நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 02, 2019

பூம்புகார் 3

ஒருவழியாக மாலை நாலு மணிக்கு மேல் சிலப்பதிகாரக்கூடம் திறக்கப்பட்டது...

அதற்கு அனுமதிச் சீட்டு கட்டணத்துடன்...
இந்தப் பாவை மன்ற வளாகத்தில் வாசலில் இருந்த
அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது...

அனுமதிக் கட்டணம் எவ்வளவு என்பது மறந்து போயிற்று..


கொஞ்சம் சுத்தமாக இருந்தது அந்தப் பூங்கா...
பசுமையான குரோட்டன்ஸ் வகைச் செடிகள்...
ஒரு சில வாதநாராயண மரங்கள்...
அவ்வளவே...

பூங்காவின் அந்தப் பக்கம் கரிகால் சோழன் சிலை..
இந்தப் பக்கம் இளங்கோவடிகள் சிலை...

அந்தக் காலத்திலேயே
பூம்புகாரில் எழுநிலை மாடம் இருந்ததாக வரலாறு..

அதன் நினைவாக இந்தக் கலைக்கூடம்..
ஆனால் ஐந்து மாடங்கள் தான்!...

கேமரா மற்றும் அலைபேசி வகையறாக்களுக்கு தடையில்லை...

வாருங்கள் - கலைக்கூடத்திற்கு...


உள்ளே நுழைந்ததும் பழங்காலத்து இசைக் கருவிகள்
மற்றும் சில தொன்மையான பொருட்கள் காணக் கிடைக்கின்றன...

படிந்திருக்கும் புழுதி கூட அகற்றப்படவில்லை///
காரணம் அவை பழைமையானவைகளாம்!..

நடுமுற்றத்துடன் கூடிய சதுரமான அமைப்பு...
சுவற்றில் சிலப்பதிகார நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன...



பூம்புகாரின் காட்சிகள்  
ஒவ்வொரு சிற்பத் தொகுப்பின் கீழும்
அதன் விளக்கத்தை எழுதியிருக்கின்றார்கள்...

அவற்றில் வண்ணம் உதிர்ந்தவை சில...
எழுத்துக்களின் மீது கிறுக்கி அழிக்கப்பட்டவை பல...

அங்காடித் தெரு 
கோவலன் கண்ணகி திருமணம்
மாசறு பொன்னே.. வலம்புரி முத்தே.. 
மாசறு பொன்னே.. வலம்புரி முத்தே..
காசறு விரையே.. கரும்பே.. தேனே..
அரும்பெறல் பாவாய்.. ஆருயிர் மருந்தே..
பெருங்குடி வணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ..
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!..
யாழிடைப் பிறவா இசையே என்கோ..
தாழிருங் கூந்தல் தையால் நின்னை!...
-: மனையறக் காதை :-




இந்திர விழா அறிவிப்பு  

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் 
மாதவி மனையில் கோவலன் 
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்..
-: கடலாடு காதை :-

ஒரு சில சிற்பங்கள் தெள்ளத் தெளிவாக விளங்குகின்றன...
இருந்தாலும் ஏனைய சில காட்சிகள் புரியவில்லை...

அதனால் தான் எல்லாவற்றுக்கும் என்னால் விளக்கம் அளிக்க இயலவில்லை..

ஆகவே படங்களைப் பார்த்து உணர்ந்து கொள்க...

படங்கள் எல்லாம் தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்...
மேலதிக படங்கள் அடுத்த பதிவினில்!...

வாழ்க நலம்
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    தூசி படிந்திருந்தால்தான் அவை பழங்காலத்தியவை என்று மக்கள் நம்புவார்களாமா? ஹா...ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. அடுத்தடுத்து அனுபவித்து படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

    அழகாய்த்தெளிவாய்...

    அனைத்துப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. சிலப்பதிகாரம் கண் முன் வருவது போலச் சிற்பங்கள்.
    கண்ணகியின் சோகம் மனதில் மண்டுகிறது.

    இசைக்கருவிகளைத் துடைத்து வைக்கவில்லையா.
    அடப் பரிதாபமே.
    படங்கள் வரிசை மிக அழகு அருமை.
    மிக மிக நன்றி அன்பு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, அருமையான பொக்கிஷங்கள். எந்தக் காலத்துச் சிற்பங்கள்? கொஞ்சம் கொஞ்சம் அஜந்தா, எல்லோராவை ஒத்திருக்கிறது என்றாலும் பெண்களை வடித்திருப்பதில் வேறுபாடு காணப்படுகிறது. இதைப் பார்த்தால் கட்டாயமாய்ப் போய்ப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் அதிகம் ஆகிறது. பகிர்வுக்கு நன்றி. அழகான படங்கள். நன்றாகவும் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போய்ட்டு வாங்க, இட்லி மிளகாய்ப்பொடி, சப்பாத்தி சட்னியோட... அங்க சாப்பாடு கிடைக்காது.. கிராம்ம் போன்ற தோற்றம்...

