நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018

வருவாய்.. வருவாய்..


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா..
வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா..


உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா..
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா..


இணைவாய் எனதா வியிலே கண்ணா
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா...
கணைவா யசுரர் தலைகள் சிதற
கடையூ ழியிலே படையோ டெழுவாய்...


எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே...
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே!..
-: மகாகவி பாரதியார் :-
***


கண்ணா வருக..
மணிவண்ணா வருக...

நின் அருளே எங்கும் செல்வமாய் நிறைய
சிவமாய் வருக... எங்கள் தவமாய் வருக...
ஸ்ரீ க்ருஷ்ண... ஸ்ரீ க்ருஷ்ண.. ஸ்ரீ க்ருஷ்ணா சரணம்...

ஓம் ஹரி ஓம்...
ஃஃஃ

21 கருத்துகள்:

 1. கண்ணன் பாமாலை ரசிக்க வைத்தது.
  அழகிய படங்கள் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 3. அழகான படங்கள். கண்ணன் வருகையை எதிர்பார்த்து நானும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. நன்னாளில் நாளுக்கேற்ற உரிய நற்சிந்தனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 6. கண்ணன் பாடல் பிடித்த பாடல்.
  சீர்காழியின் குரலில் இந்தபாட்டை அடிக்கடி கேட்பேன்.
  கண்ணன் கழலடி போற்றி போற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   1980 களில் சீர்காழியாரின் வெங்கலக் குரலில்
   மகாகவியின் பாடல்கள் வெளியாகி இருந்தன...

   நானும் கேட்டிருக்கின்றேன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அழகான கண்ணன் படங்களும். பாமாலைகளுமாய் பதிவு மிக அருமை. பக்தி வெள்ளத்தில் எங்களை மிதக்க செய்வதற்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 8. கிருஷ்ணன் படங்கள் வெகு காந்தம். பாடல்களை எங்கே படித்தேன். படங்களை அமிர்தம்போல் ருசித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   கண்ணன் நம்மைக் கவர்ந்து விட்டானாகில்
   நாம் மற்றவற்றைக் காண்பதேது.. கேட்பதேது!...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. பாடல் அருமை. ஆனால் கேட்ட ஞாபகம் இல்லை.

  கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான், குழலெடுப்பான் பாட்டிசைப்பான் என்ற பி.சுசீலா குரல்தான் மனதில் ஒலிக்கிறது.

  படங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த...

   இந்தப் பாடல் - 1980 களில் சீர்காழியார் வழங்கிய இசைத்தொகுப்பில் உள்ளது...

   மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் P. சுசிலா அவர்களின் பாடலும் இனிமை தான்..

   ஆனால், நான் தங்களுக்காகத்தான் மகாகவியின் பாடலைப் பதிவில் வைத்தேன்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. இன்னொன்று துரை செல்வராஜு சார்... எல்லா ஓவியங்களும், கடவுள் படங்களாக இருந்தாலும், நம் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் கடவுள் போல் இல்லைனா மனதுக்கு உவப்பா இருக்காது. நான் வாங்கும் படங்கள் எனக்கு மனதில் அவரின் உருவத்தைக் கொண்டுவருவதாக இருக்கணும். (உதாரணமா கடைசிப் படமும்-சங்கு சக்கரக் கையேந்தியவன், அதற்கு முந்தைய போர்க்களப் படமும்-அனேகமா இது சைதன்ய மஹாப்ரபுவின் கீதை புத்தகத்தில் இருக்கும் படம்னு நினைக்கறேன், மனதைக் கவர்வதாக இருக்கிறது. அதற்காக மற்ற படங்களில் குறையில்லை)

  இந்த மாதிரி உங்களுக்குத் தோணியிருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   தங்கள் கருத்து மிகவும் சரியே...
   என் மனதிலும் பலமுறை தோன்றியிருக்கின்றது..

   நம் மனதில் உள்ளதைக் கொண்டு வருவதாக இருக்கணும்...

   மிகப் பிரபலமான ஓவியர்களின் ஓவியங்கள் கூட சமயத்தில் என்னைக் கவர்வதில்லை..

   போர்க்களக் காட்சி தாங்கள் சொல்வது போல் சைதன்ய மஹாப்ரபு அவர்களின் கீதை புத்தகத்தில் இருக்கக்கூடும்.. நான் பார்த்ததில்லை...

   நான் இணையத்திலிருந்து தான் எடுத்தேன்...

   கடைசியாக உள்ள சங்கு சக்ரதாரி - திரு. கொண்டையராஜூ அவர்களின் கை வண்ணம்...

   பின்புலத்து அலங்காரங்களுடன் கூடிய அழகு ஓவியம்... குருவாயூரப்பனைக் காட்டுவது..

   ஆனால் அவற்றை நீக்கி விட்டு வெளியிட்டது யார் எனத் தெரியவில்லை... விகடனின் தளத்திலிருந்து பெற்றது...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. வருவாய் வருவாய் கண்ணா பாடலுடன் கண்ணனை அழைத்தது அருமை அண்ணா படங்கள் செம...

  கீதா

  பதிலளிநீக்கு