நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 27, 2019

தெய்வ தரிசனம்

இரண்டு நாட்கள் சற்றே களைப்பு...
இணையமும் சரியாக இல்லை...

கைத் தொலைபேசியில் எவ்வளவு தான் தட்டச்சு செய்வது?...

( இல்லாவிட்டாலும் சுறுசுறுப்பு அதிகம் தான்!...)

மதுரைத் திருவிழா மற்றும் திருஐயாறு சப்த ஸ்தானம் ..
- என அடுத்தடுத்த பதிவுகளால் -

சித்ரா பௌர்ணமியை அடுத்து நிகழ்ந்த வைபவங்களின்
அருமையான படங்கள் சில அணிவகுத்து நிற்கின்றன...

அவற்றுள் சில இன்றைய பதிவில்...

வழக்கம் போல -
படங்களை வழங்கிய அடியார் திருக்கூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி...

சித்ரா பௌர்ணமி - ரிஷப வாகனம் ., தஞ்சை பெரிய கோயில்..  

( நன்றி - தினமணி)
மலைக்குத் திரும்பிய கள்ளழகருக்கு வரவேற்பு ( நன்றி - தினமணி)
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
திருச்செங்கோடு 
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் - திரு ஆனைக்கா 
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி - திருஆனைக்கா  
ஸ்ரீ நான்முகன் - திருஆனைக்கா
ஸ்ரீ நெல்லையப்பர் 
ஸ்ரீ காந்திமதியம்மை - நெல்லை 
ஸ்ரீ கும்பேஸ்வரர் - குடந்தை 
ஸ்ரீ மங்களாம்பிகை - குடந்தை 
ஸ்ரீ ராமன் - வடுவூர் 
ஸ்ரீ கருட சேவை - வடுவூர்  
ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் - திருக்கண்ணபுரம்  
ஸ்ரீ ஆராவமுதன் -குடந்தை  
ஸ்ரீஒப்பிலியப்பன் 
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே.. (5/90)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. எல்லோரையும் கண்டு மகிழ்ந்தேன். வடுவூரிலும் மன்னாரே முக்கிய தெய்வமாய் இருக்க, ராமர் வந்து அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார் என்பதை அங்கே போனப்போ பட்டாசாரியார் மூலம் தெரிந்து கொண்டேன். ராமரின் அழகு சொல்ல முடியாதது. வர்ணிக்க முடியாதது! மற்ற எல்லா ஸ்வாமிகளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். நேற்றுத் தான் அழகர் மலை ஏறுகையில் வழியில் வந்த ஓர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார் என்னும் செய்தியைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்புலன்சுக்கு வழி விட்ட அழகர்...

      ஆஹா.... ஆண்டவன் அருள் கிடைக்கப் பெற்றார் அவர்.

      நீக்கு
  2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!! இங்கேயும் நான் மட்டும் தானா? எல்லோரும் எங்கே போனாங்க? சொல்லவே இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போகும் இடங்களில் உங்கள் பின்னூட்டத்தை எனக்கு முன்னால் காண்கிறேன் அக்கா!

      நீக்கு
    2. "நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" - வெள்ளிக்கிழமை இந்தப் பாடல் வெளிவருமா?

      நீக்கு
  3. குட்மார்னிங்...

    ஆம், கைத்தொலைபேசியில் ஒரு அளவுக்கு மேல்!வேகத்தில் நம் எண்ணங்களை எழுத்தில் வடிக்கமுடியாது !!

    பதிலளிநீக்கு
  4. படங்களை "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று சேகரித்து எங்களுக்கு வழங்கியிருப்பது சிறப்பு, நன்றி!

    பதிலளிநீக்கு
  5. துரை அண்ணா வணக்கம். எல்லாப் படங்களும் அருமை. நல்ல தரிசனம்.

    ஆமாம் அண்ணா கைத்தொலை பேசியில் என்னால் பீன்னூட்டம் இடக் கூட முடியாது.

    இன்று கீதாக்கா எல்லாத் தளத்துலயும் ஃபர்ஸ்ட்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அழகிய தரிசனக்காட்சிகள் ஜி
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  7. படங்களை மிகவும் ரசித்தேன். வடுவூரையும், அகிலாண்டேச்வரியையும் தரிசிக்கும் காலம் விரைவில் வாய்க்கணும் (திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரரை தரிசித்துவிட்டு அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க விட்டுப்போய்விட்டது... எப்படி சன்னிதிக்குச் செல்லணும்னு தெரியாமல்)

    பதிலளிநீக்கு
  8. வடூவூர் அழகன் குமிழ்சிரிப்பும் அழகு.
    அருமையான சித்திரா பெளர்ணமி விழா படங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..