நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 13, 2017

பட்டுக்கோட்டையார்

இன்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பிறந்த தினம்...


பாட்டாளிகளின் பக்கம் நின்றவர் பட்டுக்கோட்டையார்..

எளிய வரிகளில் பாமரர்க்கும் விளங்குபவை அவருடைய பாடல்கள்..

தத்துவப் பாடல்கள் - என அவர் அளித்தவை
அனைத்தும் தமிழுக்கும் தமிழர்க்குமான சீதனங்கள்..

மக்களைக் கவர்ந்து நின்ற மண்ணின் கவிஞர் அவர்..

அதனால் தான் -
அவருடைய பாடல்கள் ஆண்டுகள் பலவற்றைக் கடந்த பின்னும்
கேட்பவர்களைச் சிந்திக்க வைக்கின்றன...

இன்றைய பதிவில் அத்தகைய பாடல் ஒன்று...
மகாதேவி (1957) எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்..

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா!..

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா - தம்பி 
தெரிந்து நடந்து கொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!..

விளையும் பயிரை வளரும் கொடியை 
வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் - பல
வறட்டுக் கீதமும் பாடும் விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!..

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு 
அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இதுபோல் குறுகிப் போகும்
கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!..

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா!..

இன்றைய நடப்புகள் பலவற்றை
அந்த நாளிலேயே கவிஞர் 
எடுத்துரைத்திருப்பதை
நிதர்சனமாக உணரலாம்.. 


மக்கள் கவிஞர் தமது பாடல்களில் வடித்துக் கொடுத்த 
சமுதாயக் கருத்துகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன.

பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு - இனி 
பண்ண வேண்டியது என்ன மச்சான்?..

தினம் - கஞ்சி கஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்தித்து முன்னேற வேணுமடி!..


கார் உள்ளவரை கடல்நீர் உள்ளவரை பட்டுக்கோட்டையார் வழங்கிய சமுதாயக் கருத்துக்கள் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!..

மக்கள் கவிஞர் புகழ்
என்றென்றும் வாழ்க!..
***

12 கருத்துகள்:

 1. அவர் எழுதிய பாட்டுகளில் வாழ்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நீக்கு
 2. மறக்க கூடாத மாமனிதர் பாட்டுக்கோட்டையார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நீக்கு
 3. எனக்கு என்னவோ பாடல்கள் நினைவில் நிற்கும் அளவுக்கு அதைப் படைத்தவர் பெயர் நிற்பதில்லை. இது புதினங்களுக்கும் பொருந்தும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நீக்கு
 4. என்றைக்கும் பொருந்தும் (!) சிறப்பான பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நீக்கு
 5. என்னவொரு கவிஞர்! புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் தனது முதல்வர் நாற்காலியின் நான்கு கால்களில் ஒன்று பட்டுக்கோட்டையார் பாடல் வரிகள் என்று சொன்னதாக இன்று ஒரு தொலைக்காட்சிச் சேனலில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நீக்கு
 6. பாட்டுக் கோட்டையார்
  பட்டுக்கோட்டையார்
  நினைவினைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு