அவருடைய சித்திரப்பாவைகள். அவரின் மறைவு கேட்டு கலைத்தாயும் கண்ணீர் சிந்தியிருப்பார். ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 10. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு