நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 13, 2016

மார்கழித் தென்றல் - 28

குறளமுதம்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.. (0212)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 28

திவ்ய தேசம் - திருக்குடந்தை
- கும்பகோணம் - 


எம்பெருமான் - ஸ்ரீ சார்ங்கபாணி  
தாயார் -  ஸ்ரீ கோமளவல்லி

உற்சவர் - ஸ்ரீ ஆராவமுதன்
ஸ்ரீ வேத விமானம்

உத்தான சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..ஹேமரிஷியின் மகளாக
பொற்றாமரைத் திருக்குளத்தில் 
தோன்றினாள் மஹாலக்ஷ்மி..

கோமளவல்லி எனும் திருப்பெயர் கொண்டாள்..
முனிவரின் செல்வ மகளுடன்
ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருமணக்காட்சி 
நல்கியதாக தலபுராணம்..ஸ்ரீ ஆராவமுதன் - சயனத்திலிருந்து எழுந்து
திருமழிசையாழ்வாருக்கு பிரத்யட்ச தரிசனம்
அருளிய திருத்தலம்..


ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க அன்றுசென்று அடர்த்தெறிந்த ஆழியான்
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார் குடைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள் கிடந்த புண்டரீகனே!.. (808) 

சாலிவேலி தண்வயல்த டங்கிடந்து பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே!.. (810)
- திருமழிசையாழ்வார் -
***

மங்களாசாசனம் 
பெரியாழ்வார், ஆண்டாள்,
திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்..  
***


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவ தரிசனம்
திருத்தலம் - கும்பகோணம் 


ஸ்ரீ அமுத கும்பேசர் - ஸ்ரீ மங்கள நாயகி
திருக்குடமூக்கு 
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
திருக்குடந்தைக்காரோணம் 
- என, மூன்று தலங்களாகத் திகழ்வது.. 
***

திருக்குடமூக்கு

இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர், அமுத கும்பேசர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை, மங்கள நாயகி
தீர்த்தம் - காவிரி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வன்னி


சிருஷ்டிக்கான அமிர்த கும்பம்
பிரளயத்தின் போது மிதந்து வந்து
இங்கே தங்கியது..

சிவபெருமான் - வேடராக வந்து ,
அமிர்த கும்பத்தினை
தனது பாணத்தினால் எய்தார்..

கும்பம் உடைந்து அமிர்தம் எங்கும் பரவியது..

அமிர்தம் கலந்த மண்ணில் லிங்கம்
அமைத்து அதனுள்
சர்வேஸ்வரன் பரிபூரணமாகப் பொலிந்தனன்..எனவே, கும்பேஸ்வரர் என்பது திருப்பெயர்..
திருத்தலமும் - குடந்தை, குடமூக்கு
எனும் பெயர்களைப் பெற்றது..

கும்பத்திலிருந்து சிதறிய 
அமிர்தம் திரண்டு நின்ற இடம் தான்
மகாமகக் குளம்..பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை
குரு சிம்ம ராசியிலும் -
சூரியன் கும்ப ராசியிலும்
சந்திரன் மக நட்சத்திரத்திலும் 
இருக்கும் பௌர்ணமி நாள் தான் 
மகாமகம்..இந்த நாளில் தான் 
லட்சக்கணக்கானோர் கூடி 
மகாமகத் திருக்குளத்தில் நீராடுகின்றனர்..

இதோ - மிக அருகில் மகாமகம்!..

நிகழும் மங்கலகரமான
மன்மத வருடம் மாசி மாதம்
பத்தாம் நாள் திங்கட்கிழமை
(22 பிப்ரவரி 2016)
முற்பகல் 11.18 முதல்
பிற்பகல் 1.20 வரை
ரிஷப லக்னம்..

அந்த புண்ய வேளையில்,
குடந்தை மாநகரின் சகல 
சிவாலயங்களிலிருந்தும்
ஸ்வாமி புறப்பாடு நிகழும்..

ஸ்ரீ அமுதகும்பேசர் மங்களாம்பிகையுடன்
ரிஷப வாகனத்தில் மகாமகத் திருக்குளத்திற்கு
எழுந்தருள தீர்த்தவாரி நிகழும்..  
* * *


கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யற்றயலே
தழைவளர் மாவின்நால்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலிசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம் இறையே!.. (3/59)
- திருஞானசம்பந்தர் - நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாளுறையுங் குடமூக்கிலே!.. (5/22) 
- திருநாவுக்கரசர் - 
***

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் 

ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்
இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வில்வம்


ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி அறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரச்வதிபொற் றாமரைப் புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த 
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எங்கூத்த னாரே!. (6/75) 
- திருநாவுக்கரசர் -  
***

திருக்குடந்தைக்காரோணம்


ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இறைவன் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
அம்பிகை - ஸ்ரீ விசாலாட்சி
தீர்த்தம் - மகாமகக் குளம்
தலவிருட்சம் - வில்வம்..

மக்கள் தம்மிடம் தொலைத்த பாவங்களைத் 
தாம் எங்கே சென்று தொலைப்பது?.. 
- என, ஸ்ரீ காசி விஸ்வநாதரிடம்
நதிக் கன்னியர் கேட்க
அவர்களை அழைத்துக் கொண்டு 
காசியம்பதியிலிருந்து
இத்தலத்திற்கு வந்து மகாமக தீர்த்தத்தில் 
மூழ்கச் செய்து - நதிக்கன்னியர் ஏற்றிருந்த 
பாவங்களைத் தொலைத்ததாக தலவரலாறு..

மேற்கு நோக்கி விளங்கும் இத்திருக்கோயிலின் 
வடக்கு திருச்சுற்றில் 
நதிக்கன்னியர் சந்நிதி விளங்குகின்றது..

இந்த மண்ணுக்கு உரியவள் அல்லவா!..
எனவே,
காவிரி நடுநாயகமாகத் திகழ்கின்றாள்..
வலப்புறம் கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி
இடப்புறம் கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு
ஆகியோர் விளங்குகின்றனர்..

பொற்றாமரைத் திருக்குளத்தின் கீழ்க்கரையில் 
திகழும் சோமேசர் திருக்கோயிலை
திருக்குடந்தைக்காரோணம்
எனவும் கொள்வர்..


ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்
(நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம்)
இறைவன் - ஸ்ரீ வியாழசோமேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ தேனார்மொழியாள்
தீர்த்தம் - சந்திர புஷ்கரணி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வேம்பு..

வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன்று ஏந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்டத்து எண்தோள்எந்தை காரோணத்தாரே!.. (1/72) 
- திருஞானசம்பந்தர் -  
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
எட்டாம் திருப்பாடல்
கோலா வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருஉத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

12 கருத்துகள்:

 1. குறளமுதம் பருகினேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மார்கழித் தென்றல்...சுகம் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான பகிர்வு...
  அழகான படங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 28 ஆம் நாள் பகிர்வு நிறைய விடயங்களுடன் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அன்பின் ஜி தங்களை பயணத்தைக் குறித்த தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன் வருகை தந்து விபரம் அறிய இதோ இணைப்பு.
  http://www.killergee.blogspot.ae/2016/01/in.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   இதோ பயணித்து விட்டேன்..
   தொடர் பதிவில் என்னையும் இணைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மார்கழியின் அனைத்து நாட்களும் பதிவு மழை தான் இங்கு,
  இன்றைய தொகுப்பும் அருமை,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மார்கழி முழுதும் தங்களுடைய ஆதரவு மறக்க இயலாது.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு