நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திங்கட்கிழமை
நிகழும் சுபஸ்ரீ சோபகிருது வருடத்தின் சித்திரைத் திருவிழா ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் சித்திரை 10
(ஏப்ரல் 23) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி,
சித்திரை 25 (மே 8)
வரை நடைபெற உள்ள நிலையில்
சித்திரை 17 (ஏப்ரல் 30)
மீனாட்சி பட்டாபிஷேகம்
நிகழ்ந்தது..
இன்று
சித்திரை 18 (மே 01)
மீனாட்சி அம்மன் திக் விஜயம் நிகழ்கின்றது.
நாளை
செவ்வாய்க் கிழமை சித்திரை 19 (மே 02)
ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண வைபவம்..
சித்திரை 20 (மே 03) திருத்தேரோட்டம்..
தொடர்ந்து
சித்திரை 21 (மே 4) அன்று வைகை ஆற்றில் தவமிருக்கும் மண்டூக மகரிஷிக்காக அழகர் மலையில் இருந்து, மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர்
சித்திரை 21 (மே 04) அன்று இரவு மதுரை மூன்று மாவடியில் எதிர் சேவை கொண்டு,
சித்திரை 22 (மே 05)
சித்ரா பெளர்ணமி நாளில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம்
அளிப்பதற்காக வைகையில் இறங்குகின்றார்..
சித்திரை 24 (மே 07) ல்
தசாவதாரம் மோகினித் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு - என, சேவை சாதித்த பின்னர், சித்திரை 25 (மே 08) அன்று கள்ளழகர் மலைக்குத் திரும்புகின்றார்..
இந்நாளில்
திருவிழாவின் காட்சிகள்..
Fb ல் வழங்கியவர்
திரு. ஸ்டாலின்..
அன்பின் நன்றி..
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-
**
பதிவின் பகுதி
இரண்டு
தஞ்சை பெரிய கோயில்
திருவிழா காணொளி
நன்றி: நம்ம தஞ்சாவூர்,
SFA Studios
ஓம் நம சிவாய சிவாய நம
***
























