நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 12, 2015

கடவுளைக் கண்டேன் - 4

மழைக்காலம்..

அவ்வப்போது சாரலும் தூறலும்..

இந்தவேளையில் -
சோளப்பொரியைத் தின்றுகொண்டிருந்த என்னை  - சும்மா இருக்க விடாமல்,

அன்பின் கில்லர் ஜி - அபுதாபியில் இருந்து கொக்கியைப் போட்டு விட்டார்..

அந்தக் கொக்கியை இந்த - இணைப்பில் காணலாம்..


அவருடைய பதிவின்படி - எதிர்பாராத வகையில் நகசுத்தி!..

அந்த வேதனையின் விளைவாகச் சொல்கின்றார் - கடவுளைக் கண்டேன்!.. - என்று..

அறுவைச்சிகிச்சை அரங்கில் -

20 டாக்டர்கள் 30 நர்சுகள் -
வார்டு பாய் (Ward Boy) எத்தனை பேர் என்று தெரியவில்லை..

அவர்களுடைய பணி சிறக்க வேண்டும்..

நகச் சுத்திக்கான அறுவைச் சிகிச்சையும் நல்லபடியாக நடக்க வேண்டும்..

கில்லர் ஜி அவர்களுக்கும் நிறைய பதிவுகள் பாக்கியாகக் கிடக்கின்றனவாம்..

அதனாலேயே - கடவுளைக் கண்டு கோரிக்கைகளை வைக்கின்றார்...

கூடவே - நம்மையும் அழைத்துக் கொள்கின்றார்..

எனவே, மிக சுறுசுறுப்பாக(!?..) - குதிரையைத் தட்டிவிட்டேன்..

நானும் கடவுளைக் கண்டேன்.. சின்னச் சின்ன ஆசைகளுடன்!..

1. ஊரிலுள்ள மரப்பட்டறைகள் எல்லாம் விறுவிறுப்பாக ஏர் கலப்பைகளைத் தயார் செய்து கொண்டிருக்கின்றன.. காரணம் - இனிமேல் காவிரியில் தண்ணீர் அடைக்கப்படாமல் தடுக்கப்படாமல்  - தமிழ்நாட்டுக்கு வரும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது..

2. இதைக் கேள்விப் பட்டதும் தென்னந்தோப்புக் காரங்க - எங்க நாட்டு வெள்ளம் எல்லாம் தமிழ் நாட்டுக்கே.. - ன்னு சொல்லிட்டு அரபு நாட்டுப் பக்கம் கிளம்பிட்டாங்க...

3. இது ஏதடா வம்பு..ன்னு கோங்குரா சட்னியைத் தூக்கித் தூர போட்டுட்டு - கால்வாயை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு, புழலேரி வரைக்கும் தண்ணியைக் கொண்டு வந்து விட்டு விட்டு - வேணும்ன்னா.. திருப்பதியையும் எடுத்துக்குங்க.. பாவா.. - ன்னு சொல்லிட்டு - கைகட்டியபடி பின்பக்கமாகவே நடந்து போனார்கள்..



4. ஆறு குளங்கள் எல்லாம் நிறைந்ததால் - தமிழக மக்கள் எல்லாம் இலவசங்களை வெறுத்து உழைப்பை விரும்பினர்.. ஆளாளுக்கு ஏர் கலப்பை மண்வெட்டி கூடை.. ன்னு எடுத்துக் கொண்டு புறப்பட்டதால் பொட்டல்களாக ஆக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் வயல்வெளிகளாக உருமாறி விட்டன..

5. அடுத்த வருடமும் சரி - அதற்கு அப்புறமும் சரி - இனி எந்தக் காலத்திலும் புயல் மழைக்கு  எந்த ஊரும் சிக்கித் தவிக்காதபடிக்கு சாலைகளும் பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன..

6. இனிமேல் பெய்யும் மழையில் ஒரு துளி கூட வீண் ஆகாதபடிக்கு சேமிப்பு ஆதாரங்கள் அமைக்கப்பட்டு விட்டன..



7. இப்படி வயல்வெளிகள் செழித்துத் தழைத்ததும் காணாமல் போயிருந்த குருவிகள் எல்லாம் திரும்பி வந்து ஊரெல்லாம் சத்தம் போட்ட வண்ணம் பறந்து கொண்டிருக்கின்றன..

