நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

நலமே விளைக..

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..


இன்றைய பதிவில்
அருட்திரு வள்ளலார் ஸ்வாமிகள் அருளிய
கந்தன் சரணப் பத்து..

அருட்பெரும் ஜோதி.. அருட்பெரும் ஜோதி.. 
தனிப்பெரும் கருணை.. அருட்பெரும் ஜோதி!..
  

அருளார் அமுதே சரணம் சரணம் 
அழகா அமலா சரணம் சரணம் 
பொருளா எனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!.. {1}

பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{2}

முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{3}பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவே தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{4}

நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லூர் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{5}

கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத் தவருக் கருள்வோய் சரணம் 
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவா கியநல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{6}நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையாய் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம் 
துங்கச் சுகம்நன் றருள்வாய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{7}

ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம்சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{8}

மன்னே எனையாள் வரதா சரணம்
மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவோய் சரணம்
அன்னே வடிவேல் அரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{9}

வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவையில் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!..{10}நாடு நலம் பெறட்டும்..
நல்லறம் தழைக்கட்டும்!..

வாழ்க நலம்..
வளர்க நலம்!..

அருட்பெரும் ஜோதி.. அருட்பெரும் ஜோதி.. 
தனிப்பெரும் கருணை.. அருட்பெரும் ஜோதி!.. 
***

16 கருத்துகள்:

 1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 2. தங்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 3. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 4. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  நல்லதே நடக்கட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 5. வள்ளலாரின் திருமொழிகளால் முருகனை வணங்கி தமிழ்ப் புத்தாண்டைத் தொடங்குகின்றேன். நன்றி நண்பரே! தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 6. முருகன்! என் அபிமான கடவுள். முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 7. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. முருகன் எங்களுக்கு மிகவும் பிடித்த மனதிற்குகந்த இறைவன். அதே போன்று வள்ளலார்...அவரது வரிகளை இங்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. எழுதிவைத்துக் கொண்டாயிற்று...தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்!.மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..