நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 17, 2020

மார்கழி முத்துக்கள் 02

 தமிழமுதம்

கற்றதனால் ஆயபயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்..(02) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 02

ஸ்ரீ ஆராவமுதன் - குடந்தை

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடியே பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டுநாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..

நம்பெருமாள்

தித்திக்கும் திருப்பாசுரம்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே..(890)
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
வைத்தீஸ்வரன்கோயில்


இறைவன் - ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை - அருள்தரும் தையல்நாயகி
தலமரம் - வேம்பு
தீர்த்தம் - சித்தாமிர்த தீர்த்தம்


ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வன் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் 
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே..(6/54)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 02

ஸ்ரீ சந்த்ரசேகரர் - மனோன்மணி அம்பிகை - உவரி
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

14 கருத்துகள்:

 1. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள வல்லான் நம் அனைவர் மன, உடல் நோய்களை தீர்க்கப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   தங்களது பிரார்த்தனையே நம்முடையதும்..
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. இந்த உலகில் பரவி இருக்கும் கொடிய தொற்றை முற்றிலும் அகற்றி மக்கள் வாழ்வில் ஆரோக்கியமும் மகிழ்வும் பெருக வைத்தீஸ்வரனைப் பிரார்த்திப்போம். ஓம் நமசிவாய! ஓம் நமோ நாராயணாய!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம்...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நலமே விளையட்டும்.

  தொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. மார்கழியின் சிறப்பு அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  கண்களுக்கு குளிர்வை தரும் அருமையான படங்களுடன், அடியார்கள் அருளிச்செய்த திருப்பாவை, தேவாரம் முதலிய பாடல்களையும்,முறையே தரிசித்து, பாடி மகிழ்ந்தேன். தங்கள் பக்தி கலந்த அன்புடனான இத்தொண்டு தொடரட்டும். நானும் பக்தியுடன் தொடர்கிறேன் பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..