நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 11, 2020

ஓம் சக்தி ஓம்

  

இன்று
மகாகவியின்
பிறந்த நாள்..

அப்பெருமகனது
திருவாக்கிலிருந்து
நம் சிந்தனைக்கு..


பொய் சொல்லக்கூடாது பாப்பா  என்றும்
புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது
வாழும் முறைமையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்..

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா..

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே இதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் மிகுந்த ஹிந்து ஸ்தானம் இதைத்
தினமும் பணிந்திடடி பாப்பா..

வேதம் உடையதிந்த நாடு நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்து ஸ்தானம் இதைத்
தெய்வம் என்று கும்பிடடி பாப்பா..
***
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும்
நனி சிறந்தனவே!..
***

மகாகவியின் வழியில்
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
***

16 கருத்துகள்:

  1. சூத்திரனுக்கு ஒரு நீதி-தண்டச்
    சோறு உண்ணும் பார்ப்புக்கு
    வேறொரு நீதி
    சாத்திரம் ஏதும் உரைப்பின் -அது
    சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்

    பதிலளிநீக்கு
  2. அடுத்தவன் முதுகில் ஏறி
    பெண்மையைக் கேவலப்படுத்தி
    முதுகு சொறிவதற்கு
    ஒரு பூ நூல் போட்டு
    அதுவே ஆண்மை எனப்
    பல்லாண்டுகளாக ஏச்சி பிழைக்கும்
    தொழில் கொண்டிருக்கும்
    தண்டச் சோறுகளையும்
    இந்த பூமி
    தாங்கிக் கொண்டிருப்பது
    ஏன்...?

    நன்றி... வாழ்க நலம்...


    காரணம் :
    பொறை
    குறளமுதம்
    விரைவில்...

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு. மஹாகவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே இருந்து சத்தியமான வாக்காக வந்தவை. மஹாகவிக்கு அஞ்சலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. பாரதியின் நினைவுகளை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு மஹாகவியின் சிறப்புகள் என்றும் மங்காதவை. அவருடைய பிறந்த நாளை என்றும் மறவாமல், அவர் புகழ் பாடி, அவரின் கவிகளை பத்திரப்படுத்தி நிரந்தரமாக்குவோம். பதிவின் வரிகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அவரது நினைவினை போற்றும் குழந்தை பாடல் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மனதிற்கு இதம் தரும் வரிகள்....


    வளர்க கவியின் புகழ் என்றும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சக்தி ஓம் சக்தி ஓம்... சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  9. ஓம் சக்தி - பாரதியின் நினைவில் ஒரு பதிவு - நன்று.

    பதிலளிநீக்கு