நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 10, 2015

மங்கல தீபாவளி

அனைவருக்கும் 
அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

தீபாவளியைப் பற்றி சொல்லப்படும் நிகழ்வுகளுள் உளம் நிறைந்ததாக விளங்குவது,

பராசக்தியாகிய அம்பிகை - தன்னை அலட்சியம் செய்த பிருங்கி முனிவனின் ஆணவம் அழிய, கெளதம மகரிஷியைக் குருவாகக் கொண்டு, அவர் உபதேசித்தபடி கடுந்தவம் மேற்கொண்டு - ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றனள்!.. 

- என்பது தான்!..

முன்பொரு சமயம் -

திருக்கயிலாய மாமலையில் அம்மையும் அப்பனும் ஆனந்தக் கோலாகலமாக எழுந்தருளியிருந்தனர்..

திருக்காட்சி நல்கிய அம்மையப்பனை ஸ்ரீநான்முகனும் ஸ்ரீஹரிபரந்தாமனும் முப்பத்து முக்கோடித் தேவர்களும் வலம் வந்து மகிழ்ந்திருந்த வேளையில் -

பிருங்கி முனிவர் மட்டும் அம்பிகையை விடுத்து சிவபெருமானை வலம் வந்து வணங்கினார்.


அம்பிகையின் முகம் வாடியது..

இதைக் கண்ட அனைவரும் பதைபதைத்து நின்றனர்..

பிருங்கி முனிவரோ இதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை..

மறுநாள் பெருமானை ஆரத்தழுவி நெருங்கி அமர்ந்திருந்தனள் அன்னை..

அப்போதும் பிருங்கி மனம் தளராமல் ஒரு வண்டாக உருமாறி - அம்மையப்பனுக்கு இடையே துளைத்துப் புகுந்து ஈசனை மட்டும் வலம் செய்து வணங்கினார்.

பிருங்கியின் இந்தச் செயலால் - கோபமுற்றாள் அம்பிகை..

அதன் பயனாக பிருங்கியின் உடலில் இருந்த சக்தி அவரை விட்டு அகன்றது..

அதனால் - வலுவிழந்த பிருங்கி தள்ளாடித் தவித்தார்...

அதைக்கண்டு இரங்கிய ஈசன் - முனிவருக்கு மூன்றாவது கால்  வழங்கினார்.

ஈசனின் செயலைக் கண்டு திகைத்தாள் - அம்பிகை..

தன்னை அலட்சியம் செய்த பிருங்கிக்கு ஈசன் உதவினாரே!.. - என்று வருந்திய அம்பிகை மனம் பரிதவித்தவளாக பூமிக்கு எழுந்தருளினாள்....

பாலையாய் வறண்டு கிடந்த ஒரு இடத்தினில் அமர்ந்து விட்டாள்..

அம்பிகை அமர்ந்த இடம் - ஒருகாலத்தில் பூத்துக் குலுங்கிய நந்தவனம்..

கடும் வறட்சியால் பன்னிரு ஆண்டுகளாகப் பாழ்பட்டுக் கிடந்த பூவனம்  - அம்பிகையின் வருகையால் - தழைத்தது.. மீண்டும் பூத்துக் குலுங்கியது!..


மலர்களின் நறுமணத்தை ஏந்திக்கொண்ட தென்றல் அங்குமிங்குமாக உலவியது.

என்றுமில்லாத அதிசயமாக காற்றினூடாகப் பரவிய சுகந்தத்தை உணர்ந்த கெளதம மகரிஷி - நந்தவனத்தைத் தேடி வந்தார்..

அங்கே - அம்பிகையைக் கண்டதும் தொழுது வணங்கினார்..
அம்பிகையை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

அவருடைய அன்பினிலும் உபசரிப்பினிலும் மகிழ்ந்த அம்பிகை - தன் மனக்குமுறலை அவரிடம் சொன்னாள்.

அம்பிகையைத் தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்  கௌதம மகரிஷி...

அங்கே அம்பிகைக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தபின் புதியதாக ஒரு விரத முறையை உபதேசித்தார். புரட்டாசியின் அஷ்டமி திதியிலிருந்து ஐப்பசி அமாவாசை வரையிலான இருபத்தோரு நாட்கள் நோற்கும்படி கூறினார்.

கடுமையான விரதத்தை அம்பிகை மனமுவந்து ஏற்று சிவபூஜை செய்தாள்.


கடுமையான ஆசார அனுஷ்டானங்களுடன் அம்பிகை நோற்ற விரதத்தின் பயனாக சிவபெருமான் ரிஷபவாகனராக கெளதமகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார்.

