நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 01, 2015

சித்திரைத் திருவிழா - 6

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
பத்தாம் திருநாளாகிய நேற்று (30/4) காலை 9.20 மணியளவில்
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்தது.

தொடர்ந்து -

பத்தாம் திருநாள் மற்றும் பதினொன்றாம் திருநாளின் படங்களை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின் 
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!.. (37) 

என்ன ஒரு ஆக்ரோஷம்!..

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்., 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் 
நேற்று காலை மங்கலகரமாக நிகழ்ந்தது.

பத்தாம் திருநாள் (30/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
அதிகாலை 4.00 மணியளவில் புறப்பாடாகிய இளங்கிளி மீனாள்
சித்திரை வீதிகளில் வலம் வந்தருளி - முத்துராமையர் மண்டபத்தில்
கன்னி ஊஞ்சலாடி அருளினாள்.

அதன் பின் - திருமண மண்டபத்திற்கு எழுந்தருள,
திருக்கல்யாணம் கோலாகலமாக நிகழ்ந்தது.
-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசர் யானை வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை பூப்பல்லக்கிலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
அம்மையப்பனுக்காகக் காத்திருக்கும் திருத்தேர்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 
இன்று காலை திருத்தேரோட்டம் நிகழ்ந்தது.

பதினொன்றாம் திருநாள் (1/5) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
அதிகாலை 5.35 மணிக்குள்ளான மேஷ லக்னத்தில் 
ஐயன் சுந்தரேசப் பெருமானும் அன்னை மீனாட்சி அம்பிகையும் 
திருத்தேருக்கு எழுந்தருளினர்.

காலை 6.30 மணியளவில் 
ஹர ஹர சுந்தரா.. மீனாட்சி சுந்தரா.. 
எனும் முழக்கங்களுடன் 
திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.


திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் கோலாகலமாக நிகழ்ந்தது.

-: இரவு :-
ஸ்ரீசுந்தரேசப்பெருமானும் அங்கயற்கண் அம்பிகையும் 
சப்தாவர்ண சப்பரத்தில் ஆரோகணித்து 
மாசி வீதிகளில் வலம் வந்தருள்வர்.


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!.. (50)
-: அபிராமி அந்தாதி :-

திருச்சிற்றம்பலம்
* * *

12 கருத்துகள்:

 1. மதுரையே விழாக்கோலத்தில்தானே. அடுத்த விழா கள்ளழகர் ஆற்றில் இறங்குவதுதானே அருமையான படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு ரசிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 2. புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே கீழிருந்து மேல் நாலாவது படத்தில் நான்கு பேர் அந்தரத்தில் எப்படி ? நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   உற்சாகம் பீறிட்டது என்பார்களே.. அதுதான் போல!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. பல நாட்களாக இணையம் வரவில்லி ஆதலால் உங்களுடைய திருவிழாக்கள் பலவற்றை தவற விட்டு விட்டேன். ஒவ்வொன்றாகப் படித்துக் கருத்திடுகிறேன். துரை சார்.
  மீனாக்ஷி திருக்கல்யாணத்திற்கு வந்து விட்ட திருப்தி வந்து விட்டது உங்கள் பதவியும் படங்களையும் பார்க்கும் போது.
  நன்றி துரை சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வெகு நாட்களுக்குப் பின் தங்கள் வருகை!..
   மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. அருமையான விளக்கமும் அதற்கேற்ற படங்களும் பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. சித்திரைத் திருவிழா காட்சிகளை உங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு