நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திங்கட்கிழமை
நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில்
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அல்லியங்கோதை உடனுறை தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனாகிய சுப்ரமணிய ஸ்வாமி, ஸ்ரீ சண்டிகேசர் யதாஸ்தானத்தில் இருந்து முத்துமணி அலங்கார சப்பரத்தில் கோயிலில் இருந்து, மேல ராஜ வீதியில் உள்ள தேர்நிலைக்கு எழுந்தருளினர்..
காலை ஏழு மணியளவில் ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது..
சிவநேசச் செல்வர்களாகிய அன்பர்கள் ராஜ வீதிகளின் பல்வேறு இடங்களிலும் - பந்தல் அமைத்து - நீரும் மோரும் பானகமும் விசிறிகளும் வழங்கி மகிழ்ந்தனர்..
ராஜவீதிகளின் பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது....
மேல ராஜவீதியில் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் தேர் நிலை நின்றிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..
சென்ற வருடத்தை விட இவ்வருடம் அதிகமான கூட்டம்..
கடும் நெரிசலில் கசப்பான நிமிடங்களும் அமைந்து விட்டன.. உடல் நலக் குறைவுடையோரும் இருப்பார்களே என்ற எண்ணம் இல்லாதவர்களால் ஏற்பட்ட பிரச்னை..
இந்த அளவில் தரிசனம் பெரும் பாக்கியம்..
அடுத்த ஆண்டு கூடுதல் உடல் நலத்துடன் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்கு பெருவுடையார் அருள்புரிவாராக!..
பதிவின் பகுதி இரண்டு
படங்கள் காணொளி
நன்றி: நம்ம தஞ்சாவூர்
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
































