நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 10, 2015

அன்னை

தாயிற் சிறந்த கோயிலுமில்லை..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!..
* * *

என்று மறந்தேன்.. நினைப்பதற்கு
இதயம் முழுதும் நீயல்லவோ!..

துறந்தவர் நெஞ்சும் தொழுதிடும் வார்த்தை
தூயவர் என்றும் வணங்கிடும் வார்த்தை..
தொல்புகழ் தமிழில் துலங்கிடும் வார்த்தை
அம்மா.. அம்மா.. அம்மா!.. 


உயிருள் உயிராய் நீ காத்தாய்
உணர்வில் தமிழை நீ வார்த்தாய்
தாயே.. என்றும் நீ வாழ்க!..

நிலவைக் காட்டி ஊட்டிய சோறு
நெஞ்சில் இன்னும் இனிக்குதம்மா..
நினைவில் அமுதாய் நீவாழ்க!..

நலமுடன் வாழ்க.. பல்லாண்டு
சோறும் நீரும் ஊட்டியவள்
பேரும் பெருக்கும் காட்டியவள்
நலமுடன் வாழ்க பல்லாண்டு!..

தோன்றும் பிறவி வரங்கேட்டேன்
மீண்டும் மடியினில் விளையாட
வேண்டும் இதைநீ தருவாயே!..


கண்ணிலும் கனவிலும் உன்தோற்றம்..
காலங்கள் யாவிலும் கடைத்தேற்றும்..
வாழ்க என்றும் பல்லாண்டு!..

சொல்லும் பொருளும் உன்னாலே
வாக்கும் நோக்கும் உன்னாலே
வாழ்க.. என்றும் பல்லாண்டு!..

அன்பின் மலர்கள்தனைக் கொண்டு
அழியாப் புகழை வணங்குகின்றேன்.. 
அம்மா.. வாழ்க.. பல்லாண்டு!..

* * *


விண்ணிலே மண்ணிலே நீரிலே பூவிலே
கண்னிலே கனவிலே நெஞ்சிலே நினைவிலே
எல்லாம் நீதான் அம்மா
செல்வம் நீதான் அம்மா!..
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா..
உன் மடியிலே என்னை சீராட்டம்மா!..
(கவியரசர் கண்ணதாசன்)


அம்மையே.. அப்பா.. ஒப்பிலாமணியே!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
* * *  

22 கருத்துகள்:

 1. அருமை நண்பரே அன்னையை அலங்கரித்த வார்த்தைகள் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. நல்ல நாளில் நல்ல பதிவு. மனதில் நின்றன தங்களின் சொற்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. அன்னைக்கு ஈடு இணை ஏது
  அன்னையர் தின வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. கண் கண்ட தெய்வம்...

  என்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. தாங்கள் அன்னைக்கு எழுதிய பா அருமை. அன்னையர் தின வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. தங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னைக்காக உருவாக்கப்பட்ட கவிதை மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. என்று மறந்தேன் நினைப்பதற்கு
  இதயம் முழுதும் நீயல்லவோ...

  அற்புதமான ஆரம்பம் மறந்தால் அல்லவா நினைப்பதற்கு,,,நானும் அதைத்தான் நினைத்தேன். இன்று அன்னையர் தினம் எனும் போது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நமது பண்பாட்டில் அன்னையே முதற் பொருள்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. அருமை.

  அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 9. தங்கள் பாவரிகளில் தெரிகிறதே
  தாயவள் உள்ளம் கண்டேன் - பின்
  தாயை நினைக்காத உள்ளம் உண்டோ - இவ்
  உலகில் என்று உணர்ந்தேனே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் கவிதை அழகு .. அருமை..
   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. அன்னைக்கான கவிதை வரிகள் அருமை.....வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..
   வாழ்க நலம்..

   நீக்கு
 11. அன்னைக்காய் அளித்த அன்பு வாழ்த்துக்கள் அனைத்தும் அமுதே!
  வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
   வாழ்க நலம்..

   நீக்கு