நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பாரதரத்னா


பாரதரத்னா 
ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்...
( 25/12/1924 - 16/8/2018)

பாரதத்தின் தவப்புதல்வர்..

நிர்வாகத் திறமை மிக்கவர்..

பிரதமர் பதவி இவரால் சிறப்புற்றது..

மிகச் சிறந்த தலைவராகத் திகழ்ந்தவர்..



தமது ஆட்சிக் காலத்தில்

பாரதத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்..
அதோடு மட்டுமல்லாமல்
அதன் முன்னேற்றத்தைக் கண்களில் கொண்டு 
அதற்கான வழிமுறைகளைக் கண்டவர்...



பொக்ரானில் அணு சக்தி சோதனையை நடாத்தி
அந்நியர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர்...


தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்ட திருமகன்..
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெருமகன்..


வையகத்து வாழ்வில் இருந்து
விடை பெற்றுக் கொண்டார்...


கை கூப்பி வணங்குகிறேன்..
சென்று வாருங்கள் ஐயா!..

மீண்டும் 
தங்களை மகனாக - மடி தாங்கக் 
காத்திருக்கின்றாள் பாரதத் தாய்!..
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. விரோதிகளே இல்லாத ஒரு மனிதர். அனைவராலும் நேசிக்கப்பட்டவர். வயதும் ஆகி விட்டது! நோயும் படுத்தி எடுத்துவிட்டது. அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் விரோதிகள் உண்டே கீசா மேடம்.... மறந்துட்டீங்களா?

      நீக்கு
  2. ஒரு மிகச்சிறந்த மனிதரை இழந்து விட்டோம். ​அவர் 2005 லேயே அரசியலிலிருந்து ஒய்வு பெற்று விட்டாலும் மறக்க முடியாத மனிதர்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நல்ல மனிதர்... இனி இவர் போல் கிடைப்பது(ம்) அரிது என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  4. நமக்குத்தான் அதிருஷ்டம் இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால், ஒரு முறை தோற்றிருந்தாலும், மீண்டும் மக்கள் அவரைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். காங்கிரசுக்கான ஒற்றை மாற்றுக் கட்சி என்ற நிலைக்கு பாஜகவைக் கொண்டுவந்தார். வெறும் 5 வருடத்தில், பொக்ரான், நெடுஞ்சாலைகள், ஜனாதிபதி பதவிக்கு கலாம் அவர்களைக் கொண்டுவந்தார். நிறைய நல்லவனவைகளை அவர் குறுகிய காலத்தில் நடத்திக்காட்டினார்.

    அவருக்கு பொக்ரான் அணுகுண்டுக்காக பாரதரத்னா விருது கொடுக்கக்கூடாது என்பதற்காக கலாம் அவர்களுக்கு, அந்தக் காரணத்துக்காக விருது காங்கிரஸ் அரசு கொடுத்தது என்பதும் இப்போ நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தலைவரை இழந்திருக்கிறது நாடு.

    எனது அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  6. அஜாத சத்ரு என்று பெயர் பெற்றவர் ஒரு நல்ல மனிதர்

    பதிலளிநீக்கு
  7. எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் எமது இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  8. அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.. ஆத்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தலைவர், ஆழ்ந்த இரங்கல்கள்..

    நல்லதொரு அஞ்சலி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..