நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 20, 2020

வெற்றி வேல்

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்..
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று ஸ்ரீ கந்த சஷ்டி
ஆணவம் மாயா கன்மம் எனும்
அதர்மங்கள் அழிந்த நாள்...

தீமைகளை அழிக்கும் பொருட்டு
இறைவன் பற்பல அவதாரங்களையும்
திருக்கோலங்களையும் மேற்கொள்கின்றனன்..

அவ்வேளைகளில் நம்பொருட்டு பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி
திருக்காட்சி நல்குகின்றனன்..
அத்தகைய ஆயுதங்களுள்
வெற்றி, ஞானம் எனும் சிறப்பு மொழிகளுடன் திகழ்வது வேல் ஒன்றே..


சிறப்புடைய வேலினைத் தாங்கி நிற்பவன் வெற்றி வடிவேலன்..

வேலை வணங்குவதே வேலை!..
என்றுரைப்பார் ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகள்..

வேலினை
வெற்றி வடிவேலனை வணங்கி
வாழ்வின் வளம் எலாம் பெறுவோம்..


வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே - செந்தி நகர் 
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
குகனுண்டு குறைவில்லை மனமே..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..
***

18 கருத்துகள்:

 1. கந்த சஷ்டிக்கொரு திருநாள்...    அவன் கருணை பொழிகின்ற பெருநாள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..

   நீக்கு
 2. காணொளிகள் பார்த்துக்கொண்டே கமெண்ட் செய்கிறேன்.  திரை விலகியதும் தீப ஒளியில் முருகனின் திரு உருவம்...   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அழகான பதிவு. அருமையாக இந்த நாளில் கந்தனை தரிசித்துக் கொண்டேன். காணொளிகள் மிகச் சிறப்பாக இருந்தது. தீபாராதனை ஒளியில் கண்ட முருகனின் தரிசனத்தில் அவன் அழகிய புன்முறுவலில் மனம் கரைகிறது.

  கந்தா சரணம். கடம்பா சரணம் கார்த்திகேயா சரணம்.வேலவா சரணம்.

  மனம் நிறைவான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 4. வேலுண்டு, வினையில்லை. அழகனை தரிசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   முருகன் திருவருள் முன்னின்று காக்க..

   நீக்கு
 5. மிக அருமையான பதிவு

  வேலுண்டு வினையில்லை பாடல் மிகவும் பிடித்த பாடல், அதை பாடி கொண்டே காணொளி தரிசனம் செய்தேன்.

  அடுக்கு தீபாராதனை ஒளியில் ராஜஅலங்காரத்தில் அவரின் முகம் ஜொலிப்பு!

  நன்றி அற்புத தரிசனம் காணசெய்தமைக்கு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 6. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! முதல் காணொளி தான் திறந்தது. கீழே உள்ள காணொளி திறக்கலை, பின்னர் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 7. வெற்றி வேல் தவிர மற்றவை அனைத்து(ம்) பொய்மை என தமிழுக்கு உரித்தானது; அதனால் தமிழர்க்கும் உரித்தானது...

  முருகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 8. ராஜாங்க சேவையா? முருகன் ஜொலிக்கிறான். அடுக்கு தீப ஆராதனை கண்டு மனம் நிறைவுற்றது. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றியக்கா...

   தீப தரிசனத்தில் மனம் நெகிழ்வுற்றது..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வீரவேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 9. உலகில் நன்மைகள் விளைந்து நலம் பெருக வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி..

   முருகன் திருவருள் முன்னின்று காக்க..
   வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு