நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 14, 2020

அன்பின் தீபங்கள்

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஒவ்வொருவரும்
அவரவர் நிலையில்
எண்ணிலாத துன்பங்களை
அனுபவித்திருக்கும் நிலையில்

இன்று
தீபாவளித் திருநாள்..இனிவரும் நாட்கள்
இனிதாய் வாய்த்திட
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்...

மின் நிலா
தீபாவளி மலருக்காக
எழுதிய கவிதையை (!)
இங்கு பதிவு செய்வதில்
மகிழ்ச்சி எய்துகிறேன்...


மண் கொண்ட மாண்பு
***
மண் கொண்ட மாண்புகள்
மீண்டு வர வேண்டும்...
கண் கண்ட கனவுகள்
கை நிறைய வேண்டும்..

தீபங்கள் ஒளி தர
தீவினை அகன்றதும்
தீதிலா வழி சென்று
ஜோதியாய் நின்றதும்


ஆவளி ஆக அன்பு
தீபங்கள் ஏற்றினோம்
தீப ஆ வளியென்று
தெய்வமே போற்றினோம்..

வறியாரும் வாழ்வதனில்
வளங் காண வாழ்த்தினோம்
வளங் காணும் வாழ்வதனில்
வகை ஒன்றைக் கூட்டினோம்..

உண்பதுவும் நன்னாள்
உடுப்பதுவும் பொன்னாள்.
உருகி மனம் ஒருவற்கு
உதவுதலும் திருநாள்..

என்றாகி நின்றாலும்
இதனுள்ளே ஒன்றுண்டு
ஒன்றென்ற பொருள் கண்டு
உணர்வதிலே நலம் உண்டு..

உண்பதுவோ நன்னாள்
உடுப்பதுவோ பொன்னாள்
உருகி மனம் ஒருவற்கு
உதவுதலே திருநாள்..

படிகொண்டு பாம்பணையில்
துயில்கின்ற பரம்பொருள்
பார் நலம் காத்தெங்கும்
தர வேண்டும் திருவருள்..

அளந்தார்க்கு அளந்தபடி
அருள்கொண்டு பொழிகவே..
அருள்வேண்டி நிற்பார்முன்
அன்னையெனப் பொலிகவே..

வில் கொண்டு நின்றனை
வீரம் விளைத்தனை..
வெல் என்ற சொல் தந்து
வேல் கொண்டு வந்தனை..

அடியார்தம் மனைகண்டு
அமுதுண்டு நின்றனை
அன்புதான் சிவமென்ற
அருள்மொழி தந்தனை..

சொல் கொண்டு உந்தனை
ஏற்று கின்ற எந்தனை
காத்தருளும் எந்தையே
கதி காணும் சிந்தையே...
 ஃஃஃ


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

 1. தீப ஒளித் திருநாளில் தீ நுண்மி அழிந்து நன்மைகளை இந்த நானிலம் காணட்டும்.  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்களுக்கு நல்வரவு...
   என்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்..

   நீக்கு
 2. இந்த தீபாவளி நன்னாளில் அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மேலோங்கவும்,ஆரோக்கியம் பெருகி நல்வாழ்வு வாழவும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. ந்ன்றியக்கா..

   நீக்கு
 3. இனிய தீபஒளி வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
   எங்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்..

   நீக்கு
 4. தங்களுக்கும் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
   எங்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்..

   அன்பின் நல்வாழ்த்துகள்.. நன்றி..

   நீக்கு
 5. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...
   தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   எங்கும் நலமே நிறையட்டும்..

   அன்பின் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. அன்பின் நெல்லை...
  வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது வரவு...
  எங்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்..

  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
 8. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன் தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 9. மின் நிலாவில் உங்கள் கவிதைகள் படித்தேன்.
  நன்றாக இருந்தது.

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் இனிய
   தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..