நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 04, 2016

வீரத்துறவி

வீரத்துறவி ஸ்வாமி விவேகானந்தர் அவர்களின் 
வாழ்வும் வரலாறும் வெள்ளிடை மலை..

மனிதர்கள் இயல்பிலேயே தெய்வீகமானவர்கள்.. 
அவர்களிடமிருந்து தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே 
மனித வாழ்வின் சாரம்!.. 
- என்று வலியுறுத்தியவர் ஸ்வாமி விவேகானந்தர்..


இன்று ஜூலை மாதம் நான்காம் நாள்..
 ஸ்வாமிகள் இறைவனுடன் இரண்டறக் கலந்த (1902 ) நாள்...

மனிதகுலம் மேன்மையுறுவதற்கு
ஸ்வாமிகள் அருளிய பொன்மொழிகளுடன்
இன்றைய பதிவினை
ஸ்வாமிகளின்
பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..
* * *.


நான் எதையும் சாதிக்க வல்லவன் என்றே சொல்!..
உன்னால் சாதிக்க இயலாத செயல் என்று
எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!..
***

மிருக பலத்தால் அல்லாமல்
ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்..  


சுயநலமின்மை சுயநலம் என்பனவற்றைத் தவிர,
கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை..
***

நீ செய்த தவறுகளை வாழ்த்துவாயாக..
அவைகள் -
நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டிகளாக 
இருந்திருக்கின்றன..  
***

அன்பின் மூலம் செய்யப்படும்
ஒவ்வொரு செயலும் 
ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்..

சிகாகோ மாநாட்டில் ஸ்வாமிஜி (1893)
உனக்குத் தேவையான எல்லா வலிமையும்
எல்லா உதவியும் உனக்குள்ளேயே உள்ளன..
***

இளைஞனே!..
வலிமை அளவற்ற வலிமை!.. இதுவே இப்போது தேவை..
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப்
பின்பற்றி தைரியத்துடன் விளங்குவாயாக!..
***

உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ
உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது..
***


உண்மைக்காக எதையும் துறக்கலாம்..
ஆனால்
எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது..
***

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல..
அதையும் தாண்டி
மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன..
மனநிம்மதி அன்பு தவம் தியானம்
முதலானவை எல்லாம் பணத்தால் வருபவை அல்ல!..
***

இரக்கத்தால் மனிதருக்கு நன்மைகளைச் செய்வது நல்லது..
ஆனால்,
இறைவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் 
நன்மைகளைச் செய்வது மிக மிக நல்லது..


பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். 
அறியாமையில் உள்ளவனுக்கு முடிந்த அளவிற்கு 
கல்வியறிவைப் புகட்டு. 
இதையே உனது கடமையாகக் கொள்.
***

இறைவனை 
ஒவ்வொரு உயிரிலும் காண்பவனே ஆத்திகன்..

வீரத்துறவி விவேகானந்தர் புகழ் வாழ்க!..
***

16 கருத்துகள்:

 1. அன்பின் ஜி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை தங்களின் விரிவான விளக்கவுரையுடன் தந்தமைக்கு நன்றி அரிய விடயம் அறிந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளுக்கு சிறப்பான பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நல்லதொரு தொகுப்பு... சிறப்பான பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. Thus spake vevekananda என்னும் நூலை சிறுவயதில் வாசித்திருக்கிறேன் அவர் சொன்னால் அவை நல்வாக்கு . அதையே நாம் சொல்லும்போது அதே மதிப்பு பெறுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தாங்கள் கூறூவது சரியே.. ஆயினும் - மனம் விரும்பி ஸ்வாமிஜியின் பொன்மொழிகளைப் படித்து நல்வழி நடந்தவர்களையும் அறிவேன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பயனுள்ள பகிர்வு
  அருமையான தொகுப்பு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. நல்ல பதிவு . சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் தொகுப்பு மிகவும் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. //இறைவனை
  ஒவ்வொரு உயிரிலும் காண்பவனே ஆத்திகன்..//

  ஆழமான, சிறப்பு மிக்க வரிகள்!
  தொகுப்பிலுள்ள அனைத்து முத்துக்களும் மிக அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   எனக்கு மிகவும் பிடித்தமான வைர வரிகள் அவை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. மிக மிக அருமையான பதிவு. தாமதம் வழக்கம் போல. டேஷர் போர்ட் திறக்காமல் அஞ்சல் பெட்டிக்கு வருவதைப் பார்த்து வருவதால்...

  சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரது அறிவுரைகள் ஒவ்வொன்றும் வைரம்..நம் மனதில் பதித்து வைக்கப்பட வேண்டியவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களின் வருகையே மகிழ்ச்சி..

   தாங்கள் கூறுவது போல - ஸ்வாமிகள் அருளிய ஒவ்வொரு வார்த்தைகளும் வைரங்கள்..

   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு