நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 16, 2020

சபரிமலைத் தென்றல்

     


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை
முதல் நாள்..

கார்த்திகையின்
பெருமைகளைச் சொல்லவும்
வேண்டுமோ!..

ஐயனவன் நினைவினிலே
தவிக்கிறது நெஞ்சம்..
மெய்யனவன் மலரடியில்
என்றென்றும் தஞ்சம்..


சபரி மலைத் தென்றல்
வந்து தாலாட்டுமே..
சரண் அடைந்த அன்பர்
நெஞ்சை சீராட்டுமே!...
பொங்கிவரும் புனலாய் என்றும்
நலங்  காட்டுமே...
பூதநாதன் புகழைப் பாட
தமிழைக் கூட்டுமே!..
காரிருளில் ஒளியாய் நின்று
வழியைக் காட்டுமே..
கண் மறந்து இழைத்த பாவம்
பழியைத் தீர்க்குமே!..
மாலை என்னும் புனிதம் தாங்க
மனமும் ஆறுமே...
மங்கலங்கள் நன்கலமாய் 
மனையில் சேருமே!..
செய்த பாவம் செய்யும் பாவம்
யாவும் தீருமே..
செந்நெறியில் நன்மை எல்லாம்
வந்து சேருமே!..


பதினெட்டுப் படிகள் காணக்
கண்கள் ஏங்குதே..
என்று கூடும் என்று விழி
நீரும் தேங்குதே..
தேவதேவன் கதிர்முகத்தில்
நகையும் மலருதே..
திருக்கரத்தில் நல்கும் வரமும்
நாளும் வளருதே..
சாமி சாமி சாமி என்று
இதயம் துடிக்குதே...
ஏழை மனமும் இருந்து ஐயன்
புகழைப் படிக்குதே!...
ஃஃஃ

ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை
வழிபடும்
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
வேண்டிக் கொள்வோம்!..

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
ஃஃஃ

19 கருத்துகள்:

 1. அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.  சென்ற வருடம் சபரிமலை சென்று வந்தீர்கள் இல்லையா?  ஐயனை நானும் தரிசித்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி..

   சபரிமலைக்குச் சென்று வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன..

   என்ன பிழை செய்தேனோ.. என்று ஏங்கிக் கிடக்கிறது மனம்...

   நன்றி..
   சாமியே சரணம்...

   நீக்கு
 2. அருமையான பாமாலை சூட்டி ஐயனை வணங்கி விட்டீர்கள்.
  நானும் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.
  தென்றலாக ஐயன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   வாழ்க நலமுடன்..
   சாமியே சரணம்...

   நீக்கு
 3. மிக அருமையான பாடல். ஸ்வாமியே சரணம் ஐயப்பா! 2018 ஆம் ஆண்டில் பையர் பிரார்த்தனையை நிறைவேற்றச் சென்று விட்டு வந்தார். இந்த வருஷம் மாலை போட்டுக்கொள்ள முடியாது. சூழ்நிலை! ஐயப்பன் அருள் அனைவரையும் இக்கொடிய நோயிலிருந்தும் கடுமையான சூழ்நிலையில் இருந்தும் காப்பாற்றட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   தங்களது மகன் சபரி மலைக்கு சென்று வந்தது பற்றி சென்ற ஆண்டின் பதிவில் சொல்லியிருந்தீர்கள்...

   ஸ்வாமி அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்...

   சாமியே சரணம்...

   நீக்கு
 4. நல்லா எழுதியிருக்கீங்க. சபரிமலை தரிசனம் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   சாமியே சரணம்..

   நீக்கு
 5. ஐயப்ப தரிசனம் மகிழ்வினைத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் பாடல் அருமை துரை அண்ணா.

  கார்த்திகை மாதம் மாலையணிந்து!! அதான் சபரிமலை பதிவு! நல்லாருக்கு துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நேரம் சரியாக அமைய வில்லை... அதிக வேலை... இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்...

   எல்லாம் ஐயன் அருள்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. சபரிமலை சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன.

  நீங்கள் எழுதிய அருமையான இனிய பாடலுடன் கூடிய ஐயப்பன் தரிசனம் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   நானும் மலைக்குச் சென்று நாலைந்து வருடங்கள் ஆகி விட்டன... விரத காலத்தில் வாரம் ஒரு பாட்டு தரவேண்டும் என்று ஆவல்...

   ஐயன் அருள் கூடி வர வேண்டும்...
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..