நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 28, 2020

மார்கழி முத்துக்கள் 13

 தமிழமுதம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல..(037) 
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
***

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..(2182)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திரு மயிலாடுதுறை


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீ அபயாம்பிகை

தல விருட்சம் - மா, வன்னி
தீர்த்தம் - காவிரி

ஸ்ரீ அபயாம்பிகை
அம்பிகை மயிலாக உருமாறி
ஐயனைப் பூஜித்த திருத்தலம்..

மயூர தாண்டவம் நிகழ்த்தப் பெற்ற
திருத்தலம்..
*
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நிலைமை சொல்லு நெஞ்சே தவமென் செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே..(5/39) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்... 15

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்... 16

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. திருப்பாவைக்கான ஓவியம் அருமை.   ஓரொருகால் எம்பெருமான் திருவெம்பாவைக்கும் மிகப்பொருத்தமான படம்.

  பதிலளிநீக்கு
 2. ஒரே ஒருதரம் இரு கோயில்களுக்கும் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. பின்னர் போக நினைத்தும் முடியவே இல்லை.அருமையான தரிசனங்கள். நிறைவான பாசுரங்கள், பதிகங்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. காலையில் இப்படி பக்தி பூர்வமாக இல்லத்திலிருந்தபடியே எம் பெருமாளையும், ஈஸ்வரனாரையும், அன்னை உமாதேவியையும் தரிசிக்க வைப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருக்கண்ணபுரம், திரு மயிலாடுதுறை தெய்வங்களை பக்தியுடன் நமஸ்கரித்து கொண்டேன். இன்றைய பதிவாக பாடல்கள், பாசுரங்கள், பதிகமென மனதுக்கு நிறைவான தொண்டு. தங்களின் இந்த தினசரி இறைத்தொண்டுக்கு தலை வணங்குகிறேன். நல்ல பகிர்வு. பகிர்வினால் மனதெல்லாம் பக்தியில் பிணைகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. நலமே விளையட்டும்.

  பூதத்தாழ்வாரின் பாடல் - நன்று. மற்றவற்றையும் ரசித்தேன். தொடரட்டும் தமிழமுதம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..