நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 17, 2026

மதுரைக்கு அரசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 31
 வியாழக்கிழமை


இன்று 
ஆவணி அனுஷம் .. 

வளர்பிறை சஷ்டி கூடிய சுபயோக தினத்தின் காலை 7:40 மணிக்குப் பிறகு கூடி வரும் சுப வேளைகளில் 

ராஜகோபுரங்களுக்கும் அம்மன் ஸ்வாமி விமானங்களுக்கு திருக்குட நன்னராட்டு..

மாமதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்குப் பெரு விழா..

நல்லோர்க்கும் நலிந்தோர்க்கும் நாடி வந்து நல்லருள் புரிபவள் அங்கயற்கண்ணி அம்மை...


அந்த அம்மையப்பன் திருவடிகளைச் சிந்தித்து
நல்லருளை வேண்டி நிற்போம்..

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாள் தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-

மங்கலம் அருள்வாள்
மதுரைக்கு அரசி
***

இன்று குறிக்கப்பட்டிருந்த பதிவு
அடுத்த வியாழனன்று வெளியாகும்..
 ...

6 கருத்துகள்:

  1. பல வருடங்களுக்கு முன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சுதந்திரமாக சென்று வருவோம்.  எந்த சன்னதிக்குள் வேண்டுமானாலும் விருப்பப்படி நுழையலாம்.  கம்பித்தடுப்புகள் கிடையாது.  வாசலில் காவல் மைய ஆர்ப்பாட்டம் கிடையாது.  இப்மீபோது இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள்..  இனி இந்நிலை பழைய நிலை போல மாறுமோ என்று ஏக்கமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      சில வருடங்களுக்கு முன்பாக மாட வீதிகளில் மட்டும் வலம் செய்தேன்...

      கோயிலுக்குள் செல்ல முடியாதபடி நெரிசல்..

      நீக்கு
  2. பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதே ஒரு சுகம்.  அழகான கோபுரங்கள்.  சித்திரை, வீதி மாசி வீதி என்று அழகான சுற்றுகள்..

    பதிலளிநீக்கு
  3. மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி..  அங்கயற்கண்ணி அன்பு மீனாட்சி,,  அண்டங்கள் யாவும் அம்மையின் ஆட்சி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..