நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 30, 2016

வாழ்க நின் புகழ்..

இன்று காந்திஜி அமரத்வம் எய்திய நாள்..

அண்ணலின் சத்திய சோதனையின் 
இறுதி அத்தியாயத்திலிருந்து 
சில துளிகள்..  
***


என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகின்றேன்..

(ஆனால்) அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படியாகச் செய்திருக்கின்றேனா என்பதை நான் அறியேன்..

உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று மாத்திரமே நான் கூற முடியும்..

எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டு கொண்டேனோ, அதே விதமாக அதை விவரிப்பதே எனது இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கின்றது..


சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரே மாதிரியான அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன..

சத்தியத்தை தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அஹிம்சை தான்!.. - என்பதை,

இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கங்களும் (வாசகருக்கு) உணர்த்தவில்லை எனில்,

இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட சிரங்கள் எல்லாம் வீணாயின - என்றே கொள்வேன்..


சத்தியத்தின் தோற்றத்தை, நான் அவ்வப்போது கணநேரம் கண்டு கொண்டது மட்டுமே - சத்தியத்தின் விவரிக்க ஒண்ணாத பெருஞ்சோதியைத் தெரிந்து கொண்டதாக ஆகாது..

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய வடிவத்தினை - நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் -

மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக இருத்தல் வேண்டும்..

ஆசாபாசங்கள் இன்னும் என்னுள்ளத்தினுள்ளே மறைவாக தூங்கிக் கிடக்கின்றன.. அவை இன்னும் என்னிடம் இருக்கின்றன என்பதான எண்ணம் என்னைத் தோலிவியுறச் செய்துவிடவில்லையாயினும் அவமானப்படும்படி செய்கின்றது..

அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெறச் செய்து,
ஆனந்தத்தை அளிக்கின்றன..


ஆனால் -

இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை எனக்கு முன்னால் இருக்கின்றது என்பதனை அறிவேன்..

என்னை நான் அணுவிற்கும் அணுவாக ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்..

தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் கடையனாகத்
தன்னைத் தானே விருப்பத்துடன் ஆக்கிக் கொள்ளாத வரையில்
ஒரு மனிதனுக்கு விமோசனமே கிடையாது என்பதையும் நான் அறிவேன்..
***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
எளியேனின் அஞ்சலி.. 
*** 

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி சத்திய சோதனைக் குறித்த அரிய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணலுக்கு எமது அஞ்சலியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சிறப்பான நாளில் சிறப்பானதோர் பதிவு.

  தில்லியில் அவர் கடைசியாக இருந்த வீடு இருக்கும் சாலைக்குப் பெயரே தீஸ் [30] ஜனவரி மார்க்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தாங்கள் வழங்கிய செய்திக்கு நன்றி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. வாழ்ந்த மாபெரும் மனிதரின் நினைவு நாளில் அவர்குறித்த நினைவு மீட்டல், நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. சத்திய சோதனை படித்துள்ளேன். தங்கள் மூலமாக மறுபடியும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. வெளியூர் பயணம். இன்றுதான் இந்த பதிவினையும், மகாத்மா காந்தி அவர்களின் சத்தியசோதனை வரிகளையும் படித்தேன்.உங்கள் பதிவு, மீண்டும் அண்ணலின் சத்தியசோதனை நூலை படிக்கத் தூண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   அண்ணலின் சத்திய சோதனைக்குள் தான் -
   எத்தனை எத்தனை நீதிகள் பொதிந்து கிடக்கின்றன..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. மகாத்மாவின் நினைவினைப்போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. நல்ல பதிவு...தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையே மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு