நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 06, 2021

ஆனந்த ஒளி

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி நகருக்கு அருகில் இருக்கின்ற
இருக்கன்குடி  திருத்தலத்தில்
கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ  மாரியம்மனைத் துதித்து இரண்டு மாதங்களுக்கு
முன்பு எழுதப் பெற்ற பாடல்
இன்றைய பதிவில்... 


பிறக்கும் உயிர்க்குப் பெருந்துணையே குணம்
சிறக்கும் மனிதர்க்கு வருந்துணையே
வெறுக்கும் வினைதனைச் செய்திடினும் மனம்
பொறுக்கும் தாயே மகமாயி...1 

இருக்கன்குடி என்னும் தலத்தினளே அருள்
சுரக்கும் கற்பகத் திருவினளே..
இருகை ஏந்தி உன்னிடம் நின்றேன் 
திருக்கண் நோக்கிப் பொழிந்திடுவாய்.. 2


நேர்வழி யதனில் நின்றறியேன் நித்தம்
நின்முகம் பார்த்துப் பணிந்த றியேன்..
சீர்கொண்டு உன்புகழ் பாடுதற்கு நல்ல
தென்தமிழ்ச் சொல்லும் நானறியேன்.. 3

அன்புடன் என்னையும் சிந்தை செய்து
அருள் தர அழைத்த  அன்னையளே
உன்முக தரிசனம் முழு மதியாய் நன்மை
தந்திடக் கூடும் பெரு நிதியாய்.. 4

உறும் துயர் தீர்த்திட வரும் வகையாய்
நறுங் குழல் நாயகி என எழுந்தாய்..
கோமதி சங்கரி நாரணியாய்
குறை தீர்த்திட வரும் எழில் பூரணியாய்.. 5

இடுக்கண் தீர்க்கும் தன்மையளே
இருக்கன் குடியின் மகமாயி..
கடுக்கும் வேதனை தனைத் தீர்த்து
கொடுக்கும் கரங்களில் நலம் காட்டு.. 6


வலம் வந்து வணங்கிட நலம் தருவாய்
நலம் தந்து வளம் தந்து துணை வருவாய்
தவம் என்று அறியா மட மனதில்
சிவம் எனும் மங்கலம் தான் அருள்வாய்..7

உடற்பிணி யதுவும் நீங்கிடவே எந்தன்
உளம் உந்தன் வாசலில் தொழுதிடவே 
வலி கொண்ட நெஞ்சுக்கு வழிகாட்டு எந்தன்
விழி தனில் ஆனந்த ஒளி கூட்டு.. 8
***
அனைவரது இல்லத்திலும்
நலம் ஓங்கிடுவதற்கு
அன்னை அருள் புரிவாளாக..

ஓம் சக்தி ஓம்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

22 கருத்துகள்:

 1. வருந்துணையே என்பது வரும் துணை என்கிற பொருளிலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   வரும் துணை - என்பதைத் தான் வருந்துணை - என்று எழுதியுள்ளேன்..

   நன்றி..

   நீக்கு
 2. அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் - வழக்கம் போல...   அன்னையைப் பணிவோம் அகிலத்தின் துயர் துடைக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னை அகிலத்தின் துயர் துடைப்பாளாக..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறு வயதில் சிவகாசியில் இருக்கும் போது நிறைய தடவை போய் இருக்கிறேன்.
  அப்புறம் விருதுநகர் போன போது என் கணவருடன் சென்று இருக்கிறேன். அம்மன் மிக சக்தி வாய்ந்தவர்.
  அம்மன் மேல் நீங்கள் எழுதிய கவிதை அருமை.பாமலையை பாடி வணங்கி கொண்டேன்.
  அன்னை நலம் தரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

   நீக்கு
 4. அன்னையின் அருள் என்ற ஆனந்த ஓளி எங்கும் பரவட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அகிலம் எல்லாம் விளங்கும்
   அம்மன் அருள்...

   வாழ்க வையகம்.. வாழ்க.. வாழ்க..

   நீக்கு
 5. இறையருளால் தீநுண்மி ஒழியட்டும், மனிதவாழ்வு மகிழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புன் ஜி..

   தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அருமை அய்யா...
  ஆன்மீகம் என்னும் போது உங்களிடமிருந்து அசத்தலாய் வரும் பதிவு... அது இதிலும் தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. நல்லதொரு பாடல் ஐயா. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. விரைவில் தீநுண்மி அழியட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. வழக்கம் போல அருமையா எழுதியிருக்கீங்க துரை அண்ணா. பாடலை ரசித்தேன். வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ..
   தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நல்ல பாடல். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இருக்கன்குடி மாரியம்மன் உலக மக்கள் அனைவரையும் இந்த தொற்று அரக்கனிடமிருந்து காத்தருள வேண்டும். நானும் மனமாற அம்மனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   இறுக்கமான சூழ்நிலையைக் கடந்து வந்திருக்கின்றீர்கள்.. ஆறுதலையும் தேறுதலையும் அன்னை அருள்வாளாக...

   தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..