நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12
ஞாயிற்றுக்கிழமை
நேரம் அமையும் போதெல்லாம் புன்னை நல்லூருக்குப் புறப்பட்டு விடுவோம்..
அதிகாலை ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் கோயில் திறந்திருக்கும்..
ஞாயிறு செவ்வாய் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களின் மதியப் பொழுதுகள் நெரிசல் இல்லாமல் இருக்கும்..
அன்னையைத் தரிசித்த பிறகு
அங்கும் இங்குமாகப் படம் எடுப்பதே வேலை..
இதனால் பதிவில் திரும்பத் திரும்ப கோயில் படங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை..
மராட்டியர் காலத்து மண்டபத்துத்
தூண்களில் இது மாதிரி சிதைவுகள்
காணப்படுகின்றன..
இங்கே உடைபடும் தேங்காய்களின் நீரை மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள்
ஒரு ஓரமாக இருக்கின்றன..
மூன்றாம் திருச்சுற்றில்
புன்னையும் வேம்பும்
நாக பிரதிஷ்டைகளும்
உள்ளன..
![]() |
| விளக்கு நாச்சியார் |
புண்ணியமே பூத்ததம்மா
புன்னை எனும் பூவனத்தில்
பொங்குநலம் எல்லாமும்
பூத்துவரும் இவ்விடத்தில்..
மண்ணளந்த நாயகியும்
மடியளக்கும் பூவனத்தில்
மங்கலங்கள் தான்தருவாள்
மனங்கொண்ட பேரிடத்தில்..
திகட்டா அமுதெனத் திகழ்கின்ற தாயே..
திருமுகங் காட்டித் திரு அருள்வாயே..
திக்கெல்லாம் ஆள்கின்ற திருவுடையாளே
தீவினை தீர்த்து துணை வருவாயே..
எல்லாம் அறிந்தவள் உன்னிடத்தில்
ஏதெனச் சொல்வேன் என் குறையை..
எல்லாம் அறிந்தவள் நீயே நீயே முன்னின்று
காத்திடு காத்திடு காத்திடுவாயே..
**
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***