      நீக்கு
    2. நான் வெளியே செல்கையில் கூடியவரை ஒரே வேளை சாப்பாடோடு நிறுத்திப்பேன். கோலாப்பூர் போனப்போத் தான் அன்னிக்கு மட்டும் 3 வேளையும் சாப்பிட்டேன். ஏனெனில் ஓட்டலில் அன்று தங்கினோம். ஆகவே பிரச்னை இருந்தாலும் சமாளிக்கலாம். அதுவே பயணம் அதுவும் இம்மாதிரிப் பயணம் என்றால் சுத்தபத்தமாகப் பட்டினி தான்! ஜூஸ் அல்லது மோர் . அநேகமா ஜூஸ் அல்லது இளநீர்!

      நீக்கு
  5. அழகான விளக்கமாக செல்கிறது தொடர்.
    படங்கள் மிகத்தெளிவு ஜி

    பதிலளிநீக்கு
  6. படங்கள் மிக அருமை... மாசறு பொன்னே.... பாடங்களில் படித்து நினைவுக்கு வந்தது...

    பதிலளிநீக்கு
  7. எனக்கு பூம்புகார் போன்ற இடங்களுக்குப் போகும்போது தோன்றுவது.... ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் சந்ததிகள், தாங்கள் அத்தகைய பின்புலம் கொண்டவர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்துகொண்டுவரும் அல்லவா? அவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள். என்றெல்லாம் யோசிக்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  9. இந்தச் சிலப்பதிகாரத்தில் கண்ணகி பாண்டியன் சபையில் நீதி கேட்கும் காட்சியைப் பள்ளியில் படிக்கையில் நாடகமாகப் போட்டோம். ஒன்பதாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்புனு நினைவு. என்னைப் பாண்டிய மன்னனாக நடிக்கச் சொல்ல நான் மறுத்தேன். பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டான் என நடிக்க மனது ஒப்பவில்லை. அந்த வயசில் அப்படி ஒரு சிந்தனை! வகுப்பில் ஆசிரியர்கள் அதைக் கேட்டுச் சிரித்ததும் நினைவில் இருக்கு. கண்ணகியாக நடிச்ச மீனாக்ஷி என்னும் பெண் உண்மையில் கண்ணகியாகவே மாறி விட்டாள். நான் பின்னாலிருந்து சிலப்பதிகாரப் பாடல்களை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் பாகத்தை ஏற்றேன். மேடைக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  10. வாயிலோயே வாயிலோயே
    அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
    இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
    கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
    அறிவிப்பாயே அறிவிப்பாயே

    இதை முதலில் நான் அறிவித்த உடன் கண்ணகி மேடையில் தோன்றி இதையே உணர்ச்சிகரமாகச் சொல்லணும். இந்தக் காட்சியில் அனைவருமே உணர்ச்சி வசப்பட்டோம்! :))))) அந்தப் பெண்ணை நெடுநாட்களுக்குக் கண்ணகி என்றே அழைத்துக் கொண்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
  11. திருவெண்காட்டில் இருக்கும் போது அடிக்கடி போய் வருவோம், மாயவரம் வந்தபின்னும் உறவினர்களுடன் போய் வந்து இருக்கிறோம். கரிகால் சோழன் சிலை, இளங்கோவடிகள்சிலை எல்லாம் பெரிதாக இருக்கும் பார்க்க வியப்பாய் இருக்கும் அப்போது. (1974)

    முதலில் மாதவி சிலை மட்டும் உள்ளே இருந்தது அப்புறம் சர்ச்சை எழும்பி கண்ணகி சிலையும் வைக்கபட்டது. புற்கள் சிலம்பு வடிவில் வளர்க்கப்பட்டு அதில் கண்ணகி, மாதவி சிலைகள் இருக்கும்.
    சுற்றிவர தொங்கு செடிகள் அழகாக பந்தல் அமைத்து கண்ணை கவரும்.

    இசைக்கருவிகள் வைத்து இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் பூம்புகார் நகரின் மாடல் செய்து வைத்து இருப்பார்களே கண்ணாடி பெட்டிக்குள்.


    படங்கள் எல்லாம் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள். நாங்கள் எடுத்த படங்கள் ஆல்பத்தில் இருக்கிறது.

    உங்கள் பதிவு பழைய நினைவுகளை கொண்டு வந்தது.

    பதிலளிநீக்கு
  12. பல முறை சென்றுள்ளேன்.இன்று உங்கள் பதிவுகளின் மூலமாக மறுபடியும் காணும் வாய்ப்பு. அருகே தமிழகத்திலேயே புத்த விகாரையின் எச்சங்களை பூம்புகாரில் காணலாம்.கண்டீர்களா? ஆயிரமாண்டுகள் வரலாறு பேசும் விகாரை பூம்புகாரின் பெருமை.

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அனைத்தும் மிக மிக அழகாகத் தெளிவாக இருக்கின்றன. நேரில் சென்றுப் பார்க்கத் தூண்டும் வகையில். விவரங்களும் அறிந்து கொண்டோம்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..