நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 18, 2016

காற்றில் வரும் கீதமே..

இன்று கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாள்..
***
29 அக்டோபர் 1931 - 18 ஜூலை 2013
காற்றில் வரும் கீதமே.. 
என் கண்ணனை அறிவாயா..

காற்றில் வரும் கீதமே.. 
என் கண்ணனை அறிவாயா..

அவன் வாய் குழலில் அழகாக..
அமுதம் ததும்பும் இசையாக..
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து..

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்..
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்..

வருந்தும் உயிர்க்கு... 
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் - இசை 
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்..
இசையின் பயனே இறைவன் தானே!..

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்..
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்..
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்..

திறந்த கதவு என்றும் மூடாது - இங்கு 
சிறந்த இசை விருந்து குறையாது..
இதுபோல் இல்லம் ஏது சொல் தோழி!..

காற்றில் வரும் கீதமே.. 
என் கண்ணனை அறிவாயா..

அவன் வாய் குழலில் அழகாக..
அமுதம் ததும்பும் இசையாக..
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து..

காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..


கவிஞர் வாலி அவர்களின் இனிய பாடலுக்கு
இசையமைத்தவர் இளையராஜா..

பாடல் இடம்பெற்ற திரைப்படம் 
ஒருநாள் ஒரு கனவு 

பாடலைப் பாடியோர்
ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம், 
ஹரிஹரன்..


விடியற்காலையில் விரும்பிக் கேட்கும் 
பாடல்களுள் இதுவும் ஒன்று..

ஆனாலும்
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் 
மனம் நெகிழ்ந்து கண்ணீர் ததும்பும்..



ஏனென்று புரியாது.. ஆயினும்,
இசையின் பயன் இறைவன் தானே!..

இறைவன் திருவடி நிழலில் 
வாலி அவர்களின் 
ஆன்மா இன்புற்றிருக்கட்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. 
* * *

10 கருத்துகள்:

  1. ஆம் வாலி அவர்களின் கவிதைகள் காற்றினில் வரும் கீதம்தான்.....இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்..வரிகளும் இசையும்....ரசிக்கும் பாடல்...

    வாலி அவர்களின் நினைவு நாளில் அஞ்சலிகள். அவ்ரை மறக்க முடியுமா...பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வாலி அவர்களின் பல பாடல்கள் என்றைக்கும் மறக்க இயலாதவை!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    இசை மனிதனின் மரணகாலம்வரை அவனுடன் இணைந்த விடயமே வாலி ஒரு மகத்தான கவிஞரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நின்று வாழும் பல பாடல்களைத் தந்தவர் வாலி!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..

      நீக்கு
  3. கவிஞர் வாலி மறைந்து விட்டார் என்பதனையே நம்ப முடியவில்லை. அவரது மறைவு நாளான இன்று அவரை நினைந்து, அவரது கவிதையுடன் ஒரு பதிவு. வீடியோ பாடலை கண்டு கேட்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      அன்று தாங்கள் சொல்லியபடி - நெஞ்சில் நிறைந்த பல பாடல்களைத் தந்தவர் வாலி!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. அருமையானதோர் பாடல்..... எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. வாலி ஒரு அருமையான கவிஞர். பகிர்வுக்கு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..