நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 11, 2019

கலை விருந்து 5

கடந்த நான்கு நாட்களாக உடல் நலமில்லை..

விடுமுறைக்குப் பின் மீண்டும் கல்லூரி உணவகம் திறக்கப்பட்டுள்ளது...
இந்நிலையில் தள நிர்வாகி விடுமுறையில் எகிப்திற்குச் சென்று விட -
அந்த வேலையும் இலவச இணைப்பாகச் சேர்ந்து கொண்டது...

 புதிய பதிவுகள் இன்று முதல்...


இன்றைய பதிவில்
தஞ்சை பெரிய கோயிலில் இறை தரிசனம்..

தஞ்சை பெரிய கோயிலைப் பற்றிய தொடர் பதிவுகள்...

கலை விருந்து 1 
கலை விருந்து 2 
கலை விருந்து 3 
கலை விருந்து 4 

பதிவில் படங்களைக் காணும்போதே தங்களுக்கு
விவரங்கள் விளங்கும் என நினைக்கின்றேன்...

சில குறிப்புகள் மட்டுமே தந்திருக்கின்றேன்..

தேவைப்படும் எனில் தொடரும் பதிவுகளில் விவரங்கள்...

ஸ்ரீ ஆனந்த விநாயகர் 
பெரிய கோயிலுக்குள் நுழையுமுன்பாக கோட்டை வாசலில்
தென்புறமாக நின்ற திருக்கோலத்தில் - ஸ்ரீ ஆனந்த விநாயகர்...

ஸ்ரீ ஆனந்த விநாயகர் என நான் பாவித்துக் கொள்கிறேன்...

இந்த மூர்த்தியைக் கண்டதும் அல்லல்கள் அகன்று விடுவதாக உணர்வு..
அல்லல்கள் அகன்று விட்டால் - ஆனந்தம் தானே!...


பெரிய கோயில் கோட்டை வாசலில் வடபுறமாக நின்ற
மயிலுடன் கூடிய - ஸ்ரீ பாலசுப்ரமண்யன்....



ஸ்ரீ நாகராஜன் 
தென்புறமுள்ள நாகலிங்க மரம் 
சிவமணி மாலையுடன் நந்தியம்பெருமான் 

நந்தி மண்டபத்தினைக் கடந்து ஆலயத்துக்குள் நுழையும் முன்பாக 
முன் மண்டபத்தின் தென்புறத்தில் ஸ்ரீ மகா கணபதி..
வடபுறமாக ஸ்ரீதுர்காம்பிகை..

துர்காம்பிகைக்கு நேரெதிரே ஸ்ரீ காலவைரவர்..
ஸ்ரீ வைரவருக்குப் பின்புறமாக ஸ்ரீ சனைச்சரன்..

திருநள்ளாற்றில் திகழ்வது போல
ஸ்வாமிக்கும் அம்பாள் சந்ந்திக்கும் நடுவில்
கிழக்கு முகமாக ஸ்ரீ சனைச்சரன் விளங்குவது சிறப்பு..

ஸ்ரீ வைரவரையும் ஸ்ரீ சனைச்சரனையும் சேர்த்து வலம் வந்து வணங்கலாம்...

ஸ்ரீ மகா கணபதி 
கிழக்கு முகமாக ஸ்ரீ துர்காம்பிகை 
பத்துத் திருக்கரங்களுடன் ஸ்ரீ காலபைரவர் 
கிழக்கு முகமாக ஸ்ரீ சனைச்சரன் 
திருச்சுற்றில் வன்னி மரத்தின் நிழலில் சிறியதாக ஸ்ரீ ஆஞ்சநேயர்..
மிக சமீபத்திய கட்டுமானம்...


ஸ்ரீ ஆஞ்சநேயர் 
அடுத்து சரக்கொன்றை மரம்..
அதன் அருகில் ஸ்ரீவராஹி அம்மனின் சந்நிதி..



திருச்சுற்றில் நிருதி மூலையில் தனிச் சந்நிதியில் ஸ்ரீ ஆதிகணபதி...
இவர் சோழனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்கின்றனர்...

ஸ்ரீ ஆதி கணபதி 
பிள்ளையார் சந்நிதியை ஒட்டினாற்போல வடபுறமாக 
நவ லிங்கங்கள்...


தொடர்ந்து நான்கு வரிசைகளாக 108 சிவலிங்கங்கள்..


தொடரும் பதிவுகளில்
மேலும் சில படங்களைக் காணலாம்...

வாழ்க நலம்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

40 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    உடல் நலமில்லையா? என்ன ஆச்சு? உடல்நலத்தில் கவனம் வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு..

      நாலு நாட்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு..
      நிற்க விடவில்லை.. உட்கார விடவில்லை..
      இப்போது சரியாயிற்று..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. முதலில் உடல் நலம் சரியில்லை என்றதும் விசாரிக்க இருந்த போது ஸ்ரீராமிற்கு நீங்க கொடுத்த பதில் கருத்து கண்ணில் பட்டுவிட்டது துரை அண்ணா. சரியாகிவிட்டது மகிழ்ச்சி.

      அண்ணா பார்த்துக் கொள்ளுங்கள் உடல் நலனை.

      கீதா

      நீக்கு
    3. அன்பின் கீதா...

      சாதாரண ஜலதோஷம் தான்.. ஆனாலும் சிரமப்படுத்தி விட்டது...
      இப்போது நலமே...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. ஆனந்த விநாயகரின் அதிகாலை தரிசனம் என் இப்போதைய அல்லலை நீக்க அருள் புரிய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐங்கரன் தரிசனம் அல்லலைத் தீர்க்கும்....

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. நான் இப்போது வந்த போது முதலில் ஆனந்தவிநாயகர்தான் கண்ணில் பட்டார். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நானும் பளஸ் ஒன். எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    3. அன்பின் கீதா...

      சில மாதங்களுக்கு முன், அன்புள்ள பாஸ் - என்ற கதையில்
      இந்த ஆனந்த விநாயகரை கதாநாயகியின் இஷ்ட தெய்வமாக வைத்து எழுதியிருப்பேன்...

      ஆனந்த விநாயகர் அனைவரையும் காத்தருள்வாராக!...

      நீக்கு
  3. பிரம்மாண்ட நந்தி திருவுருவம் அழகு. சிபாரிசு செய் நந்தியம்பெருமானே... அப்பாவிடமும் பிள்ளைகளிடமும் அருள்புரிய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      கண் கண்ட மூர்த்தி..
      அனைவருக்கும் அருள் புரியட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். காலையில் நல்ல தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இப்போது நலம் என்று அறிந்து மகிழ்ச்சி.
    உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ஸ்ரீ வராஹி அம்மன் என்றும் அலங்காரமாய் தான் காட்சி தருவார். எப்போது தஞ்சை கோவிலுக்கு போனாலும் அவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டு இருக்கும் பார்த்து இருக்கிறோம். சந்தனக் காப்பில் செவ்வாய்க்கிழமையில் தரிசனம்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      வருடம் ஒரு தடவையாவது ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து விடுவோம்..

      கண் கண்ட தெய்வம் அவள்..

      தங்களது கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தஞ்சைக்கோயில்ப் படங்கள் அத்தனையும் அழகு! ஸ்ரீ வராஹி அம்மன் பலருக்குக் குலதெய்வமாக இருந்து அருள் பாலிக்கிறார். புது ஆஞ்சநேயரையும் தரிசித்துக் கொண்டேன். தஞ்சைக் கோயில் போய்ச் சில வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் படங்கள் மீண்டும் போகும் ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      அந்த ஆஞ்சநேயர் நூறாண்டுகளுக்கு மேற்பட்டவர்..

      தஞ்சைக்கு வரும் நாளைச் சொல்லுங்கள்.. என் மகனை உதவிக்கு அனுப்பி வைக்கிறேன்...

      வருக.. வருக..

      நீக்கு
  7. நேற்றுத் தான் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் ராஜராஜ சோழன் குறித்தும், தஞ்சைக்கோயில் கட்டுமானங்களில் உள்ளே காணப்பட்ட கற்களில் பொறிக்கப்பட்டிருந்த கோயில் சிற்பிகளின் பெயர், தலைமைச் சிற்பியான குஞ்சரமல்லனுக்கு ராஜராஜன் தன்னுடைய அபிஷேஹப் பெயரை அளித்து ராஜராஜப் பெருந்தச்சன் என கௌரவித்தது எல்லாவற்றையும் பற்றி விபரமாகக் கூறினார். இப்போதைய செய்திகளைப் படித்து நொந்து போயிருந்த மனதுக்கு அது ஆறுதலை அளித்தது. இங்கே இன்று உங்கள் படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா..
      அந்த காணொளியை அடுத்த பதிவில் இணைப்பதற்கு முயற்சிக்கிறேன்...

      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. மறந்துட்டேனே! உங்கள் உடல்நலம் விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்! நல்லபடிப் பணியாற்றவும் பணியில் பிரச்னைகள் வராமல் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி...

      சாதாரண ஜலதோஷம்.. தலைவலி தான்.. இப்பொழுது ஓரளவுக்கு சரி.. வெயில் கடுமை...

      தங்களது பிரார்த்தனைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அன்பு துரை செல்வராஜு இத்தனை விளக்கங்களோடு
    தஞ்சைப் பெருங்கோயிலைப் பற்றிப் படித்ததில்லை.
    அத்தனை படங்களும் மிக அருமை.
    நான் தஞ்சைக் கோவில் சென்று 49 வருடங்களுக்கு மேல் இருக்கும்.
    இப்போது பார்க்கும் போது அதிசயங்களைக் காண்பது போல்
    மகிழ்ச்சியாக இருக்கிறது, மனம் நிறை நன்றி மா.
    நலம் அடைந்ததை அறிந்து மகிழ்ச்சி.
    இனிக் கவனமாக இருக்கவும். நல்ல உணவும்,
    நல் வாழ்க்கையும் அமைய ஆசிகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா..
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..

      அடுத்த பதிவும் தஞ்சைக் கோயிலைப் பற்றித்தான்...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  11. அழகிய தரிசனங்கள் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. தஞ்சைக் கோவில் படங்கள் அருமை...மீண்டும் செல்லவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      மீண்டும் வருக.. வருக..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. தஞ்சை பெரிய கோவிலுக்கு பல தடவை சென்றுள்ளோம் இனி பதிவுகளில்தான்காண்முடியும்போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      மிக்க நன்றி...

      நீக்கு
  16. தஞ்சைக் கோயிலின் படங்கள் அனைத்தும் மிக மிக அருமை. நல்ல தரிசனமும் கிடைக்கப் பெற்றோம். விவரங்களும் தெரிந்து கொண்டோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் - கீதா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. பதில்கள்
    1. அன்பின் வெங்க்ட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. 108 சிவலிங்கம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..