நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 27, 2018

பவித்ரோத்ஸவம்

சில தினங்களுக்கு முன் (25/ஆகஸ்ட்)
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
தன்னுடைய ஆன்மிக பயணம் எனும் தளத்தில்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!..
பவித்ரோத்ஸவம் - பூச்சாண்டி சேவை!...

என்னும் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்...

அந்தப் பதிவினை -


அந்தப் பதிவினில் சொல்லப்பட்டிருந்த தகவல்கள் மிக மிக மகிழ்ச்சியளித்தன...

ஜேஷ்டாபிஷேகம் - பற்றி ஓரளவு அறிந்திருக்கின்றோம்...

ஸ்ரீ நம்பெருமாள் - திருஅரங்கம்.

ஆனால்,
இந்த பவித்ரோத்ஸவம் - என்று
செய்தி வரும் போதெல்லாம் ஒன்றும் புரியாது...

பட்டு நூல் கொண்டு ஆன - மாலைகளுடன்
ஸ்ரீ நம்பெருமாளின் படங்களை எங்காவது பார்க்கும்போது
மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...

இது ஏன்!.... பட்டு நூல் மாலை ஸ்வாமிக்கு!?...

மனம் வழக்கம் போல வியப்படையும்...
அத்துடன் களைத்துப் போகும்...

ஏனெனில்- இங்கே யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது!?..

ஆனாலும் ,

நம்பெருமாள் அதனையும் தெரிந்து கொள்ளச் செய்தான் -
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வழங்கிய பதிவின் மூலமாக!...

மறுநாள் - (26 ஆகஸ்ட்)
கையிலிருந்த நுண்ணலைபேசியை
குடைந்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த அதிர்ச்சி...

Facebook ல்
அரங்கனின் அன்பர்களால்
நம்பெருமாளின் பவித்ரோத்ஸவம்
ஐந்தாம் திருநாள் புறப்பாடு காணொளி வெளியிடப்பட்டிருந்தது...

ஆகா!.. பவித்ரம்.. பவித்ரோத்ஸவம்!.. - என, மனம் ஆனந்தக் கூத்தாடியது...

அரங்கனின் அடியார்கள் -
திவ்ய தரிசனம் - எனும் பெயரில்
திவ்ய தேசங்கள் பலவற்றிலும் நிகழும்
மகத்தான வைபவங்களின் திருக்காட்சிகளை
பலரும் அறியத் தந்து கொண்டிருக்கின்றனர்...

அரங்கனின் அடியார் தமக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!

யான் பெற்ற இன்பமாக
அந்தக் காணொளியினையும் காட்சிகளையும்
இன்றைய பதிவினில் தந்துள்ளேன்....


பவித்ர மாலையுடன்
பரமனின் திருக்கோலங்கள்..

ஸ்ரீ கோதண்டராமர் - திருப்பதி
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கட மாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள்
வானமாமலை
ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருஅல்லிக்கேணிக் கண்டேனே.. (1069)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி - ராஜ மன்னார்குடி
ஸ்ரீ தலசயனப்பெருமாள் - திருக்கடல்மல்லை
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என்நாயகனே.. (1100)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் - திருவதிகை
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றா முன்துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள்தந்திடு என்எந்தை பிரானே..(1549)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ அரங்கநாதன்
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டது தென்னரங்கத்தே.. (1406)
-: திருமங்கையாழ்வார் :-
***
அடியார் அனைவரையும் 
அரங்கன் 
ஆதரித்தருள்வானாக!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

16 கருத்துகள்:

 1. இந்தத் தளத்தில் உற்சவர்களின் வீதியுலா பவித்ர மாலையுடன் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  கீதா சாம்பசிவம் மேடத்திடம் நான் மூலவர் (அரங்கநாதன்) படங்கள் அனுப்பி, அவர் மீது வட்ட வட்டமாக நூல்களை மேலே அணிவித்திருக்கிறார்களே என்று கேட்டு இதன் தாத்பர்யம் என்ன என்று கேட்டிருந்தேன். உடனடியாக ஒரு பதிவின் மூலம் அதை விளக்கியிருந்தார்கள். நான் மிகவும் சிலிர்த்துவிட்டேன். ஏனென்றால் இந்த நாள் வரை, அந்தக் கோலத்தில் ஸ்ரீரங்கம் மூலவரைக் கண்டதில்லை (இந்தக் காலத்தில் செல்போன் செய்யும் கோலங்களுள் இதுவும் ஒன்று).