8. ஐந்து ரூபாய்க்கு சிவப்பழகு.. - ன்னு கூவிக்கிட்டு இருந்தவன் - மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஊரை விட்டே ஓடிப் போய் விட்டான்.. இதை அறிந்ததும் வழுக்கைத் தலைக்கு தைலம் விற்றவன் மனம் உடைந்து அனகொண்டாவிடம் அடைக்கலம் ஆகிவிட்டான்..

9. நாட்டின் மிகப்பெரிய சோகமாக - 2 நிமிட அவியல் சமாச்சாரத்தை மக்களே முன் வந்து - தலைமுழுகி விட்டார்கள்..

10. நடத்துனர்கள் சில்லறை பாக்கியை உடனுக்குடன் கொடுத்து விட்டதால் பேருந்துகளில் இருந்து மக்கள் சந்தோஷமாக இறங்கிச் சென்றனர்..

இன்னும் அலை அலையாய் ஆசைகள் மலர்ந்து கொண்டிருந்த வேளையில் -

முகத்தில் பன்னீர்ச் சாரல்!..

சுற்றிலும் இந்திராதி தேவர்களும் ரம்பை மேனகா ஊர்வசி அனைவரும் நின்று கொண்டு வாழ்த்து கூறுகின்றார்கள்!..  - என்று திடுக்கிட்டுக் கண்விழித்தால் -

மழைத்தண்ணீர் - திண்ணையில் தெறித்துக் கொண்டிருந்தது..

அந்த வேளையில் -
மின்சாரமும் தடைபட்டுப் போனது..

சரி.. நடந்தது - நடந்து விட்டது..
கில்லர் ஜி அவர்களிடம் இருந்து தப்பித்தவர்களை விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நானும் கொக்கியை வீச நினைத்த போது -

திடீரென்று தோன்றிய தேவேந்திரன்,

மக்கள் எல்லாம் தீபாவளி, புயல் மழை வெள்ளம், மின்வெட்டு - என்று பல்வேறு கொக்கிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, நீ வேறு கொக்கியை வீசுகின்றாயா!.. என் பேச்சைக் கேட்காவிட்டால் - ஆபரேஷன் தியேட்டரில் ரம்பை மேனகா ஊர்வசி எல்லாரையும் நடனமாட விட்டு விடுவேன்.. அப்புறம் ஆபரேஷன் கதி அதோகதிதான்!.. 

- என்று, அன்புடன் எச்சரிக்கை விடுத்தான்..

அதைக் கேட்டுத் திடுக்கிட்ட நான்,

ஐயா தேவேந்திரா.. இப்போதும் அதேகதியாகத்தான் உள்ளது.. ஆளை விடும்!.. உமக்கும் உமது தோழிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.. 

- என்று, கூறி அனுப்பிவைத்தேன்..


ஆகவே, சந்தோஷம் எங்கெங்கும் நிலைக்கட்டும்..

வாழ்க நலம்..
* * *

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஆஹா அனைத்தும் அருமை இவையெல்லாம் நடக்க வேண்டும் என்பதே எமது அவா அருமை ஜி
    ஒவ்வொன்றும் எதிர்கால சந்ததிகளை நினைவில் நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்காக ஆசைப்பட்டு இருக்கின்றீர்கள்
    வாழ்க நலம் நன்றியுடன் – கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      உடனடி வருகைக்கு மகிழ்ச்சி..
      தங்கள் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நல்ல ஆசைகள். உங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது எனது ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      அனைவருடைய ஆசைகளும் நிறைவேறட்டும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சின்ன ஆசைகள் எல்லாம் மிக அருமை. கனவு நனவாக வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அற்புத ஆசைகள் ஐயா
    நிறைவேறட்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா... வயல்கள் எல்லாம் மீண்டும் விளைச்சலைப் பார்க்க வேண்டும்... என்று நான் நினைத்த கனவு அழகாய் ஐயாவின் எழுத்தில்....

    அருமை ஐயா.... அருமை.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் குமார்..

    மீண்டும் விளைச்சல் பெருக வேண்டும்.. அதுதானே முக்கியம்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. நல்ல நல்ல ஆசை. நல்ல தொடர்ச்சி. நான் இன்னும் காணவில்லை, நேரமின்மை காரணமாக. தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      கடந்த சில நாட்களாக - சிவகாசி, திருச்செந்தூர், உவரி என்று திருக்கோயில்களில் தரிசனம்.. எனவே தான் தாமதம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஆசைகள் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  10. ஆசைகள் படங்கள் அனைத்தும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..