நேற்று Fb வழியாக
சக பதிவர்
மரியாதைக்குரிய
திருமதி கோமதிஅரசு அவர்களது
அன்புக் கணவர்
திரு.A. திருநாவுக்கரசு அவர்கள்
இயற்கை எய்திய
தகவல் அறிந்ததில் இருந்து
மிகவும் வருந்துகின்றது மனம்..
தமிழார்வமும் சிவநெறியும்
மிக்கவராக விளங்கிய அவர்
இலக்கிய விரிவுரையாளராகவும்
திகழ்ந்திருக்கின்றார்..
திருமுறைத் தலங்களைத்
தரிசிப்பதில் நாட்டம் கொண்டு
சிவநேயச் செல்வராகப்
பொலிந்த அவர்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடிகளில் இரண்டறக்
கலந்து விட்டார்..
ஜோதி மயமாகிய
கார்த்திகை மாதத்தில்
சிவஜோதியுள்
நிறைந்து விட்டார்..
தலைவனை இழந்து
தவிக்கும் அவர்களது
துயரத்தில் நாமும்
பங்கு கொள்கிறோம்..
அவர் தம் குடும்பத்தினரது
துயரைத் தீர்க்க வல்லவன்
இறைவன் ஒருவனே..
ஆறாத் துயரில்
ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர்க்கு
ஆறுதலையும் தேறுதலையும்
இறைவன் தந்தருள்வானாக..
புண்ணியம் செய்தார்க்குப்
பூவுண்டு நீருண்டு
-: திருமூலர் :-
ஓம்
சாந்தி.. சாந்தி.. சாந்தி..
***


ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குஉங்கள் பிரார்த்தனைகளில் நாங்களும்.
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குஆம் வாட்ஸ்ஆப் வழியாக நானும் அறிந்தேன்.
பதிலளிநீக்குசகோ அவர்களுக்கு எமது ஆறுதல்களை கூறி இறைவன் இவைகளை தாங்கி கடந்து போகும் மனதை தருமாறு வேண்டுகிறேன்.
தங்களுக்கு நன்றி..
நீக்குபுண்ணியம் செய்தார்க்குப் பூ உண்டு நீர் உண்டு.
பதிலளிநீக்குகோமதி அரசு மேடம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
தங்களுக்கு நன்றி..
நீக்குசகோதரி கோமதி அரசு அவர்களின் துயரம் கண்டு மனது பரிதவிக்கிறது. அவர்களுக்கு இதை தாங்கும் மன வலிமையை இறைவன் தந்தருள வேண்டும் என நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குகோமதி அக்காவின் மாமா ஒரு நல்ல ஆத்மா... அவர் நல்லபடி நலமாக இறைவனடி சேர்ந்து விட்டார் ஆனால் கோமதி அக்கா எப்படித் தாங்குவா என நினைச்சுத்தான் என்னால் ஆற முடியவில்லை.... கடசி ஒரு கிழமையாவது நோய்வாய்ப்பட்டு இருந்திருந்தாலாவது கொஞ்சம் மனத்தை ஆத்தலாம்... இது கண்ணுக்கு முன்னாலே என்றால் எப்படித் தாங்குவது.....அவர்கள் எல்லோரது மனமும் அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குவிஷயம் அறிந்ததுமுதல் மனம் கனத்து போனது சொல்லொணா துயரம் .இந்த கஷ்டத்தை தாங்கும் மனவலிமையையும் கோமதி அக்காவுக்கு இறைவன் உற்ற துணையாயிருக்க அனைவரும் பிரார்த்திப்போம் .அரசு சார் அவர்களுக்கு அஞ்சலிகள் மற்றும் அவரது ஆன்ம சாந்திக்காகவும் பிரார்த்திப்போம் .
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குஅன்பானவர். அமைதியானவர். அறிவார்ந்தவர். சமயப்பற்று மிக்கவர். பல கலைகள் அறிந்தவர். அவரின் இழப்பு பேரிழப்பு. அவரைச் சற்றும் சிரமமில்லாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இறைவன். அக்காவுக்கு இதைத் தாங்கும் மன தைரியத்தை அதே ஆண்டவன் அருள வேண்டும்.
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி..
நீக்குஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஅவரது குடும்பத்தினருக்கு ஆண்டவன் அருள எனது பிரார்த்தனைகள்.
தங்களுக்கு நன்றி..
நீக்குஇத்தனை நேரம் காரியங்கள் முடிந்திருக்க வேண்டும். யாராலும் இந்த அதிர்ச்சியிலிருந்து
பதிலளிநீக்குமீள்வது கடினம். நாம் எல்லோரும் துணை இருப்போம்.
தங்களுக்கு நன்றி..
நீக்குதங்களுக்கு நன்றி..
பதிலளிநீக்குசெய்தி அறிந்ததில் இருந்தே மிகவும் வருத்தமாக இருக்கிறது .....
பதிலளிநீக்குஇறைவன் துணை இருந்து அவர்களை காக்கட்டும் ..