நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 20, 2020

காவல் நாயகம்

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
காணொளி வழியாக
தென் தமிழகத்தின்
காவல் நாயகமாகிய
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி 
தரிசனம்


திவின் முதலில்  
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி...

பாபநாசம் தாமிரபரணிக் கரையில்
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலில்
விளங்கும் திருமேனியாகும்..

மேலவாசல் பூதத்தார் என்று
கொண்டாடுகின்றார்கள்..

கோயிலிலும் தனியாக
சங்கிலி பூதத்தார் சந்நிதி உள்ளது...

பூதத்தார் ஸ்வாமியின்
அருகில் இருப்பது
மணி விழுங்கி மரம்...
நேர்ச்சைக்காக கட்டப்படும்
மணிகளை எல்லாம் சிலமாதங்களில்
அந்த மரமே உள்வாங்கிக்
கொள்கிறது...
.....

காணொளியில் 
குமரி மாவட்டத்தில்
பூதப்பாண்டி அருகே கடுக்கரை செல்லும்
வழியில் மலையடிவாரத்தில் உள்ள
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் தரிசனம்..

சங்கிலி பூதத்தார் ஸ்வாமியின்
வரலாறு சில மாற்றங்களுடன் சொல்லப்படுகின்றது...

ஆயினும்
நம்பி நிற்போர்க்கு
நல்லருள் புரிந்து
நல்வழி காட்டுகின்றார்...

இந்த காணொளிகளை
வலையேற்றியவர்கள்
சிங்கம்பட்டி ஜமீன் மறவர் கூட்டம்
அவர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


திருச்செந்தூர்
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி
திருக்கோயிலின்
காவல் நாயகம் இவரே...

மேல கோபுரத்தின் வடக்குப் புறமாக
பிரம்மாண்ட சுதை வடிவில் 
வண்ணமயமாக விளங்குகின்றார்..

திருச்செந்தூர் கோயிலுக்குச்
செல்லும் போதெல்லாம்
சங்கிலி பூதத்தாரைக்
கைதொழாமல் திரும்புவதே இல்லை..
***

ஸ்ரீ சங்கிலி பூதத்தார் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. அபிஷேகம் முடிந்து அலங்காரத்தில் அற்புதமாக ஜொலிக்கிறார் ஸ்வாமி.  கம்பீரம்.  காலையில் அற்புத தரிசனம்.  மனதுக்கு தெம்பை ஊட்டும் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மணிவிழுங்கி மரம் எனக்கு புதிய தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      2018 ஜூன் மாதம் விடுமுறையில் பாபநாசம்/ சொரிமுத்து ஐயனார் கோயில் தரிசனம்...
      மே மாதப் பதிவில் ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

      மணி விழுங்கி மரம் - இலுப்பை மரமாகும்..

      நீக்கு
  3. மணி விழுங்கும் மரம் அதிசய தகவல் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      2018 மே மாதப் பதிவில் இதைப் பற்றி கொஞ்சமாகச் சொல்லியிருக்கிறேன்..
      அப்போது சங்கிலி பூதத்தார் சாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தன... அருகில் சென்று விவரமாக படம் எடுக்க முடியவில்லை...

      இனியொரு சமயம் நேரம் கூடி வருவதற்கு காத்திருக்கிறேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சங்கிலி பூதத்தார் படங்கள் அபிஷேகம், அலங்காரம் என பக்தியாய் காணொளி நன்றாக உள்ளது. கற்பூர ஒளியில் மனதாற பிரார்த்தனை செய்து கொண்டேன். மணிகள் விழுங்கும் மரம் பற்றி பிரமிப்பான தகவல் அறிந்து கொண்டேன். காவல் தெய்வங்கள் உலகம் நலம் பெற அனைவருக்கும் காவலாக இருந்து பிணிகளையகற்றி காப்பாற்ற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      2018 மே மாதப் பதிவில் இதைப் பற்றி கொஞ்சமாகச் சொல்லியிருக்கிறேன்..
      அப்போது சங்கிலி பூதத்தார் சாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தன...
      அருகில் சென்று விவரமாக படம் எடுக்க முடியவில்லை...

