நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 15, 2016

மகாமகப் பெருவிழா 3

மகாமகத் திருநாளின் மூன்றாவது நாள் - இன்று..

பெருந்திரளாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்திப் பரவசத்துடன் மக்கள் குடந்தையில் கூடி மகாமக தீர்த்தத்தில் நீராடி மகிழ்கின்றனர்..

சகல ஆலயங்களில் இருந்தும் கோலாகலமாக -
திருவீதியுலாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..இந்நிலையில் -
இன்று காலையில் முகநூலில் கண்ட செய்திகள்..

1) மகாமகக் குளக்கரையில் நின்று கொண்டு
குளிக்கும் பெண்களை ஒரு கும்பல் படம் எடுப்பதாக..

2) அங்கே உடை மாற்றிக் கொள்ள மறைவிட வசதி இல்லை என்று..

சிந்தையில் நெருடின - இந்த செய்திகள்..


நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக -
மகாமகத் திருக்குளத்தில் நீராடிக் கொண்டிருக்கின்றார்கள்..

மேலும் -

குளக்கரை முழுதும் காவல்துறையினர் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்..

அப்படியிருக்க - தகாத செயல்களில் ஈடுபடக்கூடுமா?..

அப்படியே நடந்தாலும் -

பொதுமக்களில் யாராவது ஒருவர் சென்று பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களிடம் முறையிட்டாலும் போதும்..

தகாத செயல் செய்பவர்கள் கண்டிப்பாக சிக்கிக் கொள்வார்கள்..

அப்படியும் இல்லாமல், கோபங்கொண்ட எவரேனும் -
தடியர்களுக்கு ஒரு அறை கொடுத்தாலும் போதும்!..

தர்ம அடி ஆயிரக்கணக்கில் நிச்சயம் கிடைக்கும்..

எதற்கும் நாம் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது அவசியம்..

அடுத்ததாக உடை மாற்றிக் கொள்வது பற்றி..

மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தமாடுதல் என்பது - மற்ற குளங்களில் மூழ்கி எழுவது போன்றதன்று..

மகாமகத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் கரையேறி அப்படியே ஈர உடையுடன் நடந்து -

ஸ்ரீ சார்ங்கபாணித் திருக்கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரைத் திருக்குளத்திலும் நீராடி -

அதன்பின் தொடர்ந்து நடந்து வடக்குப் புறமாக காவிரி ஆற்றி நீராடுதல் வேண்டும்..

மகாமகத் திருக்குளத்திலிருந்து பொற்றாமரைக் குளத்திற்கு செல்லவும் அங்கிருந்து காவிரிக்குச் செல்லவும் சாலைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன..

இது தான் நடைமுறை.. தொன்றுதொட்டு வரும் வழக்கம்..

நடைமுறையை மீறி நடந்து கொள்ள நினைப்பவர்கள் 
எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்.. 
காவிரியின் கரையில் மறைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நினைவு..

1980 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மகாமகத் தீர்த்த வாரியில் கலந்து கொண்டிருக்கின்றேன்..

1968 ல் சிறுவயது என்பதால் குடந்தை செல்வதற்கு அனுமதிக்கவில்லை..

1992 ல் வளைகுடா வசிப்பிடமானது.. 

இங்கே குவைத்தில் - நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு செய்தித் தாள்களே துணையாயின..

நிகழும் மகாமகத் திருவிழாவில் - தகவல் தொடர்புத் துறையின் உயர் நுட்பங்களும் பங்கெடுத்துக் கொண்டுள்ளன..

நமது தளத்திலும், - வலது பக்க பட்டியலில் -

நிகழ்வுறும் மகாமகத் திருவிழாவினைப் பற்றிய தகவல் களஞ்சியத்திற்கான இணைப்பினைக் கொடுத்துள்ளேன்..

அந்த இணைப்பினை கீழேயும் வழங்கியுள்ளேன்..

மகாமகம் 2016  - தகவல் களஞ்சியம்Android முதலான தொழில் நுட்பத்தில் இயங்கும் நுண்ணலை பேசிகளில்
Google Play Store சென்று - Mahamaham என்று தேடினால் -

நிகழும் மகாமகத்தைப் பற்றிய விவரங்கள் கொண்ட Apps வெளியாகியுள்ளன..

நிறைந்த செய்திகள் காணப்படுகின்றன..
தரவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுக.. 

இனி வருங்காலத்தில் எப்படியோ!?..

சென்ற பதிவிற்குக் கருத்துரைக்கும் போது -
அன்புக்குரிய கரந்தை JK அவர்கள்,

தாங்கள் குவைத்திலிருந்தாலும் மனம் கும்பகோணத்தில் தானே இருக்கும்!. -

என்று கேட்டிருந்தார்கள்..

திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமிழாய்ந்த ஆசிரியப் பெருமகன் அல்லவா!..

அவர் கூறிய வார்த்தையின் நியாயம் பலித்து விட்டது..


இதற்கு அடுத்த பதிவு - சில தினங்கள் தாமதம் ஆனாலும்,
தஞ்சையிலிருந்து வெளியாகக் கூடும்!..

ஏனெனில் -

இந்தப் பதிவு வெளியாகும் வேளையில் - 

ஈசன் எம்பெருமானின் நற்றுணையுடனும்
வலைத்தள நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும்

நான் குவைத்திலிருந்து புறப்படுகின்றேன் - 

மகாமகத் தீர்த்தமாடுவதற்கு!..

இதெல்லாம் எம்முன்னோர்கள் செய்த புண்ணியம்..
அதுவன்றி வேறெதுவும் அல்ல!..

அனைவரைப் போல நானும் 
என் குடும்பத்தினருடன் தீர்த்தமாடுதற்கு 
எல்லாம் வல்ல இறைவன் 
மேலும் நல்லருள் புரிவானாக!..    

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

12 கருத்துகள்:

 1. அன்பின் ஜி நிறைய விளக்கங்கள் நலமுடன் சென்று மகாமகம் கண்டு களித்து வாருங்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களுடைய நல்வாழ்த்துகளுக்கு நன்றி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 2. உங்கள் பதிவுகளை வாசிப்போருக்கு நீங்கள் கும்பகோணத்தில்தான் இருக்கிறீர்கள் என்ற உணர்வு ஏற்படும் இப்போது அந்த உணர்வு பலிக்கப் போகிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்களுடைய அன்பின் நல்வாழ்த்துகளுக்கு நன்றி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 3. ஆனந்தமாக மகாமகம் கண்டு வாருங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுடைய நல்வாழ்த்துகளுக்கு நன்றி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பினுக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 5. வாருங்கள் ஐயா
  வாருங்கள்
  தங்களை வரவேற்க
  மகிழ்வுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பினுக்கு மிகவும் நன்றி..

   நீக்கு
 6. தங்கள் விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் என்றும் நலமுடன் இருங்கள். வரும் போது வரவேற்க இல்லை என்ற வருத்தம் தான் அதிகம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு