நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 01, 2019

பூம்புகார் 2

பூம்புகாரில் பாவை மன்றத்தைச் சுற்றி நிகழ்த்தப்படும்
அவலங்களைக் கண்டும் நிர்வாகம் - அவற்றை ஒழுங்கு படுத்த முனையவில்லையே அது ஏன்?...

தெரியவில்லை...
ஆனாலும் நிலவும் சூழ்நிலை அசாதாரணமானது..

பாவை மன்றத்திற்கு முன்னதாக சில படங்கள்...

கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட கண்ணகி தேவி
கண்ணகி சிலை பற்றி இணையத்தில் தேடியபோது கிடைத்த படம் தான் மேலே உள்ளது...

இதனை வலையேற்றியவர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி....


கடல் அரிப்பின் காரணமாக பழைய இடத்திலிருந்து சிலையை நகர்த்தி வைத்திருக்கின்றார்களாம்...

வைத்தது தான் வைத்தார்கள் - மண்டபம் ஒன்றினை எழுப்பி
அதனுள் கண்ணகி சிலையை வைத்திருக்கக் கூடாதோ?...

கண்ணகிக்கு எதிரே நீலத் திரைக் கடல்...

எதனாலோ நிம்மதி இல்லாமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றது...
நெடுங்கரையை அலைக் கரங்களால் அரித்துக் கொண்டிருக்கின்றது...





பாவை மன்றத்தின் சூழ்நிலையைப் பற்றி
சென்ற பதிவிலே சொல்லியிருக்கிறேன்...

மிக அருமையான கலைக்கூடம்...
சுற்றிலும் குளிர் நிழல் பரப்பும் குடைகளாய் மரங்கள்..

ஆயினும் பராமரிப்பின்றி பாழ்பட்டுக் கிடக்கின்றது...


நம்மைப் போல வெளியூர்களிலிருந்து வந்தவர்கள்
ஆங்காங்கே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள்..

ஆனாலும் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல்
கலி புருஷன் தனது கைவரிகையைக் காட்டிக் கொண்டிருந்தான்...

பாவை மன்றமா அல்லது பாவ மன்றமா தெரியவில்லை!...

இதோ தங்களுக்காக பாவை மன்ற சிற்பங்களின் படங்கள்...





ஒவ்வொரு சிற்பத்திற்குக் கீழும் திருக்குறள் ஒன்றினை எழுதி வைத்திருக்கின்றார்கள்..

அதனை ஒட்டி தமது சேட்டைகளைக் காட்டியிருக்கின்றார்கள் பலர்..

எனவே அவற்றைப் படம் எடுக்க வில்லை...



நான் கவனித்த வரைக்கும் -இந்த சிற்பங்கள்
இதுவரைக்கும் யாராலும் சேதப்படுத்தப் படாமல் இருக்கின்றன...

இனி வருங்காலம் எப்படியோ!...



இந்த சிற்பங்கள் எல்லாம்
கண்ணகியையோ மாதவியையோ குறிப்பவை அல்ல...

ஆதலால் கலை வளர்த்த நங்கையராகக் கொள்ளலாம்...


பாவை மன்றத்துடன் ஏனைய இடங்களையும் சீரமைத்து
மீண்டும் பழைய பொலிவுடன் விளங்கச் செய்வதற்கு
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?...

தெரியவில்லை...


புகார்க் காண்டம்
நன்னீர்ப் பொய்கையின் அழகு..

அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறுந் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப...
-: இளங்கோவடிகள் :-

தொடரும் பதிவினில்
சிலப்பதிகாரக் கலைக் கூடத்தின் 
அழகினைக் காணலாம்...
***

இன்று உழைப்பாளர் தினம்...

உழைப்பவர் கைகளாலேயே
உலகம் உயிர் பெறுகின்றது...
உயிர் பெறும் அதனாலேயே
புகழ் பெறுகின்றது..

