நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

ஐயாறர்க்கு ஆளாய்..

ஆடி அமாவாசையாகிய நேற்றைய தினம் (11/8)
திருஐயாற்றில் அப்பர் பெருமானுக்கு
திருக்கயிலாய தரிசனம் அருளப் பெற்ற வைபவத்தை
முந்தைய பதிவில் குறித்திருந்தேன்....

திருவையாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் திருக்கோயிலில்
நேற்று நிகழ்ந்த கோலாகலத் திருக்காட்சிகளை
அன்புக்குரிய திருவையாறு சிவ சேவா சங்கத்தினர் வழங்கியுள்ளனர்...

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

திருநாவுக்கரசர் அருளிய 
திருப்பதிகத் திருப்பாடல்களுடன்
சிவ தரிசன திருக்காட்சிகள் இன்றைய பதிவில்!...
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே..(4/38)

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே..(4/38)கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே..(4/13)எரியலால் உருவம் இல்லை ஏறலால் ஏறல் இல்லை
கரியலாற் போர்வை இல்லை காண்டகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர்கூடிப் பெருந்தகைப் பிரான் என்றேத்தும்
அரியலாற் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே..(4/40)சகமலா தடிமை இல்லை தானலால் துணையும் இல்லை
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.. (4/40)ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ..(6/38)எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே..
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே..
பொல்லாவினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே..
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ..(6/38) ஏடுமதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயாறடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்..(4/3)
-: திருநாவுக்கரசர் :-
*** 

அண்ணான ஐயாறர்க்கு 
ஆளாய்நான் உய்ந்தேனே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. அருமையான பதிவு.
  நேரில் தரிசனம் செய்த மகிழ்ச்சி.
  பாடல்கள் எல்லாம் மிகவும் பிடித்த பாடல். தினம் விளக்கு ஏற்றும் போது எல்லா உலகமும் ஆனாய் நீயே பாடுவேன். படங்களை கொடுத்து உதவியர்களுக்கு நன்றி.
  என் அண்ணி நேற்று அங்கு போய் இருக்கிறார்கள். இன்று கேட்க வேண்டும் அவர்கள் அனுபவம் எப்படி என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு மேடம்... எனக்கு தேவாரம் போன்றவைகளை எப்படிப் பாடுவார்கள் என்று கேட்க மிகுந்த ஆசை (சிவனடியார்கள் பாடுவது). நாங்கள் திவ்யப் ப்ரபந்தம் அவ்வப்போது சொல்வதுபோல், நீங்களும் தேவாரம் திருவாசகம் போன்றவற்றைச் சொல்வீர்களா? இந்தத் தடவை நெல்லையப்பர் கோவிலில் ஒரு சிவனடியாரைப் பார்த்தேன். நேரமிருந்திருந்தால் அவர் அருகில் உட்கார்ந்து பேசியிருப்பேன்.

   நீக்கு
  2. சிதம்பரம் போயிருக்கீங்களா நெ.த.? அங்கே ஒவ்வொரு கால பூஜைக்கும் ஓதுவார்கள் தேவாரம் முதல் பஞ்சபுராணங்களும் ஓதுவதைக் கேட்கலாம். மற்றச் சிவன் கோயில்களிலும் அந்த அந்தக் கால பூஜைக்கு ஏற்ப உள்ள பண்ணில்(ராகம்) குறிப்பிட்ட சில தேவாரப் பாடல்களைப் பாடுவார்கள். திருநெல்வேலியின் நவ கைலாசத்திலும் பார்க்கலாம். சென்னை மயிலையில் இதற்கெனத் தனியான அடியார் குழாமே உண்டு. தேவாரம், திருவாசகம் கற்றும் கொடுக்கின்றனர். சிதம்பரத்திலும் கோயிலிலே ஆதீனங்கள் பள்ளிகளை நடத்துகின்றன.

   நீக்கு
  3. கர்நாடக சங்கீதப் பாடகி சௌம்யா திருஞானசம்பந்தரின் குறிப்பிட்ட சில தேவாரங்களைக் கச்சேரிகளில் பாடுவார். அவர் தேவாரப் பண்களையும் தற்போதைய கர்நாடக சங்கீத ராகங்களையும் குறித்து ஆய்வு செய்து பல அருமையான விஷயங்களைக் கண்டு பிடித்துத் தன் கச்சேரிகளில் அவற்றை அறிமுகம் செய்தும் வருகிறார்.

   நீக்கு
  4. ஓதுவார்கள் என்ற வார்த்தை எனக்கு மறந்துபோய்விட்டது. கீசா மேடம்-நன்றி. நவ கைலாசம் போர்ட் பார்த்தேன் (நவ திருப்பதி போகும்போது). என் மனைவி, கிடைக்கும் நேரத்தில் வைணவ கோவில்களுக்கு மட்டும் போகணும்னு சொல்வா. எனக்கு எந்தக் கோவிலையும் விட மனது வருவதில்லை. ரொம்ப கட்டி இழுத்துக்கிட்டு போனா, நான் நினைக்கும் அளவு திருப்தியான தரிசனத்துக்கு-பிரகாரம் சுத்துவேன், ஒவ்வொரு சன்னிதியும் சேவிப்பேன்-தூண்களில் உள்ள சிலைகளைப் பார்ப்பேன், அங்க அங்க நிற்கணும்னு நினைப்பேன், நேரம் கிடைக்காது. அதுனால இந்த முறை, இரண்டு முறை சென்றும் நெல்லையப்பர், காந்திமதி கோவில்களை முழுமையாகப் பார்த்த திருப்தி இல்லை.ஹா ஹா). அடுத்த முறை நவ கைலாசமும் சென்றுவருவேன்.

   நீக்கு
 2. புகைப்படங்களின் வழியே தரிசனம் நன்றி ஜி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 3. சிவ தரிசனத்துக்கு நன்றி. சிறப்பான படங்கள்.

  பதிலளிநீக்கு
 4. திருவையாறு வழியாகத் தான் கும்பகோணம் போறோம். ஏற்கெனவே திருவையாறு பார்த்திருந்தாலும் இங்கே வந்தப்புறமாப் போகலை. அருமையான தரிசனம். காலை வேளையில் கண்ணாரக் காண முடிந்தது. ஒரு முறை போக வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி விட்டது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஒம் நமசிவாய....தரினம் செய்தேன்..ஐயா...நன்றி

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அருமை. மிக நல்ல தரிசனம். பாடல்களைப் படிக்கும், கருத்துச் சொல்லும் வேளை இன்னும் வரலை.

  திருவையாறு என்றதும் கடவுள் நினைப்பையும் மீறி, ஆண்டவர் கடை அசோகா அல்வா (இன்னும் அங்கு சாப்பிட்டதில்லை) நினைவு எனக்கு மட்டும்தான் வருதா?

  பதிலளிநீக்கு
 7. உங்களால் எங்களுக்கும் சிறப்பான தரிசனம். நன்றி.

  பதிலளிநீக்கு