நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

பனிமலைச் சரிவில்..

மனதை அழுத்தும் துயரமான சம்பவம்..

நேற்றைக்கு முன்தினம் (பிப்ரவரி 3) இமயமலைத் தொடரின் சியாச்சன் பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி -

பாரதத் தாயின் வீரப் புதல்வர்கள் பத்து பேர் தங்களின் இன்னுயிரைத் தாயின் மடியில் அர்ப்பணித்துள்ளனர்..


மாவீரர்களின் தியாகத்திற்கு தலை தாழ்ந்த அஞ்சலி..

அன்றைய தினம் சியாச்சன் பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு நிகழ்ந்துள்ளது..

பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பதை அறிந்த மீட்புக் குழுவினர்  உடனடியாக மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர்..

விமானப்படை விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன..

ஆயினும் - வீரர்களை மீட்பதற்கு செய்த பெரும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின..


பனிச்சரிவுகளுக்குள் சிக்கிக்கொண்ட வீரர்களைக் கண்டறிய இயலாததாலும் மிக் மோசமான சூழ்நிலையில் - அவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதாலும் -

அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது..

உயிரிழந்தவர்களுள் ஒருவர் - Junior Commissioned Officer..

மற்ற ஒன்பது பேரும் Madras Regiment - 19., எனும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள்..

இவர்கள் அனைவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இமயமலையின் சியாச்சன் - கடல் மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் உள்ளது..

இதுவே, இந்த உலகின் மிக உயரமான போர் முனையாகும்..

இங்கே வெப்பமெல்லாம் கிடையாது..

தட்பம் மட்டுமே.. - 50 டிகிரி செல்ஸியஸ்!..

காணும் திசையெங்கும் பனி படர்ந்த மலை முகடுகள்..

அவற்றைத் தவிர வேறதுவும் கிடையாது..

உறைபனிக்கிடையில் வீரர்களின் பாசறை
வீரர்களின் பாதுகாப்புப் பணி
அவ்வப்போது நிகழும் பனிச்சரிவு
1984ல் இருந்து  இதுவரை இந்த சியாச்சன் பகுதியில் -
தங்களின் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் எண்ணிக்கை 879..

இன்று காலை பனிச்சரிவில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் பெயர்கள் நாளிதழ்களில் வெளியாகி உள்ளன..

1) திருமிகு.. ஏழுமலை - துக்காம்பாறை, வேலூர்
2) திருமிகு.. கணேசன் - சொக்கதேவன் பட்டி, மதுரை
3) திருமிகு.. குமார் - குமணன் தொழு, தேனி
4) திருமிகு.. ராமமூர்த்தி - குடிசாதனபள்ளி, கிருஷ்ணகிரி
5) திருமிகு.. நாகேஷா - கர்நாடகா
6) திருமிகு.. மகேஷா - கர்நாடகா
7) திருமிகு..ஹனுமந்தப்பா - கர்நாடகா
8) திருமிகு.. சுதீஷ் - கேரளா
9) திருமிகு.. முஷ்டாக் அகமது - ஆந்திரா
10) திருமிகு.. சூரியவன்சி - மகாராஷ்டிரா


மாவீரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..

வீரப்புதல்வர்களை நாட்டுக்களித்த குடும்பத்தினருக்கு
இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையை 
எல்லாம் வல்ல பரம்பொருள் வழங்கியருள்தல் வேண்டும்..


நாம் நிம்மதியாக உறங்குதற்காகத் 
தங்களின் தூக்கத்தை மறந்த மாவீரர்கள்..
நம் பொருட்டு வீர மரணம் எய்தி விட்டனர்..

என்ன கைம்மாறு செய்யப் போகின்றோம்?..

புதியதோர் உலகம் செய்வோம்..
கெட்டப் போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்..
புதியதோர் உலகம் செய்வோம்!..
- பாவேந்தர் பாரதிதாசன் -

ஜய் ஹிந்த்..
***

22 கருத்துகள்:

 1. அம் மாவீரர்களுக்கு எம் தலைதாழ்ந்த வீரவணக்கங்கள்,,

  பகிர்வுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. அவ்வீரர்களுக்கு எமது அஞ்சலிகளும் அவரைப் பிரிந்து வாடும் அவர்களது கும்பத்தினர்களுக்கு இரங்கலையும் தெரிவிப்போம்

  பதிலளிநீக்கு
 3. மனம் கனக்கிறது. இப்படிபட்ட இடத்தில் நமக்காக தன்னுயிரை பொருட்படுத்தாது பணியில் இருக்கும் இவர்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வீரர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மனம் என்னவோ செய்கின்றது. குடும்பத்தாருக்கும் தாங்கும் மன வலிமையைக் கடவுள் நல்கிட பிரார்த்திப்போம் வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும். ஆழ்ந்த இரங்கள் அஞ்சலிகள். தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 5. உயிரிழந்த வீரரர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 6. உயிரிழந்த நம் தாய்மண்ணின் வீரர்களுக்கு வீர வணக்கம் ஐயா...

  போர்கள் இல்லாத உலகம் பூக்க வேண்டும் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. உங்களோடு இணைந்து, தாய் மண்ணிற்காக உயிர் தந்த நம் சகோதரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. உயிரிழந்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 9. இயற்கையின் விளையாட்டுக்குத் தங்கள் உயிரை ஈந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலாக இருப்போம் என் அஞ்சலிகள் மாண்டோருக்கு

  பதிலளிநீக்கு