நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி நிறைநிலா
சிவாலயங்களில் அன்னாபிஷேக வைபவம்
சோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும்
ஒரு சிவலிங்கம் - என, ஆகின்ற நாள்..
சதய நாளாகிய
புதனன்று தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வர தரிசனம்..
அப்போது எடுக்கப்பட்ட
படங்கள் இன்றைய பதிவில்..
அறுபதுகளில்
கோயிலுக்குள் மட்டுமே நிகழ்த்தப்பட்ட வைபவம் - எழுபதுகளில் ராஜராஜ சோழருக்கு சிலை வைக்கப்பட்டதும் வெளியில் வந்து இன்றைக்கு சாகசம் என்று ஆகி விட்டது..
சிலை வைக்கப்படுவதற்கு முன்பு திருக்கோயிலின் வாசலில் பெரிய பந்தலும் வாழை மாவிலைத் தோரணங்களும் தனி அழகாக இருக்கும்..
இப்போது
கோயிலின் வாசலில் மின்னொளி அலங்காரம் என்பதால்
தமிழரின் பாரம்பரிய தோரண அலங்காரங்கள் எதுவும் செய்யப்படவில்லை..
கோயில் வளாகத்தில் புரவி நாட்டியக் கலைஞரான தஞ்சை கலைமாமணி
ஸ்ரீ நாடி ராவ் தம்பதியினரை சந்தித்ததில் மகிழ்ச்சி..
அடுத்தொரு பதிவில் மேலும் சில படங்கள்.
இந்த வருடம் என்னை
இவ்விதமாக இயக்கிய
இறைவனுக்கு நன்றி..
***
மாமன்னர் புகழ் வாழ்க.
ஓம் நம சிவாய
சிவாய திருச்சிற்றம்பலம்
***

























