நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 25, 2020

மார்கழி முத்துக்கள் 10

 தமிழமுதம்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை..(036)
***
அருளமுதம்

இன்று
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 10  


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்..
***
தித்திக்கும் திருப்பாசுரம்

நாச்சியார்கோயில் கல் கருடன்

காப்புன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை உன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னை
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி..(2156)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருநெடுங்களம்இறைவன் - ஸ்ரீ நெடுங்களநாதர் 
அம்பிகை - ஸ்ரீ மங்கலநாயகி

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில்
துவாக்குடியில் இருந்து 
5 கி.மீ தொலைவில் உள்ளது..

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!..(1/52)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 10  

மழலையுடன் மகேசனும் மகேஸ்வரியும்
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப் பெருந்துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே!..

இந்த அளவில்
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி நிறைவு பெறுகின்றது..
***

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 09 - 10


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்... 9

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்... 10
***

இன்று கிறிஸ்துமஸ்..

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்..
நல்ல மனிதர் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறார்..
உலகெங்கும் 
அன்பும் அமைதியும் மலரட்டும்..


அனைவருக்கும்
அன்பின் இனிய 
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

6 கருத்துகள்:

 1. அழகான அற்புதமான படங்கள். நல்லதொரு தரிசனம் கிடைத்தது. நந்தி மேளம் கொட்ட அம்மையும், அப்பனும் ஆடும் காட்சி கண்களையும், மனதையும் கவர்ந்தது. பாசுரங்கள், பதிகங்கள் பகிர்வுடன் நல்லதொரு தொண்டு. அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய வைகுந்த ஏகாதசி நாளில்
  அனைத்துக் கடவுளர்களையும் தரிசிப்பது ஒரு புண்ணியம்.
  அனைத்துப் படங்களும் , திருப்பாவை ,திருப்பள்ளி எழுச்சி
  சேவை செய்தேன்.
  எல்லோரும் நோற்று சுவர்க்கம் என்னும்
  நல்லிடத்தை அடைய இறைவன் அருளட்டும்.
  மிக நன்றி துரைமா.

  பதிலளிநீக்கு
 3. ஓம் நம சிவாய...
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  அனைத்துப் படங்களும் அழகு.கடவுளார்கள் அனைவரையும் ஒருங்கே தங்கள் பதிவில் இன்று தரிசித்து இன்புற்றேன். பரமேஸ்வரனும் பார்வதியும் நடனம் செய்வது கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. பாசுரங்கள், பதிகம், என்னும் அமிழ்தை வழக்கம் போல தந்துள்ளீர்கள். வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சிறப்பான தரிசனங்களையும், பக்திப் பாடல்களையும் தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. படங்களும் தகவல்களும் நன்று.

  தினம் தினம் உங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கும் இறை தரிசனம். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..