நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 23, 2019

மாசித் திருவிழா

திருஞான சம்பந்தப்பெருமான் தமது திருப்பதிகத்தில்
குறித்தருளும் திருநாட்களுள் மாசி மகமும் ஒன்று...

பற்பலத் திருக்கோயில்களில் மாசி மகத்தை அனுசரித்து
திருவிழாக்கள் நிகழ்ந்துள்ளன..

தல புராணங்களின் படி பிரம்மதேவன் தொடக்கி வைத்த
திருவிழாக்கள் - ப்ரம்மோத்ஸவங்கள்..

மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தை அனுசரித்து நிகழும்
திருவிழாக்கள் - மகோத்ஸவங்கள்..

மாசித் திருவிழாவின் படங்களை நண்பர்கள் வழங்கியுள்ளனர்..
அவற்றுள் சில இன்றைய பதிவில்...

படங்களை வழங்கிய உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - திருப்பரங்குன்றம்
ஸ்ரீ சண்முக நாதன் - சங்கரன்கோயில் 
ஸ்ரீ அண்ணாமலையார் 
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியுடன் அண்ணாமலையார் 
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன் றேறித் தரியார் புரம் எய்தார் 
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்கு உறங்குஞ் சாரல் அண்ணாமலையாரே.. (1/69) 
- : திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ கும்பேஸ்வரர் 
ஸ்ரீ மங்களாம்பிகை
ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி 
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி 
காவிரியில் தீர்த்தவாரி
ஸ்ரீ அக்னீஸ்வரர் - கஞ்சனூர் 
ஸ்ரீ கற்பகாம்பாள் - கஞ்சனூர்
ஸ்ரீ திருச்சோற்றுதுறை நாதர்- திருச்சோற்றுத்துறை  
ஸ்ரீ அன்னபூரணி - திருச்சோற்றுத்துறை
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும் 
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94)
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்:-


ஸ்ரீ கோடீஸ்வரஸ்வாமி
கொட்டையூர்
  
ஸ்ரீ பந்தாடு நாயகி
கொட்டையூர்
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே...( 6/73)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ கஜசம்ஹார மூர்த்தி - வழுவூர்..  
ஸ்ரீ அகோர மூர்த்தி - திருவெண்காடு 
 பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓரம்பால்
செற்றவன் திருவெண்காடு அடை நெஞ்சே..(5/49)  
-: திருநாவுக்கரசர்:-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...இதோ வரேன் பதிவிற்கும் விட்ட பதிவிற்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கொட்டையூர், வழுவூர் கோயில்கள் எல்லாம் பார்த்ததே இல்லை. காலை வேளையில் இனிய தரிசனத்துக்கு நன்றி. படங்கள் எல்லாம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      மயிலாடுதுறையில் தங்கி சுற்ரு வட்டாரக் கோயில்களைத் தரிசிக்கலாம்... கும்பகோணத்தை விட மாயூரம் வசதியுடையது...
      கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  3. மாசி என்றதுமே எனக்கு இரண்டு விஷயம் நினைவுக்கு வந்துரும்...ஒன்னு மாசி மகம்...இன்னொன்னு நோன்பு கொழுக்கட்டை.....ஹா அஹ ஹா

    படங்கள் எல்லாம் அழகா இருக்கு அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாசி என்றதுமே எனக்கு இரண்டு விஷயம் நினைவுக்கு வந்துரும்... //

      எனக்கு வாணி ஜெயராம் நினைவுக்கு வந்தார்!!!!

      நீக்கு

    2. வாணி ஜெயராம்?!!!!!!!! பாட்டு? எனக்கு நினைவுக்கு வரும் பாட்டு மாசி மாசம் ஆளான பொண்ணு...ஆனா அது வாணி இல்லைனு நினைக்கிறேன்...
      வேறு என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்

      கீதா

      நீக்கு
    3. யோசிங்க... யோசிங்க... யோசிச்சுகிறீ இருங்க...!!! ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    4. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      மாசி மாசம் ஆளான பொண்ணு.... பாட்டு ஸ்வர்ணலதா பாடியது...

      நீக்கு
  4. அனைத்து படங்களும் அருமை.
    மாசிமகம் திருவிழா படங்கள் பார்த்தது மனதுக்கு நிறைவு.
    திருவெண்காடு மாசி திருவிழாவிற்கு பூர நட்சத்திரம் அன்று ஐந்தாம் திருவிழா உற்சவர் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வருவார். அங்கு இருந்த 7 வருடம் கண்டு களித்தேன். அகோரமூர்த்தியை இங்கு கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஸ்வாமியின் படத்தைப் பதிவு செய்தபோதே நினைத்தேன்.. தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று... அபிஷேக காணொளியும் வந்துள்ளது.. தெளிவாக இல்லை... தங்களது மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியே... நன்றி..

      நீக்கு
  5. காவிரிக்கரையில் தீர்த்தவாரியும் கிடைத்தது உங்கள் தளத்தில் நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நன்றியும் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கே...

      நீக்கு
  6. குட்மார்னிங்.

    // ஸ்ரீ சுப்ரமணியசுவாமி - திருப்பரங்குன்றம் //

    சோழவந்தான் இல்லையோ!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.!
      நல்லவேளையாத் திருப்பரங்குன்றத்தில் சிறைப்பட்டிருந்த நக்கீரர் எப்போவோ போயிட்டார். இல்லைனா நொந்து நூலாகி இருப்பார்! :))))))) முருகன் மேலே தானே திருமுருகாற்றுப்படை பாடினோம்! இங்கே சோழவந்தான்னு சொல்றாங்களேனு ம.க.போ.இ. அவருக்கு. :)))))

      நீக்கு
  7. மாசிமகச் சிறப்புப்பதிவும், அதில் இடம்பெற்றுள்ள படங்களும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தரிசனக்காட்சிகள் அருமை ஜி
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பிரஹ்மோத்ஸவம், மஹோத்ஸவம் பெயர் காரணங்கள் அறிந்து கொள்ள முடிந்தது....

    சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான படங்கள். சுப்ரமண்யரில் ஆரம்பித்து திருவெண்காட்டு அஹோரமூர்த்திவரை... சிறந்த பகிர்வு. பாடல்களைப் பிறகு ஆழ்ந்து படிக்கவேணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அவர் அகோர மூர்த்தி தான்,(Agoramurthy) அ"ஹோ"ர மூர்த்தி இல்லை. நெ.த.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..