      இனியொரு சமயம் நேரம் கூடி வருவதற்கு காத்திருக்கிறேன்..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அபிசேக ஆராதனை காணொளிகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. காணொளிகள் வழி சிறப்பு தரிசனம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அட! எங்க ஊர்ப்பக்கம். கடுக்கரை செல்லும்வ் வழியும் கடுக்கரை எல்லாம் ரொம்ப அழகான இடங்கள் பசுமையான இடங்கள். இப்போது எப்படி இருக்கின்றனவோ?

    காணொளி கண்டேன். அழகாக இருக்கிறார் அலங்காரம் சிறப்பாக இருக்கிறது.

    மணி விழுங்கும் மரமா? ஆச்சரியமான தகவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      2018 மே மாதப் பதிவில் இதைப் பற்றி கொஞ்சமாகச் சொல்லியிருக்கிறேன்..
      அப்போது சங்கிலி பூதத்தார் சாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தன... அருகில் சென்று விவரமாக படம் எடுக்க முடியவில்லை...

      இனியொரு சமயம் நேரம் கூடி வருவதற்கு வேண்டிக் கொண்டு காத்திருக்கிறேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மிக அழகான தரிசனம். மனது மகிழ்ச்சியை தருகிறது.
    அபிஷேக ஆராதனை, அலங்காரம் மிக அருமை.
    சங்கிலி பூதத்தார் எல்லோருக்கும் நல்லதை அருள வேண்டிக் கொண்டேன்.

    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இனிய வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      வாழ்க வளமுடன்...

      நீக்கு
  9. சங்கிலி பூதத்தார் இப்போத் தான் கேள்விப் படறேன். சொரிமுத்து ஐயனார் தெரியும். மணி விழுங்கி மரமும் இன்னிக்குத் தான் தெரியும். சுருக்கமாக சங்கிலி பூதத்தார் வரலாறைச் சொல்லி இருக்கலாமோ? அழகான காணொளி. தரிசனம் நன்கு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      ஸ்ரீ சங்கிலி பூதத்தார் வரலாற்றினை
      அடுத்து வரும் பதிவுகளில் சொல்வதற்கு முயல்கிறேன்..

      தங்கள் அன்பினுக்கு நன்றியக்கா..

      நீக்கு
  10. சங்கிலி பூதத்தார்.. பெயரே புதுமையாக இருக்கு.

    மரம் மணிகளை விழுங்குகிறதோ? நம்ப முடியவில்லை என்னால்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நேர்ந்து கொண்டு கட்டப்படும் வெங்கல மணிகளை நாளடைவில் தன்னுள் பொதிந்து கொள்கிறது அந்த இலுப்பை மரம்..

      இது பாபநாசம் ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயில் உள்ளது... நேரில் பார்க்கலாம்..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. காலை வணக்கம்.. இன்னாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...

      வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அன்பு துரை,
    இனிய வெள்ளி வணக்கம்.
    அருமையான காணொளி.
    சங்கிலிபூதத்தார் அனைவரையும் காக்கட்டும்.
    அறியாத பல செய்திகளை அருமையாகச் சொல்கிறீர்கள். எப்போது தரிசனம் கிட்டுமோ.
    காவல் தெய்வங்கள் இருப்பதாலேயே நம் ஊர் இன்னும் பிழைத்திருக்கிறது.
    நன்றி மா.
    காணொளி மிக அருமை.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

    2018 ஜூன் நெல்லை, பாபநாசம் திருக்கோயில்களுக்குச் சென்றிருந்தபோது
    ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலிலும் தரிசனம் செய்தோம்..

    ஸ்ரீ சங்கிலி பூதத்தார் தரிசனம் 2005 ல் கிடைத்தது.. ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலிலும் சந்நிதி கொண்டுள்ளார்..

    மணி விழுங்கி மரமும் மேலவாசல் பூதத்தார் சாமியும் ஐயனார் சந்நிதிக்கு அருகிலேயே அமைந்துள்ளனர்...

    அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..