அனைவருக்கும்
அன்பின் இனிய நல்வாழ்த்துகள்...

வாழ்க நலம்
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. அழகான சிற்பங்கள். பாழ்படுத்தாமல் வைத்திருப்பதற்கே வணங்கிக்கலாம். மற்றபடி நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர் இல்லை. அங்கே காவல்துறையின் கண்காணிப்பு இருந்தால் இப்படி எல்லாம் நடக்காதோ? இத்தகைய அரிய சுற்றுலாத்தலத்தை இன்னமும் மேன்மைப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம்மை நாமே கெடுத்துக்கொள்வதில் வல்லவர்கள் நாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவுடன் வணக்கம்...

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

      ஆனாலும் எதனால் அலட்சியம் என்பது தெரியவில்லை...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் ஜி.

    அழகிய சிற்பங்களின் படங்கள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. காவல் நிலையம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருக்கிறது கீதா.
    சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட வேண்டும்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது .
    தை அமாவாசை, ஆடி ஆமாவாசை, பெளர்ணமி எல்லாம் மக்கள் அதிகமாய் கூடுவார்கள். பூம்புகார் கடலில் குளித்து விட்டு திருவெண்காடு வந்து முக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி செல்வார்கள்.
    பட்டினத்தார் தாயை வாழைமட்டை வைத்து தகனம் செய்யும் காட்சி விழா கடர்கரையில் நடைபெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி..

      பொன்னையும் பொருளையும் தூசியாக உதறிவிட்டுப் போன பட்டினத்தடிகள் வாழ்ந்ததும் இந்த காவிரிப்பூம்பட்டினத்தில் தான்...

      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. புகைப்படங்கள் அழகு. தெளிவாக, அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பாவை மன்றம் பாவ மன்றமனானது இந்த சிற்பங்களினால் கூட இருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.... இந்த பின்னூட்டம் கண்டு சிரிக்கவைத்துவிட்டீர்கள். என் எண்ணம்... இந்தச் சிற்பங்களால் என்ன பயன் என்பதுதான். பாதுகாக்கப்படவேண்டிய சிற்பங்களைப் பாழ்படுத்தி புதுச் சிற்பங்கள் எதற்கு?

      நீக்கு
    2. எழுத்துப் பிழையாக பாவ மன்றம் என்று தட்டச்சு நேர்ந்தது..
      இதுவும் சரிதான் என்று தொடர்ந்து பதிவு செய்தேன்..

      ஆனாலும் இவற்றினால் தான் பாவங்கள் என்று சொல்வதற்கில்லை..

      நெல்லை அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  7. படங்கள் அசத்தல்...

    தொழிலாளி தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  8. சிலைகள் அனைத்தும் நல்ல வடிவு.
    கண்ணகி கையில் சிலம்பு இல்லையே.

    பூம்புஹார் போய் வந்தவர்கள் சொன்னது அங்கு காணப்பட்ட
    அலட்சியத்தைத்தான்.
    எத்தனை கோடி பணம் இங்கே கொட்டினார்களோ.

    கடற்கரை,மாதவி கோவலன் பிரிந்ததைப் பார்த்த துயரத்தில் சோக கீதம் பாடுகிறதோ.
    இல்லை மதுரைக்குச் சென்று வாழ்விழந்தாயே என்று கண்ணகியைக் கேட்கிறதோ.

    பதிலளிநீக்கு
  9. சிற்பங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன உங்கள் படங்களும் தெளிவாக இருக்கின்றன. பதிவின் விவரணங்களும் அறிந்தோம். ஏன் இப்படி சுற்றுலாத்தளங்கள் பாழ்படுத்தப்ப்டுகிறதோ. பள்ளிக் குழந்தைகள் எல்லாம் வந்து போகும் இடங்கள் கண்டு களிக்க விடாமல் இப்படிச் செய்தால்? சுற்றுலாத்துறை கவனிக்கவில்லையா இதை?

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..