சில தினங்களுக்கு முன் (25/ஆகஸ்ட்)
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
தன்னுடைய ஆன்மிக பயணம் எனும் தளத்தில்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!..
பவித்ரோத்ஸவம் - பூச்சாண்டி சேவை!...
என்னும் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்...
அந்தப் பதிவினை -
அந்தப் பதிவினில் சொல்லப்பட்டிருந்த தகவல்கள் மிக மிக மகிழ்ச்சியளித்தன...
ஜேஷ்டாபிஷேகம் - பற்றி ஓரளவு அறிந்திருக்கின்றோம்...
ஆனால்,
இந்த பவித்ரோத்ஸவம் - என்று
செய்தி வரும் போதெல்லாம் ஒன்றும் புரியாது...
பட்டு நூல் கொண்டு ஆன - மாலைகளுடன்
ஸ்ரீ நம்பெருமாளின் படங்களை எங்காவது பார்க்கும்போது
மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...
இது ஏன்!.... பட்டு நூல் மாலை ஸ்வாமிக்கு!?...
மனம் வழக்கம் போல வியப்படையும்...
அத்துடன் களைத்துப் போகும்...
ஏனெனில்- இங்கே யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது!?..
ஆனாலும் ,
நம்பெருமாள் அதனையும் தெரிந்து கொள்ளச் செய்தான் -
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வழங்கிய பதிவின் மூலமாக!...
மறுநாள் - (26 ஆகஸ்ட்)
கையிலிருந்த நுண்ணலைபேசியை
குடைந்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த அதிர்ச்சி...
Facebook ல்
அரங்கனின் அன்பர்களால்
நம்பெருமாளின் பவித்ரோத்ஸவம்
ஐந்தாம் திருநாள் புறப்பாடு காணொளி வெளியிடப்பட்டிருந்தது...
ஆகா!.. பவித்ரம்.. பவித்ரோத்ஸவம்!.. - என, மனம் ஆனந்தக் கூத்தாடியது...
அரங்கனின் அடியார்கள் -
திவ்ய தரிசனம் - எனும் பெயரில்
திவ்ய தேசங்கள் பலவற்றிலும் நிகழும்
மகத்தான வைபவங்களின் திருக்காட்சிகளை
பலரும் அறியத் தந்து கொண்டிருக்கின்றனர்...
அரங்கனின் அடியார் தமக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!
யான் பெற்ற இன்பமாக
அந்தக் காணொளியினையும் காட்சிகளையும்
இன்றைய பதிவினில் தந்துள்ளேன்....
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
தன்னுடைய ஆன்மிக பயணம் எனும் தளத்தில்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!..
பவித்ரோத்ஸவம் - பூச்சாண்டி சேவை!...
என்னும் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்...
அந்தப் பதிவினை -
ஜேஷ்டாபிஷேகம் - பற்றி ஓரளவு அறிந்திருக்கின்றோம்...
![]() |
| ஸ்ரீ நம்பெருமாள் - திருஅரங்கம். |
ஆனால்,
இந்த பவித்ரோத்ஸவம் - என்று
செய்தி வரும் போதெல்லாம் ஒன்றும் புரியாது...
பட்டு நூல் கொண்டு ஆன - மாலைகளுடன்
ஸ்ரீ நம்பெருமாளின் படங்களை எங்காவது பார்க்கும்போது
மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...
இது ஏன்!.... பட்டு நூல் மாலை ஸ்வாமிக்கு!?...
மனம் வழக்கம் போல வியப்படையும்...
அத்துடன் களைத்துப் போகும்...
ஏனெனில்- இங்கே யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது!?..
ஆனாலும் ,
நம்பெருமாள் அதனையும் தெரிந்து கொள்ளச் செய்தான் -
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வழங்கிய பதிவின் மூலமாக!...
மறுநாள் - (26 ஆகஸ்ட்)
கையிலிருந்த நுண்ணலைபேசியை
குடைந்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த அதிர்ச்சி...
Facebook ல்
அரங்கனின் அன்பர்களால்
நம்பெருமாளின் பவித்ரோத்ஸவம்
ஐந்தாம் திருநாள் புறப்பாடு காணொளி வெளியிடப்பட்டிருந்தது...
ஆகா!.. பவித்ரம்.. பவித்ரோத்ஸவம்!.. - என, மனம் ஆனந்தக் கூத்தாடியது...
அரங்கனின் அடியார்கள் -
திவ்ய தரிசனம் - எனும் பெயரில்
திவ்ய தேசங்கள் பலவற்றிலும் நிகழும்
மகத்தான வைபவங்களின் திருக்காட்சிகளை
பலரும் அறியத் தந்து கொண்டிருக்கின்றனர்...
அரங்கனின் அடியார் தமக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!
யான் பெற்ற இன்பமாக
அந்தக் காணொளியினையும் காட்சிகளையும்
இன்றைய பதிவினில் தந்துள்ளேன்....
பவித்ர மாலையுடன்
பரமனின் திருக்கோலங்கள்..
![]() |
| ஸ்ரீ கோதண்டராமர் - திருப்பதி |
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கட மாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-
![]() |
| ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் வானமாமலை |
![]() |
| ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி |
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருஅல்லிக்கேணிக் கண்டேனே.. (1069)
-: திருமங்கையாழ்வார் :-
![]() |
| ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி - ராஜ மன்னார்குடி |
![]() |
| ஸ்ரீ தலசயனப்பெருமாள் - திருக்கடல்மல்லை |
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என்நாயகனே.. (1100)
-: திருமங்கையாழ்வார் :-
![]() |
| ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் - திருவதிகை |
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றா முன்துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள்தந்திடு என்எந்தை பிரானே..(1549)
-: திருமங்கையாழ்வார் :-
![]() |
| ஸ்ரீ அரங்கநாதன் |
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டது தென்னரங்கத்தே.. (1406)
-: திருமங்கையாழ்வார் :-
-: திருமங்கையாழ்வார் :-
***
அடியார் அனைவரையும்
அரங்கன்
ஆதரித்தருள்வானாக!..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

















