நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 28, 2019

மார்கழி தரிசனம் 12

தமிழமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவற்றுள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து..(125)
***

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 12


கனைத்து கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ வானமுட்டிப்பெருமாள் - கோழிகுத்தி - மயிலாடுதுறை   
கொண்டது உலகம் குறளுருவாய்க் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக் கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு.. (2199)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருக்கடவூர்
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி - ஸ்ரீ பாலாம்பிகை 
போராருங் கரியின் உரிபோர்த்துப் பொன்மேனியின் மேல்
வாராரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆராஎன் அமுதே எனக்கார் துணை நீயலதே..(7/28)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஸ்ரீ அபிராமவல்லி அம்பிகை 
அபிராமவல்லியின் மீது மாசற்ற அன்பு கொண்டு
திருக்கோயிலில் பணி செய்து வாழ்ந்த
சுப்ரமணிய குருக்களின் பொருட்டு
தை அமாவாசை இரவு வானில் 
நிலவு எழுந்த திருத்தலம்..

மேற்கு நோக்கி விளங்கும் திருக்கோயில்..
எத்தனையோ அற்புதங்களைத் 
தன்னகத்தே கொண்டிருக்கின்றது..
***

திருவாசகத் தேன்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக்கேனே..
-: மாணிக்கவாசகர் :- 
***

தேவி தரிசனம்
ஸ்ரீ பூங்குவளைக் கண்ணி 
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம்மடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம்
சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே.. (041)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம
* * *

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான தரிசனம். ஒவ்வொரு முறை உங்கள் பதிவு பார்க்கும்/படிக்கும் போதும் மனதில் ஒரு நிம்மதி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      எல்லாரும் இன்புற்று வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இன்று அருமையான தரிசனம். நான் வெகு காலம் இருந்த மாயவரம் பக்கத்தில் உள்ள கோவில்களை போட்டு என் நினைவுகள் மாயவரத்தையும் அந்த கோவில்களையும் நினைவால் வலம் வர வைக்கிறீர்கள் .
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. முதல்படம் அழகோ அழகு! வானமுட்டிப் பெருமாளைப் பார்க்கணும்னு ஆவல் அதிகம் ஆகிறது. நல்லதொரு தரிசனம் காலை வேளையில். உங்கள் இணையப் பிரச்னைகள் தீர்ந்து வேகமாக இணையம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      நானும் வானமுட்டிப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும்...

      மிக்க மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..