அம்பிகை கோரியபடி தன்னுடலில் இடப்பாகத்தை  வழங்கியருளினார்..

அம்பிகை - ஏற்ற விரதம் என்பதால் கேதார கெளரி விரதம் எனப் பெயரானது..

இப்படி, அம்பிகை ஈசனின் திருமேனியில் செம்பாதியாக இடம் பெற்று இணைந்த நாள் தான் - தீபாவளி என்று ஆன்றோர் கூறுகின்றனர்.


பெண்மை தன் லட்சியத்தில் வென்ற நாள் தீபாவளி!.. 

அதன்பின் அனைத்தையும் உணர்ந்து தெளிந்த பிருங்கி முனிவர்,  மனம் வருந்தி அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்..

அம்பிகையும் கருணை கூர்ந்து அவரை மன்னித்து -
பிருங்கி முனிவருக்கு மீண்டும் சகல நலத்தையும் அருளினாள்..


அம்பிகைக்கும் ஆறுதலுக்கு 
ஒரு இதயம் தேவைப்படுகின்றது. 

அவளும் தான் விரும்பியதை அடைய கடும் விரதங்களை உவகையுடன் நோற்று மகிழ்கின்றாள். அவளும் குருமுகமாக உபதேசம் பெற்று சிவபூஜை செய்கின்றனள் - என்பதையெல்லாம் உணரும்போது - நாம் சர்வ சாதாரணம் என்பது புரியவரும்.


தீபாவளி அன்றுதான் பாற்கடலில் தோன்றிய மஹாலக்ஷ்மி - பரந்தாமனுக்கு மாலையிட்டாள் - எனவும் ஒரு ஐதீகம்.

எல்லோரும் சொல்லும் நரகாசுரன்  கதையில்  -
நரகாசுரனை வீழ்த்தியவள் -
சத்ய பாமா!..


பகீரதனின் கடுந்தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் - தன் ஜடாமகுடத்தில் இருந்து மிகச்சிறிய அளவாக கங்கையை விடுத்த வேளை தான்  -

தேய்பிறைச் சதுர்த்தசியின் பிரம்ம முகூர்த்தம்!..

தீபாவளி அன்று சூர்யோதயத்திற்கு முந்திய பொழுதில் அனைத்து தீர்த்தங்களும்  - கங்கையாகித் திகழ்கின்றன.

கங்கையின் வருகையினால் - பூமி புனிதம் அடைந்த நாள். அதனால் தான்  -

''கங்கா ஸ்நானம் ஆயிற்றா!..'' - என, அனைவரும் மகிழ்வுடன் கேட்பது!..


சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் இருந்த குபேரன் -
புஷ்பக விமானம் சங்கநிதி பதுமநிதி - இவற்றையெல்லாம் தீபாவளி நாளில் தான் திரும்பப் பெற்றான்.

வடபாரதத்தில் - லக்ஷ்மி பூஜையுடன் குபேர பூஜையும் செய்து - புதுக்கணக்கு எழுதுவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை!..

ஆக - தீபாவளி என்பது அனைவரும் விரும்பிக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதில் ஐயம் ஏதுமில்லை!..  


''..தீபாவளி எனில், தீப - ஆவளி. தீபங்களின் வரிசை. ஆகையால் இந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும்!..''

- என்பது, அருள்மொழியரசு வாரியார் ஸ்வாமிகளின் திருவாக்கு..

சொல்லப்படும் கதைகளின் தன்மையாக எதுவாக இருந்தாலும் ,
அவற்றின் உட்பொருளை உணர்ந்து கொள்வோம்..


தீபாவளி - அனைவருக்கும் இனிய நாளாக விளங்க வேண்டும்.

இந்த நன்னாளில் அற்றார்க்கும் அலந்தார்க்கும் இயன்றவரையில் உதவிகளைச் செய்து மகிழ்ச்சியில் திளைப்போம்!..

 வாழ்க வையகம்!..
வாழ்க மானுடம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

22 கருத்துகள்:

 1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.

   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

 3. நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மங்கல தீபாவளி
  தங்களின் பதிவில்
  சிறப்புக்கு சிறப்பு!
  அருமை அருளாளர் அய்யா!
  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. தீபாவளியைப் பற்றிய அரிய செய்திகள், தீபாவளி நாளில். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தங்களுக்கும் அன்பின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   தங்களனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அன்பின் ஜி தீபாவளி தினத்தன்று நரகாசுரனைக் குறித்து பதிவு படங்களுடன் நன்று
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. தீபாவளி - கதைகள் நன்று.

  த்ங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 11. நோன்பின் காரணம் அறிந்தேன்,, வாழ்த்துக்கள்,
  புகைப்படம், விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு