நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 08, 2020

இனியது கேட்கின்..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வெண்டும்..
***

இன்றைய பதிவில்
தமிழ் மூதாட்டியாகிய
ஔவையார் அருளிச் செய்த
திருப்பாட்டு...



தமிழறிந்த நல்லோர்களிடமிருந்து
பிரிக்க இயலாதவர்
ஔவையார்...

அவரால் தமிழ்க்கன்னி
மேலும் எழிலுற்றாள்
என்றால் மிகையாகாது...

பள்ளி சென்று அறியாத
மூடர்களுக்கும் புரியும்படியாக
சுத்தம் சுகாதாரம் இவற்றின் அடிப்படையாக
ஔவையார் சொல்லிச் சென்ற வார்த்தைகள்
மெத்தப் படித்தவர்களுக்குப் புரியாமல்
போனதுதான் விசித்திரம்...

உதாரணத்துக்கு
வைகறைத் துயில் எழு..
கந்தையானாலும் கசக்கிக் கட்டு..
கூழானாலும் குளித்துக் குடி..
மீதூண் விரும்பேல்.. 
என்பனவாகிய நிறைமொழிகள்...

வெற்றிலை புற்று நோயின் காரணி!.. - என்று
மருத்துவ பயிலும் தம் மகனுக்கு
பயிற்றுவிக்கப்படுவதாக
சில தினங்களுக்கு முன் மதிப்புக்குரிய
காவியக் கனல் ஆதிரா அவர்கள்
எங்கள் பிளாக்கில் குறிப்பிட்டிருந்தார்கள்... 

விஷம் கக்கும் ஜந்துகள்
நமது நாட்டில் நமது கண் முன்பாகவே
நடமாடுவது போதாது என்று
உலகின் பிறபகுதிகளிலும்!...

அது கிடக்கட்டும்!...



ஏதோ ஒரு சமயத்தில்
அருள் இளங்குமரன் ஔவையாரைச் சோதித்து
விளையாடியதாகவும் அதற்கு
 ஔவையார் அழகாக விடையளித்ததாகவும்
நம்மிடையே வரலாறு ஒன்று உண்டு..

ஔவையாரின் அமுத மொழியில்
அற்புதமான வரிகள்!..


உள்ளார்ந்து சிந்திக்க சிந்திக்க
வாழ்வின் உண்மைகள் புரியும்..



அரியது, கொடியது, பெரியது, இனியது - எனும்
ஔவையாரின் பாடல் வரிகளுக்கு
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
கிழவியும் குழவியும் என்ற தலைப்பில்
விரிவுரை செய்திருக்கின்றார்..
***



பாடலின் நிறைவாக வருகின்ற
என்றும் புதியது!.. என்ற வரிகள்
கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணம்...

மற்றபடிக்கு ஔவையாரின் அமுதத்தமிழ்

அனைவருக்கும் விளங்கும் என்பதால்
பாடலின் வரிகளை இங்கே தரவில்லை.. 





அள்ளி அள்ளி உண்ண உண்ண 
உனது தமிழ் இனியது!..
என்கிறார் கவியரசர்..

அது முற்றிலும் உண்மை..

ஔவையார் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. தமிழமுது.

    ஔவையாரின் இளவயதுப் படத்தை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் போல...!

    சிவம் நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. அது சரி...

    ஔவையார் தான் இளமையைத் துறந்தவர் ஆயிற்றே...

    அவருக்கு ஏது இளவயதுப் படம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்திருந்தால்தானே துறக்க முடியும்?!!

      நீக்கு
  3. ஔவையாரின் பாடல் என்று அரிது, இனிது வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதிவு மிகவும் அருமை.
    ஒளவையின் அமுதமொழி வார்த்தைகள் பகிர்வும் மற்றும் திரை ஒளவையின் பாடல்கள்மற்றும் முருகன் ஸ்ரீதரின் நடிப்பும் கே.பி சுந்தராம்பாள் அவர்கள் நடிப்பும் மிகவும் அருமையான காட்சிகள், பார்த்தேன் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  6. ஔவையின் அமுத மொழிகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் தானோ என்னமோ இப்போதைய ஆட்சியாளர்கள் அது பாதுகாப்பாகவே இருக்கட்டும் என ஒதுக்கிவிட்டனர் போலும். திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையிலே நேரிலே கேட்டிருக்கேன் இந்த விளக்கத்தை. கே.பி.சுந்தராம்பாள் ஔவையாரை நம் கண்முன்னே உயிருடன் உலவ விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  7. இந்த ஔவைப் பாட்டியின் கதையை மீண்டும் பதிப்பித்து, என் வயதில் அறுபதைக் குறைத்துவிட்டீர்கள் நண்பரே! சாகா வரம் தரும் நெல்லிக்கனியை உன்டதாலோ என்னவோ ஔவையின் வார்த்தைகள் நமக்கும் சாகா வரத்தைத் தந்துவிடுகின்றன.

    பதிலளிநீக்கு
  8. ஔவைப் பாட்டியின் சிறப்பான வரிகளோடு நல்லதொரு பதிவு. காணொளியும் கண்டு ரசித்தேன்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..