  காணொளியைக் கண்டேன். எனக்கு, அவன் அடியார்களின் உண்மையான பக்தியைப் பார்க்கும்போதும் மனது மிகவும் நெகிழும். என்ன ஒரு பக்தி இருந்தால் நம்பெருமானுக்கு விசிறிவிடுவார்கள், குழந்தையைப் போன்ற கேர் எடுத்துக்கொள்வார்கள். அந்த பக்தியில் ஒரு துளியை இந்த ஜென்மத்தில் எனக்குக் கொடுக்கக்கூடாதா என்பதுதான் என் வேண்டுதல்.

  எப்போதும்போல் பொருத்தமான பிரபந்தப் பாடல்கள். உங்கள் பிறப்பை முன்னேற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு இறைவன் வரம் அருளியிருக்கிறான். மிகுந்த சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த.. அவர்களுக்கு நல்வரவு...

   >>> அந்த பக்தியில் ஒரு துளியை இந்த ஜன்மத்தில் எனக்குக் கொடுக்கக் கூடாதா!... <<<

   அந்தத் துளியிலும் துளியை எனக்குக் கொடுத்தானோ - அரங்கன்!..

   அறியேன்...
   எப்படியோ அரங்கனின் அடியார்களுள் ஒருவராக ஆவதும் அவனருளே!..

   அதுவும் எம் முன்னோர் செய்த தவப்பயனே!...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

   இரண்டு நாட்களாகவே தளத்தை என்னால் இயக்க முடியவில்லை...
   கருத்துரைப் பெட்டியைத் திறந்தால் ஏகப்பட்ட குறிப்பெழுத்துகளுடன் சிக்கிக் கொண்டிருக்கின்றது... எதையும் செய்ய முடியவில்லை...

   நெருப்பு நரியைத் திறந்தால் தமிழ் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது..

   தாமதத்துக்கு பொறுத்துக் கொள்ளவும்... நன்றி...

   நீக்கு
 2. பவித்ரோத்ஸவம் - காணொளி அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. மிகப் பொருத்தமான பாசுரங்களுடன் அருமையான பவித்ரோத்ஸவக் கொண்டாட்டம். எல்லா உற்சவர்களும் கண்ணையும், மனதையும் நிறைத்து விட்டார்கள். இந்த ஶ்ரீரங்கம் பதிவுகள் எனக்கும் வாட்சப் மற்றும் முகநூல் மூலம் வந்து கொண்டிருக்கிறது. சிலவற்றைப் பார்த்தேன். மற்றக்கோயில் பெருமாள் அனைவரையும் இங்கேயும் காண முடிந்ததுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்களால் தான் இந்தப் பதிவு கூடி வந்தது.. நன்றி..

   நீக்கு
 4. பவித்ரோத்ஸவம் காணொளி அருமை.
  நேரில் தரிசனம் செய்த உணர்வை கொடுத்தது.
  பாடல் பகிர்வுகளை படித்து மகிழ்ந்தேன்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. பவித்ரோத்ஸவம் ஸரியான பொருள் விளங்கியதில்லை. நிறைய விஷயங்கள் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க அழகு. நன்றி அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அம்மா...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. அழகிய படங்களுடன் பதிவை ரசித்தேன்.

  அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்... அதுபோல தேடியவர் கண்ணுக்கு தன் அடியவர்கள் மூலமாகவே விடையை அனுப்பி இருக்கிறார் பெருமாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   >>> அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்.. <<<

   அப்படித்தான் எனக்கும் தோன்றுகின்றது...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அற்புத தரிசனம்...

  உண்மையில் எனக்கு மிக விருப்பமானதும் கூட ..fb வழியாக ஏற்கனவே இந்த தரிசனங்கள் கிடைக்க பெற்றேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பவித்ரோத்ஸவம் - இதுவரை கண்டதில்லை. உங்கள் மூலம் காணொளியாகக் காணக் கிடைத்தது - மகிழ்ச்சி.

  படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு